வியாழன் 17, ஜனவரி 2019  
img
img

கமல் கட்சி ஆரம்பித்தால் நிதி வழங்கக் காத்திருக்கும் முக்கிய புள்ளிகள்.
செவ்வாய் 10 அக்டோபர் 2017 12:46:40

img

நடிகர் கமல் ஹாசன் நடிப்புத் துறையில் இருந்து தற்போது அரசியலில் களம் இறங்க தீவிர ஆலோசனையில் இருக்கும் நிலையில், அரசியல் கட்சி தொடங்க பல முக்கிய புள்ளிகள் நிதி வழங்க முன்வந்துள்ளதாக  சினிமா உலகின் முக்கிய பிரமுகர் தெரிவித் துள்ளார்.நடிகர் கமல் அரசியல் கட்சி துவங்க போகிறார்என்ற செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இது ஒருபுறம் இருக்க, அரசியல் கட்சி துவங்க பணத்திற்கு கமல் என்ன செய்வார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.இந்த கேள்வி குறித்து, சினிமா உலகின் முக்கிய பிரமுகர் ஒருவர் கூறியதாவது:-

கமல் எப்பவும் நேர்மையாக நடக்கவேண்டும் என்று நினைப்பவர். அவர் வாங்கும் சம்பளத்திற்கு ஏற்ற வரியை சரியாக கட்டிவிடுவார். கருப்பு பணமாக வாங்க மாட்டார். கமல் இப்போது கடுமையான நிதி பிரச்சினையில்தான் இருக்கிறார். தனிக்கட்சி ஆரம்பித்தால் ஏற்படும் பண நெருக்கடிகள் பற்றி கமல் அறிவார்.

கமல் கட்சி தொடங்கினால், மூன்றெழுத்து பெயர் கொண்ட கிறிஸ்டின் தொழிலதிபர் ஒருவர் உதவுவதாக கூறியுள்ளார்.தொழிலில் நேர்மையாக இருக்கும் அந்த நபரை கமலுக்கு பிடித்துவிட்டது. அதுமட்டும் இல்லாமல், இன்னும் சில தொழில் அதிபர்கள் அட்வான்ஸ் தொகையுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மிக விரைவில் கமல் நல்ல முடிவை எடுப்பார் என நாங்கள் நம்புகிறோம் என்று அந்த பிரமுகர் கூறியுள்ளார்.

Read More: Malaysia Nanban News Paper on 10.10.2017

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
புருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு

இன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்

மேலும்
img
குற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்

மேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை

மேலும்
img
கஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்

இக்கிராமத்தை சேர்ந்தவரும் புகழ்பெற்ற

மேலும்
img
திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு

எஸ்.காமராஜ் திருவாரூர் மாவட்டத்தின்,

மேலும்
img
திருவாரூர் தொகுதிக்கு யார் வேட்பாளர்?' - தினகரனின் `அனுதாப' சென்டிமென்ட்

ஆர்.கே.நகர் வெற்றியைத் தொடர்ந்து திருவாரூரிலும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img