வியாழன் 17, ஜனவரி 2019  
img
img

சாம்சுங் நோட் 7 தொலைபேசிகளின் பாவனை முற்றாகத் தடை
சனி 17 செப்டம்பர் 2016 15:37:43

img

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் தமது விமானங்களில் சாம்சுங் நோட் 7 தொலைபேசிகளின் பாவனைக்கு முற்றாகத் தடை விதித்துள்ளது. இந்த தடை இன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விதிக்கப்பட்டுள்ளதுடன், மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மின் வலுவேற்றும் போது கைபேசிகள் வெடித்துள்ளதாக 10 இற்கும் மேற்பட்ட பாவனையாளர்கள் முறைப்பாடு செய்ததை அடுத்து, சாம்சுங் நிறுவனம் தனது தற்போதைய வெளியீடான சம்சுங் நோட் 7 தொலைபேசிகளின் விற்பனையை தடைசெய்துள்ளது. எனினும் குறித்த தொலைபேசியை பயணத்தின் போது கொண்டு செல்பவர்கள் தொடர்பினை நிறுத்தி (switch off) தமது பையில் கொண்டு செல்லுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தடை பற்றி விமான நிலையங்களிலும், விமானத்தினுள்ளும் பயணிகளுக்கு அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
ராஜபக்சே எதிர்க்கட்சி தலைவராக ஏற்க  தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி எதிர்ப்பு 

தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன்

மேலும்
img
தமிழர்களின் ஆதரவை எதிர்பார்க்கும் பசில் 

பெரமுன சார்பில் உட்கட்டமைப்பு வசதிகளை

மேலும்
img
இராணுவத்தினர் மீது விக்னேஸ்வரன் பாய்ச்சல் 

மீண்டும் வந்து விட்டதாக பூச்சாண்டி காட்டி

மேலும்
img
மகிந்தவே எதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகர் அறிவிப்பு 

நீதிமன்றத்தை நாட முடியும் என்றும் சபாநாயகர்

மேலும்
img
மைத்திரிக்கு நெருக்கடி 

கொழும்பு பொது நூலகத்தில் நடத்தவுள்ள செய்தியாளர்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img