புதன் 21, நவம்பர் 2018  
img
img

காவிரி விவகாரம்..! தொடரும் வன்முறைகள்!
புதன் 14 செப்டம்பர் 2016 13:49:41

img

காவிரி விவகாரத்தில் தமிழக, கர்நாடக மக்கள் அமைதி காக்க வேண்டும் இந்தியப் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கர்நாடகாவில் போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது. தற்போது, இந்த போராட்டங்கள் வன்முறையாக வெடித்துள்ள நிலையில் பெங்களூருவில் நேற்று முன்தினம் தமிழக இளைஞர் ஒருவர் கன்னட அமைப்பினரால் கடுமையாக தாக்கப்பட்டார். இந்நிலையில் பதிலுக்கு இராமேஸ்வரத்தில் கன்னட பிரமுகர் ஒருவர் தாக்கப்பட்டார். இதன் உச்சகட்டமாக பெங்களூருவில் நேற்று தமிழகத்துக்கு சொந்தமான தனியார் பேருந்துகள் 50க்கு மேற்பட்டவை தீ வைத்து எரிக்கப்பட்டது. இச்சம்பவத்தால் கர்நாடகாவில் இருக்கும் தமிழர்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். இதேவேளை வன்முறை பரவாமல் இருக்க தமிழக- கர்நாடக எல்லையில் அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, காவிரி விவகாரத்தில் தமிழக, கர்நாடக மக்கள் அமைதி காக்க வேண்டும். கர்நாடகாவில் நடைபெறும் வன்முறை சம்பவங்களுக்கு கவலை தெரிவித்துள்ளார். பொறுப்புகளை மனதில் வைத்துக் கொண்டு இருமாநில மக்களும் செயல்பட வேண்டும் என்றும், இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும், நாட்டின் நலனே முக்கியம் என்பதை மக்கள் உணர வேண்டும் என்றும் இந்தியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
காஷ்மீரின் புதிய முதல்வராகிறார் புகாரி!

ஜனநாயக கட்சி கூட்டணி வைத்து ஆட்சி

மேலும்
img
தோல்வி பயத்தால் மோடியின் ஸ்டார் அந்தஸ்தை பறித்தது பாஜக!

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர்

மேலும்
img
ஒரு மாத சம்பளத்தை கலெக்டரிடம் வழங்குவேன்! தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. அறிவிப்பு!

நிவாரணப் பணிகள் குறித்த நடவடிக்கைகளுக்காக,

மேலும்
img
அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

மேலும்
img
கஜா புயல் சேதங்களை மதிப்பிட்டு காலதாமதம் இன்றி இழப்பீடு வழங்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

பேரிடர் மேலாண்மைக் குழுவினர் இரவு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img