வியாழன் 15, நவம்பர் 2018  
img
img

மஇகா வேட்பாளர்களை முடிவு செய்யும் அதிகாரம் கைாழுவும் மஇகா.
புதன் 04 அக்டோபர் 2017 14:07:24

img

நாட்டின் 14-ஆவது பொதுத்தேர்தலில் ம.இ.கா. சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களை அம்னோ தேர்வுசெய்யும் அளவிற்கு அதன் கைப்பா வையாக மஇகா மாறிவிடுமோ என்ற அச்சம் மூத்தத் தலைவர்கள் மத்தியில் தற்போது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

71 வயது நிரம்பிய மூத்த அரசியல் கட்சிகளில் ஒன்றாக இந்நாட்டு இந்தியர்களை பிரதிநிதித்து வரும் மஇகா, கடந்த காலங்களைப் போல் பொதுத் தேர்தலில் போட்டியிடக்கூடிய தனது வேட்பாளர்களை தேர்வு செய்யும் அதிகாரத்தை இழக்கும் நிலையில் உள்ளதா? என்பது அண்மைய காலமாக நடந்து வரும் சில சம்பவங்கள் அத்தகைய அச்சத்தை ஏற்படுத்துவதாக மூத்தத் தலைவர்கள் கூறுகின்றனர்.

அம்னோவின் ஆதரவு இருந்தால் போதும்,  தேர்தலில் தாங்கள் போட்டியிடுவதற்குரிய வாய்ப்பு தானாக கிட்டிவிடும் என்ற நோக்கில் அம்னோ தொகுதித் தலைவர்களின் ஆதரவை பெறுவதிலும் அவர்களுக்கு மானியங்களை வாரிக்கொடுப்பதிலும் சில மஇகா தலைவர்கள் காட்டி வரும் அக்க றையும் ஆர்வ மும்  கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்துவதாக அந்த மூத்த தலைவர்கள் கவலைத் தெரிவித்தனர்.

இந்திய சமுதாயத்திற்கு  பகிரப்பட வேண்டிய  மானியங்கள்,  அம்னோ தலைவர்களுக்கு செலவிடுவதிலும் அவர்களின் ஆசியை பெறுவதிலும் சில தலைவர்கள் அதிக முனைப்பு காட்டி வருகின்றனர். மஇகா சார்பில் இந்த வேட்பாளரை நிறுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற  ஒரு தவ றான மாயையை தற்போது தொகுதி அம்னோ மாநாட்டில் தீர்மானம் வழி ஏற்படுத்தப்படுகிறது.

Read More: Malyasia Nanabn News Paper on 4.10.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
img
1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.

ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட

மேலும்
img
வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.

அரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள

மேலும்
img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img