செவ்வாய் 18, ஜூன் 2019  
img
img

போலி சாமியாரின் வக்கிர புத்தி
ஞாயிறு 30 ஜூலை 2017 10:07:07

img

(காளிதாசன் தியாகராஜன் - ஆர்.குணா) கோலாலம்பூர், தொட்டதற்கெல்லாம் சாமி பார்க்க வேண்டும் என கூறிக்கொண்டு செயல்படுபவர்களும் அதனால் பல பாதிப்புகளை எதிர்கொள்பவர்களின் எண்ணிக்கை யும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக உள்ளது.நமது சமயம் நமக்கு வழங்கிய முறையான வழிபாடுகளை மீறி செயல்படுவதினால்தான் இது போன்ற பிரச்சினைகள் எழுகின்றன. காவல் தெய்வ வழிபாடு என கூறிக் கொண்டு சிலர் செய்யும் தவறான செயல்கள்தான் ஒட்டு மொத்த காவல் தெய்வ வழிபாடுகளுக்கு பாதகமாக விளைகின்றது. தன் இரு மகள்களுக்கும் கழிப்பு கழிப்பதாகக் கூறி போலி சாமியாரை சென்று பார்த்த தாயாருக்கு ஏமாற்றமும் அதிர்ச்சியும்தான் ஏற்பட்டுள்ளது.கெர்டாவ் கம்போங் பாரு சீனா என்னும் இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த இடம் தெமர்லோ மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு வசித்து வரும் தேவி கிருஷ்ணன் (வயது 54) 29 வயதுடைய தன் மூத்த மகளுக்கு வரம் கிடைக்காததாலும், 23 வயதுடைய இரண்டாவது மக ளுக்கு தீராத முதுகு வலியினாலும் பீ யோங் தோட்டத்திலுள்ள அய்யா ஆலயத்தின் பூசாரியை சென்று கண்டுள்ளார். இந்த விவகாரத்தில் இரு பெண் களுக்கும் கழிப்பு கழிக்க வேண்டுமென அய்யாவின் பெயரை சொல்லிக் கொண்டு வக்கிர புத்தியுடன் செயல்பட்ட ஆசாமி கூறியுள்ளார். தன் பிள்ளைகளுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற அற்ப ஆசையில் தாயாரும் ஆசாமியின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டுள்ளார். கழிப்பு கழிக்கும் நாளன்று அம்மாதின் மூத்த மகளின் கண்ணைக் கட்டி ஆலயத்தின் அருகிலுள்ள அறைக்குள் அந்த போலி சாமியார் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அப்பெண்ணை தனியாக அந்த அறையில் விட்டு விட்டு வெளியே வந்துள்ளார். அதன் பின்னர் அறைக்கு வெளியே இருந்தவாறு அவர் கூறியது போல் அப்பெண்ணும் தன் உடலிலிருந்த ஆடைகளை அகற்றியுள்ளார். ஒவ்வொரு முறையும் அப்பெண் தன் தாயாரை உடன் இருக்குமாறு கூறியதும் காணொளியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நிகழ்ந்த ஒரு வாரத்திற்கு பின்னர் சம்பந்தப்பட்ட பெண்ணின் தங்கைக்கும் இதேபோன்ற கழிப்பு கழித்தல் சாங்கியம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சகோதரிகள் இருவருக்கும் கழிப்பு கழித்தல் சாங்கியம் நடந்த அறைக்குள் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அங்கு நிகழ்ந்த அனைத்து காட்சிகளும் அந்த கேமராவில் பதிவாகியுள்ளன. இந்த சம்பவம் நிகழ்ந்த ஒரு வருடம் கழித்து சிங்கப்பூரிலுள்ள உறவினர் ஒருவர் இரு பெண்களின் நிர்வாண காணொ ளியை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த விஷயத்தை அறிந்த அப்பெண்களின் தாயார் தன் மகள்களின் வாழ்க்கையை தாமே அழித்து விட்டதாக வேதனைப் பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் அச்சகோதரிகளின் மாமா போலீசில் புகார் செய்துள்ளார். சம்பந்தப்பட்ட போலி சாமியாரை போலீஸ் கைது செய்து விசாரணை செய்துள்ளது. தனிப்பட்ட காரணத்தினால்தான் இச்செயலை செய்ததாகவும் அந்த காணொளியை தாம் சமூக வலைத்தளத்தில் பகிரவில்லை என்றும் அந்நபர் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். போலி சாமியார் தற்போது ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சியை சந்தித்துள்ளனர். இந்த விவகாரத்தில் இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த கட்சி ஒன்று சம்பந்தப்பட்ட போலி சாமியாருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றது. வக்கிர புத்தியுடன் செயல்பட்ட அந்த ஆசாமி கெர்டாவிலுள்ள ஒரு கிளையின் அரசியல் கட்சியின் துணைத் தலைவர் என்ற தகவலும் கசிந்துள்ளது. கட்சியின் உறுப்பினர் என்பதால் சம்பந்தப்பட்ட ஆசாமிக்கு ஆமாம் சாமி போடாமல் உண்மை நிலவரத்தை அறிந்து சமுதாய உணர்வுடன் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் செயல்பட வேண்டுமென நேற்று காலை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் தலைநகரில் நிகழ்ந்த பத்திரிகையாளர் சந் திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட காமாட்சி தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ஆபாசக் காணொளி விசாரணை. எம்சிஎம்சி முழுமையாக ஒத்துழைக்கும்

இந்நிலையில் அந்த ஒத்துழைப்பு எவ்வடிவிலானது

மேலும்
img
ஓரின உறவு ஆபாசக் காணொளி விவகாரம். மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல்

தனக்கும் பங்குள்ளது என்பதை பகிரங்கமாக

மேலும்
img
நாட்டில் சாக்கடை அரசியல் நீடித்தால், அடுத்து நான்கூட பாதிப்படையலாம்

அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கிய ஆபாசக் காணொளிகள்

மேலும்
img
நானும் அஸ்மினும் 4 முறை ஓரின உறவில் ஈடுபட்டிருக்கிறோம்.

அந்த காணொளி பதிவுகள் ஆன்லைனில் கசிந்து

மேலும்
img
விடுமுறையில் செல்ல அனுமதிக்கப்படாமல் பள்ளிக்கு காவலாளியாக அமர்த்தப்பட்ட ஆசிரியர்கள்

அண்மைய மத்திய ஆண்டு விடுமுறையின்போது சில ஆசிரியர்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img