புதன் 21, நவம்பர் 2018  
img
img

பாலர் பள்ளி மாணவியை கற்பழித்த 7 வயது சிறுவன்
வெள்ளி 28 ஜூலை 2017 12:35:33

img

மலாக்கா பாலர் பள்ளி மாணவியை கற்பழித்ததாக ஏழு வயது பையனுக்கு எதிராக போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது. இரண்டு சிறுவர்கள் சம்பந்தப்பட்ட இந்த வழக்கை போலீசார் மிகவும் கவனமுடனும் சாதூரியமாகவும் கையாள வேண்டும் என்று மலாக்கா சிஐடி மூத்த தலைமைத் துணை ஆணையர் கமாலு டின் காசிம் அறிவுறுத்தியுள்ளார். போலீசார், பொம்மைகளை முன்மாதிரியாக பயன்படுத்தி நடந்த சம்பவத்தைப் பாதிக்கப் பட்ட அந்தச் சிறுமி மற்றும் அந்த பையனிடம் விசாரணை செய்தனர். ஜுலை 20ஆம் தேதி அந்த சிறுமியின் தாயார் இந்தப் புகாரை செய்ததாகவும் இந்த விசாரணை 90 விழுக்காடு பூர்த்தி அடைந்து விட்டதாகவும் ஏசிபி காமாலுடின் நேற்று கூறினார். கடந்த ஜூலை 19ஆம் தேதி யன்று வழக்கம் போல் வேலை முடித்து விட்டுக்கு திரும்பிய அச்சிறுமியின் தாயார், குழந்தையை பராமரித்து வந்தவரின் வீட்டிலிருந்து தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் அந்தச் சிறுமி வலியால் துடித்துள்ளார். பதற்றம் அடைந்த தாயார் தன் னுடைய மகளை விசாரித்ததுடன் பரிசோதித்து பார்த்ததில், அச்சிறுமியின் பிறப்புறுப்பில் காயம் ஏற்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். என்ன நடந்தது என்று விசாரித்த போது பராமரிப்பு இல்லத்தில் இருக்கும் ஏழு வயது பையன்தான் அதற்கு காரணம் என்று அந்தச் சிறுமி கூறியுள்ளார். இது குறித்து அந்தச் சிறுமியின் தாயார் போலீசில் புகார் செய்துள்ளார். 2017-ஆம் ஆண்டின் குழந்தை பாலியல் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த விவகாரம் விசாரணை செய்யப்படு வருகிறது. அச்சிறுமி மலாக்கா பொது மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் பொதுவாக நடந்தாலும் சிறிய வயதில் இது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுவதற்கு சுற்றுச்சூழலும் பெற்றோர்களின் வளர்ப்பும்தான் காரணம் என்று மருத்துவர்கள் சுட்டிக் காட்டினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மே.9 தேர்தல் வெற்றியை அறிவிப்பதில் தாமதம் ஏன்? அம்பலப்படுத்தினார் துன் மகாதீர்.

அம்னோ, பாஸுடன் இணையும்படி கூட்டணியைச்

மேலும்
img
நாட்டைச் சீர்குலைத்த நயவஞ்சகர்கள். ஊழல் அரசியல்வாதிகளை சுல்தான் நஸ்ரின் ஷா சாடினார்.

இத்தகைய சீர்கெட்ட தலைவர்களால் ஏற்படக்கூடிய

மேலும்
img
மதமாற்று விவகாரம்: பலமுறை கோரிக்கை வத்தும் பதில் வராதது ஏன்?

இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்படுவது

மேலும்
img
பி.கே.ஆர்.தேசிய துணைத் தலைவர் பதவியைத் தக்கவைத்தார் அஸ்மின்

நடைபெற்று முடிவுறும் தறுவாயில் அதன் தேர்தல்

மேலும்
img
விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.

விசாரணைக் கூண்டில் அமர முடியாது

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img