செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

கெட்கோ விவகாரத்தில் மஇகா தலைவர்கள் வாயை மூடிக்கொண்டு இருப்பதா?
செவ்வாய் 01 ஆகஸ்ட் 2017 12:21:24

img

சிரம்பான், நெகிரி செம்பிலான், பகாவ் கெட்கோ நிலக்குடியேற்றக்காரர்கள் விவகாரத்தில் எதுவுமே நடவாதது போல மஇகா தலைவர்கள் வாயை மூடிக் கொண்டு சும்மா இருப்பதா? என்று மஇகா உதவித் தலைவரும் மேலவைத் தலைவருமான டத்தோஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் ஆவேசமாக பாய்ந்துள்ளார். கெட்கோ ஒரு தனியார் நிர்வாகம். நஷ்டத்தில் போய்விட்டது. ஆனால், இன்றைக்கு அது பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இவ்விவகாரத்தில் நாம் வாயை திறக்காவிட்டால் மஇகாவைதான் மக்கள் குறைகூறுவார்கள் என்று விக்னேஸ்வரன் எச்சரித்தார். நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் போர்ட்டிக்சன் குளோரி பீச் தங்கும் விடுதியில் மஇகா தெலுக்கெமாங் தொகுதியின் 25 ஆவது மாநாட்டை தொடக்கி வைத்தபோது விக்னேஸ்வரன் மிக ஆவேசமாக பேசினார். இந்த கெட்கோ நிலக்குடியேற்றக்காரர்கள் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நமது இந்தியர்கள். காய்க்கின்ற மரம்தான் கல்லடி படும் என்பார்கள், அதற்காக இந்த விவகாரத்தில் நாம் சும்மா இருந்து விடக்கூடாது. மஇகாவினால் மட்டும் தான் பிரச்சினைகளை தீர்க்க முடியும். வேறு யாராலும் பிரச்சினையை தீர்க்க முடியாது என்று அவர்களுக்கும் தெரியும் என்றார் விக்னேஸ்வரன். இதனிடையே நேற்று முன்தினம் நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக்கூட்டத்தில் இந்த கெட்கோ நிலக்குடியேற்றக்காரர்கள் விவகாரம் பூதாகரமாக வெடித்ததாக தெரிகிறது. கூட்டத்தில் விக்னேஸ்வரன் அது குறித்து மிக காரசாரமாக விவாதித்ததுடன் நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மாணிக்கத்தின் மீது பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது. கெட்கோ நிலக்குடியேற்றக்காரர்கள் விவகாரம் இந்திய சமுதாயம் சம்பந்தபட்ட ஒரு விவகாரமாகும். இந்த விவகாரத்தில் மஇகா எதற்காக மௌனம் காத்து வருகிறது என்றும் விக்னேஸ்வரன் காரசாரமாக கேள்வி எழுப்பினார். நெகிரி மாநிலத்தில் நமக்கென்று ஓர் ஆட்சிக்குழு உறுப்பினர் மாணிக்கம் இருக்கிறார். அவரிடம் கேட்கும் போது எனக்கு தெரியாது என்று கூறுகிறார். இந்த நிலக்குடியேற்றக்காரர்கள் விவகாரம் மாணிக்கத்திற்கு எப்படி தெரியாமல் போனது. இவ்விவகாரத்தில் இதுவரையில் மாணிக்கம் என்ன செய் துள்ளார் என்று விக்னேஸ்வரன் பாய்ந்தார். இந்த விவகாரத்தில் ஒரு பார்வையாளரை போல மஇகா வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தப் பிரச்சினையை மஇகா கவனிக்காமல் விட்டதனால்தான் மற்றவர்கள் இந்த விவகாரத்தை முன்னெடுக்க வேண்டியதாகிவிட்டது. இந்த விவகாரத்தில் மாணிக்கமும் மஇகா தலைமைத்துவமும் ஒரு போதும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. தற்போது அந்த குடியேற்றக்காரர்களின் நிலப்பகுதியில் ரப்பர் மரங்கள் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. வழக்கு நீதிமன்ற நிலுவையில் இருக்கிறது. அதுவரையில் அங்கு மரங்கள் வெட்டி எடுக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதற்கு கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோ சக்திவேல், நெகிரி செம்பிலான் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதி வழக்கு விசாரணை முடியும் வரையில் மரங்கள் வெட்டப்பட்டு ஏற்றப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ள வேண்டும் என்று விக்னேஸ்வரன் அறிவுறுத்தியதாக தெரிகிறது. கெட்கோ நில விவகாரத்தில் தங்கள் உரிமை பறிபோவதாகவும் தங்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டு இருப்பதை போல 8 ஏக்கர் நிலம் வழங்கப்பட வில்லை என்றும் தனியார் நிறுவனத்திற்கு எதிராக தாங்கள் தொடுத்துள்ள வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது அந்த தனியார் நிறுவனம் எவ்வாறு ரப்பர் மரங்களை வெட்டி லோரியில் ஏற்றிக்கொண்டு செல்ல முடியும் என்று நிலக்குடியேற்றக்காரர்கள் போராடி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு அவர்கள் இரு வெவ்வேறு சம்பவங்களில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்கள் நிலப்பகுதியிலிருந்து மரங்கள் வெட்டி ஏற்றப்பட்ட லோரிகளை வழி மறித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கம் விட்டுக்கொடுக்கும் போக்கை கடைப்பிடிக்காது என்றும் வழிமறித்து போராடும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்டம் பாயும் என்றும் கடந்த வெள்ளிக்கிழமை எச்சரித்து இருந்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
நேர்முகத் தேர்வில் தோல்வி கண்டுள்ள 10 ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்கிடம்

அவர்களின் இந்நிலையைக் கண்டு பெற்றோர்கள்

மேலும்
img
டாக்டர் மகாதீருக்கு எதிராக சதியா? இதெல்லாம் பாஸின் திட்டமிட்ட பொய்

இம்மாதிரியான கூற்றுகள் பொய்யானவை

மேலும்
img
காட்சிப்பொருளாகவே கிடக்கும் சங்லூன் தமிழ்ப்பள்ளி

சங்லூன் தமிழ்ப்பள்ளியும் இடம்பெ ற்றுள்ளது

மேலும்
img
வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளா?

பதில் சொல்லுமா நம்பிக்கைக் கூட்டணி.

மேலும்
img
மக்கள் உடனடியாக மாற்றங்களைக் காண விரும்புகிறார்கள்.

எங்களுக்கு கால அவகாசம் தேவை.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img