செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

181 நாட்களில் 723 பேரைக் காணவில்லை
புதன் 27 செப்டம்பர் 2017 11:56:30

img

நாட்டில் நாள் ஒன்றுக்கு சராசரி நான்கு பிள்ளைகள் காணாமல் போகின்றனர். இவ் வாண்டு ஜனவரி மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை மட்டும், இந்த 181 நாட்களில் 723 பிள்ளைகள் காணாமல் போனதாக புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் 427 பேர் என பாதிக்கும் மேற்பட்டோர் சுதந்திர பறவைகளாக வீட்டிலிருந்து வெளியேறியவர்கள் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.

அவர்களில் பெரும்பாலான வர்கள் பதின்ம வயது பெண்கள் என்று அரச மலேசிய போலீஸ் படையின் உதவி ஆணையர் ஓங் சின் லான் கூறினார். இப்பெண்கள் அனைவரும் 13 முதல் 15 வயதுக்கு உட்பட்ட மிகவும் அபாயகரமான வயதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

போலீஸ் துணை சூப்பரிண்டெண்டன் இ.சரோஜாவும் கலந்துகொண்ட  இணை சந்திப்பு ஒன்றில் அவர் இவ் விவரங்களை வெளியிட்டார் என தி ஸ்டார் நாளேடு தெரிவித்தது. இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் அப்பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் அபாயக் கட்டத்தைச் சேர்ந்தவர்கள். மனோவியல் ரீதியிலான பாதிப்பு அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக தங்கள் வாழ்வில் சுதந்திரத்தை தேடி இவர்கள் தங்கள் குடும்பத்தை புறக்கணித்து விட்டு வெளியே வருகின்றனர். பெரும்பாலும், சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களுக்கு கிடைக்கும் சில நண்பர்களே இதற்கு காரணமா கின்றனர் என்று ஏசிபி ஓங் கூறினார்.

இந்த சிறுமிகள் இடைநிலைப் பள்ளிக்கு போகும்போது அவர்களின் குணநலன்கள் மாற்றம் காண்கின்றன. உளவியல் ரீதியில் அவர்களுக்கு ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தால் உணர்ச்சிகள் வெளிப்பட தொடங்குகின்றன.

அந்த வயதில், தங்களுக் கென்று ஒரு சொந்த அடையாளம் வேண்டும், சொந்த அபிப்பிராயம் வேண்டும் என்று அவர்கள் நினைப்பார்கள். எப்போதும் தனி மையில் இருக்கவே விரும்புவார்  என்றார் அவர்.

இவ்வாண்டில் முதல் பாதியில் நிகழ்ந்த சம்பவங்களில் 447 பேர் பெண்களும், 276 பேர் ஆண்க ளுமாவர். அது மட்டுமின்றி, அந்த மொத்த எண்ணிக்கையில் 345 பேர் என கண்டுபிடிக்கப்பட் டுள்ளனர். சுமார் 378 பேர் இன்னும் காணாமல் போனவர் பட்டியலில் தான் உள்ளனர்.

Read More: MALAYSIA NANBAN NEWS PAPER on 27.9.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளா?

பதில் சொல்லுமா நம்பிக்கைக் கூட்டணி.

மேலும்
img
மக்கள் உடனடியாக மாற்றங்களைக் காண விரும்புகிறார்கள்.

எங்களுக்கு கால அவகாசம் தேவை.

மேலும்
img
சிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

சமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்

மேலும்
img
மார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.

இறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை

மேலும்
img
நீதித்துறையில் தவறுகள்? அரசாங்கம் ஆராயும்.

அரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img