வியாழன் 15, நவம்பர் 2018  
img
img

வரலாறு படைத்தார் டத்தோ அமார் சிங்.
வியாழன் 12 அக்டோபர் 2017 11:43:49

img

மலேசிய வரலாற்றில் சீக்கியர் ஒருவர் முதல் முறையாக போலீஸ் படையின் மிக உயர்பதவியான புக்கிட் அமான் போலீஸ் தலைமையக வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறையின்  இயக்குநராக ( சி.சி.ஐ.டி. டைரக்டர்) நியமிக்கப்பட்டுள்ளார். கோலாலம்பூர் மாநகர் போலீஸ் தலைவராக நியமிக்கப்பட்ட 

17 மாதங்களிலேயே டத்தோ அமார் சிங், அந்த உயர் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார். போலீஸ் படையில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பில் 59 வயதான அமார் சிங் அப்பொறுப்புக்கு  நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டில் நடக்கும் பலதரப்பட்ட குற்றச்செயல்களை தடுப்பது, முறியடிப்பது போன்ற போலீஸ் படையின் முதன்மையான இலாகாவாக புக்கிட் அமான்  போலீஸ் தலைமையக குற்றப்புலனாய்வுப்பிரிவு அமைகிறது. போலீஸ் படையில் மிக நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் மட்டுமே அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருப்பது வழக்கமான நடைமுறையாகும். 

வரும் சனிக்கிழமை டத்தோ அமார் சிங், அந்த புதிய பொறுப்பை ஏற்கவிருக்கிறார். அமார் சிங், கோலாலம்பூர் போலீஸ் தலைவராக இருக்கும் இவ்வேளையில் அவர் ஆகக்கடைசியாக கையாண்ட மிகப்பெரிய குற்றச்செயல் சம்பவம், கோலாலம்பூர், டத்தோ கிராமாட்டில்  கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி சமயப்பள்ளி தீ வைக்கப்பட்ட சம்பவமாகும். அதில் 23  மாணவர்களும் 2 ஆசிரியர்களும் உயிரிழந்தனர். அது ஒரு விபத்து என்று  முதலில் கூறப்பட்டது. பின்னர்  அது தீவைக்கப்பட்ட சம்பவம்  என்று துரிதமாக கண்டுபிடித்து 11 க்கும் 18 க்கும் இடைப்பட்ட வயதுடைய எழுவரை கைது செய்த  பெருமை அமார் சிங்கையே சேரும்.

Read More: Malaysia Nanban News Paper on 12.10.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.

ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட

மேலும்
img
வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.

அரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள

மேலும்
img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
img
மலேசியாவிற்கும் சிங்கைக்கும்  இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.

முக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக

மேலும்
img
சரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.

ரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img