வெள்ளி 16, நவம்பர் 2018  
img
img

இந்திய கொடை நெஞ்சருக்கு அமெரிக்கா விருது
சனி 30 செப்டம்பர் 2017 16:21:14

img

தனது 30 ஆண்டு சேவைக் கால சம்பளத்தையும் பத்து லட்சம் ரூபாய் ஓய்வூதியத்தையும் உதவி தேவைப்படுவோருக்கு வழங்கியதுடன்  அச்சேவையை இன்னும் தொடர்ந்து செய்து வரும் பாலம் கல்யாண சுந்தரம் (வயது 76) எனும் இந்தியரை அமெரிக்க அரசாங்கம் மேன் ஆப் தி மில்லனியம் எனும் விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

அவ்விருதின் மூலம் அவர் பெற்ற முப்பது கோடி ரூபாயையும் அவர் உதவி தேவைப்படுவோருக்கே வழங்கியுள்ளார். கல்யாண சுந்தரம் முப்பதாண்டுகள் அரசுத் துறையில் நூலகப் பொறுப்பாளராகப் பணியாற்றியுள்ளார். ஈட்டிய பொருள் அனைத்தையும் உதவி தேவைப்படுவோருக்கு வழங்கிய அவர் தன் சொந்த செலவுகளை சமாளிக்க ஓர் உணவகத்தில் உணவு பரிமாறும் வேலை செய்து வருகிறார்.

தன் வாழ்க்கையை சமூக சேவைக்கு அர்ப்பணித்துக் கொண்டுள்ள அந்த உயர்ந்த மனிதர் திருமணம் செய்து கொள்ளவில்லை.மற்றவர்களுக்கு உதவும் கல்யாண சுந்தரத்தின் ஆர்வத்தைக் கண்டு நெகிழ்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரை தன் தந்தையாக தத்தெடுத்துக் கொண்டுள்ளார். கல்யாண சுந்த ரத்தின் இளமைக்காலம் கருணையின் வேறுபட்டதோர் உலகிற்கு மக்களை இட்டுச் செல்லும். இளமைக் காலம் அவருக்கு போராட்டமானதாகவே இருந்துள்ளது.

Read More: Malaysia Nanban News Paper on 30.9.2017

 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
7 பேரா? எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,

உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்

மேலும்
img
நான் சென்சார் போர்டு கிடையாது’- அமைச்சர் ஜெயக்குமார்

இதே ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள்

மேலும்
img
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் முன்பு அடிதடி - நாற்காலிகள் பறந்தன!

கூட்டத்தை ஆத்தூர் ஒன்றிய அண்ணா

மேலும்
img
நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு

திருவாரூரில் அதிமுக செயல்வீரர்கள்

மேலும்
img
சர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்

படத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img