புதன் 14, நவம்பர் 2018  
img
img

ஆப்கானிஸ்தானில் அரசியல் கைதிகள் அன்வாரைவிட நன்றாக நடத்தப்படுகிறார்கள்
புதன் 14 செப்டம்பர் 2016 14:07:50

img

மலேசியாவைவிட ஆப்கானிஸ்தானில் அரசியல் கைதிகளைச் சந்திப்பது எளிது என்கிறார் அமெரிக்க வழக்குரைஞர் கிம்பர்லி மோட்லி. அன்வார் இப்ராகிமின் வழக்குரைஞர் குழுவில் ஒருவராக புதிதாக இணைந்துள்ள மோட்லி, ஆப்கானிஸ்தானில் தாம் தம் கட்சிக்காரரைச் சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்காது என்றார். “மலேசியா அழகான நாடு. நான் அன்வாரைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது என்பதைத் தவிர இங்குள்ள மக்கள் பரிவுடன் நடந்து கொள்கிறார்கள். “ஆனால், ஆப்கானிஸ்தானில் சிரமம் இருந்ததில்லை. எடுத்த எடுப்பிலேயே என் கட்சிக்காரரைச் சந்தித்திருக்க முடியும்”, என்றாரவர். ஆப்கானிஸ்தானில் சில வேளைகளில் அரசியல் கைதிகள் ஊடகங்களைச் சந்திப்பதற்கும் அனுமதி உண்டு. இங்கும் ஊடகங்கள் அன்வாருடன் பேச முடிகிறது. ஆனால், அன்வார் நீதிமன்றத்துக்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படும்போது செய்தியாளர்கள் சத்தமிட்டுத்தான் அவருடன் பேச முடிகிறது என்றாரவர். மோட்லி அமெரிக்காவிலும் ஆப்கானிஸ்தானிலும் வழக்குரைஞராக பணியாற்றியுள்ளார். அவர் அன்வாரின் வழக்குரைஞர் குழுவில் ஒருவராக கடந்த புதன்கிழமை நியமிக்கப்பட்டார். நேற்று மலேசியா வந்திறங்கியதும் அவர் அன்வாரைச் சந்திக்க விரும்பினார். ஆனால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அனுமதி மறுக்கப்பட்டதற்கு உள்துறை அமைச்சிடம் விளக்கம் பெற முயன்றார். முடியவில்லை.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
img
மலேசியாவிற்கும் சிங்கைக்கும்  இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.

முக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக

மேலும்
img
சரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.

ரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.

மேலும்
img
துன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்?

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்

மேலும்
img
இந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.

துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img