வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

ஏழை மக்களின் வயிற்றில் அடித்த அமைச்சின் அதிகாரிகளுக்கு வலைவீச்சு.
வியாழன் 05 அக்டோபர் 2017 14:32:03

img

ஏழை எளிய மக்கள், மாண வர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான மக்களுக்கு உதவும் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட   கோடிக்கணக்கான பணத்தை சுருட்டி தங்கள் பாக்கெட்டில் போட்டுக்கொண்ட ஓர் அமைச் சின் மூத்த அதிகாரிகளை ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) வலைவீசி தேடி வருகிறது.

அந்த ஏழை மக்களின் நல்வாழ்விற்கான திட்டங்களை மேற்கொள்ள வேண்டிய 10 தனியார் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து சுமார் 10 கோடி வெள்ளியை அவர்கள் தங்கள் பாக்கெட்டிற்குள் திணித்துக் கொண்ட அதிர்ச்சித் தகவல் அம்பலமாகியுள்ளது. 

சம்பந்தப்பட்ட அந்த திட்டங்கள் அனைத்துமே ஏழைகளுக்கு உதவுவதற்காக வரையப்பட்டவை. அவற்றின் மதிப்பு வெ.50 கோடி முதல் வெ.100 கோடி வரைக்குமாகும். அதிலிருந்து மிகப்பெரிய அளவில் பணம் வெளியாகியுள்ளது என்று எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அணுக்கமான ஒரு வட்டாரம் தெரிவித்த தாக தெ நியூ ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் கூறுகிறது.

இந்த அநீதிக்கு காரணமானவர்களை கடந்த ஆண்டு முதலாக எம்.ஏ.சி.சி. கண்காணித்து வருகிறது. எந்த ஒரு தடயத்தையும் விட்டுச்செல்லாமல் மிகவும் கவனமாக அவர்கள் செயல்பட்டிருப்பதால் சம்பந்தப்பட்ட அந்த அதிகாரிகளையும் நிறுவன இயக்குநர்களையும் கைது செய்வதற்கு எம்.ஏ.சி.சி. போது மான ஆதாரத்தை கண்டுபிடிக்கவில்லை என்று அவ்வட்டாரம் தெரிவித்தது.

Read More: Malaysia Nanban New Paper on 5.10.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
img
முடிவில் மாற்றமில்லை. தண்ணீர் விலை அதிகரிக்கும்.- அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்

தண்ணீர் கட்டண அதிகரிப்புக்கு பெரும்பாலான

மேலும்
img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img