திங்கள் 22, ஏப்ரல் 2019  
img
img

ரா. சிவராசாவின் அரசியல் செயலாளர் மற்றும் இதர 2 உதவியாளர்கள் கைது 
சனி 23 செப்டம்பர் 2017 13:27:27

img

பி.கே.ஆர். கட்சியின் முக்கியத் தலைவரும் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினருமான ரா. சிவராசாவின் அரசியல் செயலாளரான அவரின் சகோதரரின் மகன் மற்றும் இதர இரண்டு உதவியாளர்கள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் கைது செய்யப்பட்டு இருப்பது, மக்களின் பிரதிநிதி என்று கூறி, போராடி வரும் அரசியல் தலைவர்களின் நேர்மையையும் நம்பகத்தன்மையையும் கேள்விக்குறியாக்கி வருகிறது.

மனித உரிமை போராட்டவாதி என்று தன்னை எப்போதுமே முன்னிலைப்படுத்திக்கொண்டு இருக்கும் சிவராசாவின் மூன்று உதவியாளர்கள், குடி நுழைவுத்துறை  தொடர்பான விஷயங்களைத் தீர்ப்பதற்கு 55 ஆயிரம் வெள்ளி  லஞ்சம் கேட்டதாக புகாரின் அடிப்படையில் நேற்று முன்தினம் கோலாலம்பூரில் மலேசிய ஊழல் தடுப்பு  ( எம்.ஏ.சி.சி.) ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் ஒருவர், சிவராசாவின்  45 வயதான அரசியல் செயலாளர். இவர் சிவராசாவின் அண்ணன் மகன் என்றும் கூறப்படுகிறது. நவீன் குலராசா என்ற தனது  அந்த அரசியல் செயலாளர் மற்றும் தனது தனிப்பட்ட உதவியாளர் ஜோசுவா கலைச்செல்வன் மற்றும் அலுவலக  அதிகாரி நிக்கோல் கோம்  ஆகியோர் அத்தகைய குற்றத்தை புரிந்து இருக்க மாட்டார்கள் என்று சிவராசா நேற்று மறுத்துள்ளார்.

Read More: MALAYSIA NANBAN NEWSPAPER on 23.9.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
முதல் முறையாக தலைமை நீதிபதியாக ஒரு பெண்

ஒருவர் தெங்கு மைமூன். 2006 ஆம்

மேலும்
img
அந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.

தலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று

மேலும்
img
2,200 இடங்கள், 700 ஆகக் குறைப்பு: இந்தியர்களின் வாய்ப்பைக் பறித்தது ஏன்?

700 இடங்களை மட்டுமே தற்போது வழங்கியிருப்பது

மேலும்
img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img