செவ்வாய் 13, நவம்பர் 2018  
img
img

பினாங்கில் மிதக்கும் கோலம்
புதன் 11 அக்டோபர் 2017 11:20:44

img

ஷங்ரிலா ஹோட்டல் குழுமத் தைச் சேர்ந்த கோல்டன் சென்ஸ் ரிசோர்ட் ஓய்வு விடுதி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மலேசியாவிலேயே மிகப்பெரிய மிதக்கும் கோலத்தை வரைந்து மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.சுமார் 120,000 கேலன் தண்ணீர் நிறைந்த அவ்வோய்வு விடுதியின் நீச்சல் குளத்தில் இந்த் கோலம் மிதக்கின்றது. கண்களை பறிக்கும் அழகிய காட்சியாக இது வருகையாளர்கள், குறிப்பாக சுற்றுப்பயணி களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

இளஞ்சிவப்பு, நிலம், ஊதா, பச்சை, ஆரஞ்சு, மஞ்சள் நிறங் களில் அழகாக வரையப்பட்டுள்ள மயில், தாமரை இலைகளுடன், ஷங்ரிலா ஹோட்டலின் முதல்  எழுத்தான ‘எஸ்’ சின்னம் கொண்ட 638.02 சதுர மீட்டர் அளவிலான இந்த கோலம் மலேசியாவில் இதுவே முதல் வகையாகும்.மொத்தம் 435 கிலோ கிராம் எடையைக் கொண்ட உலர்ந்த தேங்காய்ப்பூ (87 பைகள்), 37.9 கிலோ கிராம் எடையைக் கொண்ட ஸ்டிக்கர் பசை, 47 பல்வேறு வடிவம், அளவிலான ஸ்டாய்ரோஃபோம், 5,000 கொத்து சாமந்தி பூ வகைகள் ஆகியன இதன் உருவாக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டன.

Read More: Malysia Nanban News Paper on 11.10.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
துன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்?

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்

மேலும்
img
இந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.

துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்

மேலும்
img
கடுமையான மழை, வெள்ளம் மார்ச் மாதம் வரை நீடிக்கும்.

பொது மக்களுக்கு எச்சரிக்கை.

மேலும்
img
பி40 பிரிவைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் வாங்குவதற்கு சலுகை விலை அட்டை.

உதவித் தொகையின் அடிப்படையில் ரோன் 95

மேலும்
img
பெர்சத்துவில் முன்னாள் அம்னோ உறுப்பினர்கள் ஆதிக்கமா?

துன் மகாதீர் விளக்கம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img