வியாழன் 15, நவம்பர் 2018  
img
img

கணவர் தற்கொலை, மனைவி  பிள்ளைகள் படுகொலை.
சனி 07 அக்டோபர் 2017 11:59:32

img

கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து கிடந்த இரு பிள்ளைகள், படுக்கையில் உயிரற்ற உடலாய் தாயார், தூக்கில் தொங்கிய தந்தை. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்த நால்வரின் கொடூரமான மரணம் ஜொகூர் முத்தியாரா ரினி குடி யிருப்புப் பகுதி வாழ் மக்களையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இங்குள்ள ஓர் ஆடம்பர குடியிருப்புப் பகுதியான முத்தியாரா ரீனி, ரீனி ரெசிடன்ஸ், ஜாலான் உத்தாமா 41-இல் உள்ள தங்கள் வீட்டில் நேற்று அந்த நால்வரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டன. இவர்களின் மரணத்திற்கு பின்னணி கடன் தொல்லை காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 

நேற்று, பிற்பகல் 2.30 மணிக்கு நிகழ்ந்த இச்சம்பவத்தில் எல்.பூபாலன் ரத்னம் (52) தனது வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள ஓர் அறையில் தூக்கில் தொங்க காணப்பட்டார். அவரின் மனைவி பி.ஜெயா பிச்சைமுத்து (46) வீட்டின் வரவேற்பறைக்கு அருகில் உள்ள கட்டிலில் இறந்து கிடந்தார். அதே சமயம், அவர்களின் 9 வயது மகள் கிருஷ்ணா பிரத்தீனா, 14 வயது மகன் ஷர்வீன் ஆகிய இருவரும் கழுத்து நெரிக்கப்பட்டு  மேல் மாடியில் உள்ள சாமி அறையில் இறந்து கிடந்தனர் என்று இஸ்கந்தார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர், துணை ஆணையர் நூர் ஹஷிம் முகமட் தெரிவித்தார்.

மரணமடைந்த பூபாலன் மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும், அவர்களின் மரணத்தை அண்டை வீட்டார் அறிந்து போலீசுக்கு தகவல் கொடுத்ததாகவும் அவர் விவரித்தார்.

Read More: Nanban News Paper on 7.10.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
img
1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.

ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட

மேலும்
img
வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.

அரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள

மேலும்
img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img