செவ்வாய் 25, ஜூன் 2019  
img
img

கோப்பெங் வளர்ச்சி கண்டு வருகிறது.
புதன் 19 ஜூலை 2017 15:26:15

img

ஈப்போ, ஈய விலை உச்சியிலிருந்த போது செல்வம் நிறைந்த பல நகரங்களில் பேரா மாநிலம் கிந்தா மாவட்டத்திற்கு உட்பட்ட கோப்பெங் நகரமும் ஒன்று. ஈய விலை வீழ்ச்சியின் காரணமாக வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் கோப்பெங் பட்டணம் செயலிழந்து காணப்படுகிறது. தற்போது இந்நகரில் ஆர்டிசி எனும் புறநகர் மேம்பாட்டுமையம், மெட்ரிகுலேஷன் கல்லூரி மாணவர்கள் தங்கி பயிலும் பள்ளி போன்று அமைக்கப்பட்டு புத்துயிர் பெறுவதற்கு பல திட்டங்கள அமல்படுத்தப்பட்டாலும் கோப்பெங்கில் வாழ்கின்ற இந்தியர்கள் பல்வேறு எதிர் பார்ப்புகளுடன் வாழ்ந்து வரு கின்றனர். 52 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோப்பெங் தமிழ்ப்பள்ளி கறையான் பாதிப்புக்குள்ளாகியுள்ளதை ஜேகேஆர் உறுதி செய்து இரண்டு வகுப்பறைகள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்ட பிறகு 2011 ஆம் ஆண்டு முதல் புதிய கட்டடம் கட்டக் கோரி நடையாக நடக்கிறோம். ஆனால் எங்களின் கோரிக்கைக்கு யாரும் செவி சாய்த்ததாக தெரியவில்லை என்று பள்ளி மேலாளர் வாரிய குழுத் தலைவர் கே.இராஜேந்திரன் கூறினார். அரை நூற்றாண்டு பள்ளி என்பதால் இங்கு அடிப்படை வசதிகள் இன்றி பல எதிர்பார்ப்புகளுடன் கோப்பெங் இந்தியர்கள் சுமார் 170 மாணவர்கள் இப் பள்ளியில் பயில்கின்றனர். இப்பள்ளிக்கு ஒரு புதிய கட்டடம் வேண்டும். கறையான் பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்று ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியத்திடம் நேரடியாக மனு கொடுத்தோம். இப்பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் தான் கறையான் பாதிப்பு என்று ஜேகேஆர் அறிக்கை கொடுத்திருப்பது போதாது. பள்ளியே கறையான் பாதிப்புக்குள்ளாகியிருப்பது போன்ற கடிதம் கொண்டு வாருங்கள் பரிசீலிப்போம் என்று சொல்லி அனுப்பி விட்டார். இப்பள்ளிக்கு நேரடியாக வருகை தந்த டத்தோ டாக்டர் என்.எஸ்.இராஜேந்திரன் இதுவரை எந்த பதிலும் கூறவில்லை. கோப்பெங் பகுதியில் வாழ்கின்ற இந்தியர்கள் தங்களின் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளியில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் பள்ளியின் தோற்றம், சுற்றுச் சூழல் இதற்கு சாதகமாக இல்லை. கோப்பெங் இந்தியர்களுக்கு அடையாளமாக இருப்பது தமிழ்ப்பள்ளி மட்டும் தான். இதற்கு ஒரு புதிய கட்டடம் கட்டுவதற்கு அரசியல் தலைவர்கள் ஆர் வம் காட்டாதது பெரும் கவலையை ஏற்படுத்துகிறது என்று கூறினார். கோப்பெங் நாடாளுமன்றத் தொகுதியில் குனோங் ராப்பாட் தமிழ்ப்பள்ளி, டேசா பிஞ்சி தமிழ்ப்பள்ளி என்று மேலும் இரண்டு பள்ளிகள் உள்ளன. இவ் விரண்டு தமிழ்ப்பள்ளிகளில் டேசா பிஞ்சி தமிழ்ப்பள்ளிக்கு இணைக்கட்டடம் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. குனோங் ராப்பாட் தமிழ்ப்பள்ளிக்கு அரசு நிலம், நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டும் கடந்த ஐந்து ஆண்டுகளாகியும் கட்டட வேலைகள் இப்பொழுதுதான் தொடங்கப்பட்டிருக்கிறது. கோப்பெங் தமிழ்ப் பள்ளிக்கு சொந்த நிலம் இருப்பதால் அரசாங்கத்தின் முழு உதவி பெற்ற பள்ளியாக செயல்பட்டாலும் இப்பள்ளி மிக பழைமையான பள்ளி என்பதால் ஒரு புதிய கட்டடம் எழுப்பப்பட வேண்டியது அவசியம் என்று தங்கராஜூ கூறினார். இதுவே ஒட்டு மொத்த கோப்பெங் இந்தியர்களின் எதிர்பார்ப்பு என்று கே. அருளப்பன் கூறினார். கோப்பெங் வட்டாரத்தில் கால் நடைவளர்ப்பில் குறிப்பாக மாடு வளர்ப்பில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் தனித்தனியாக தான் இதனை செய்து வருகின்றனர். லாவான் குடா பகுதியில் மாடு வளர்ப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த நிலத்தில் மலிவு விலை வீடுகள் கட்டப்பட்டதால் இங்கிருந்து பலர் பிரிந்து சென்று புறம்போக்கு நிலங்களில் மாடுகளை வளர்த்தனர். இவர்களுக்கு சட்ட அமலாக்க அதிகாரிகள் மாடுகளை பிடித்துச் செல்வது அபராதம் விதிப்பது போன்ற தொல்லைகளை கொடுத்தனர். எங்களுக்கென்று ஓர் இடத்தை இவர்கள் ஒதுக்கி தந்தால் ஏன் மாடுகள் சுற்றி திரியவேண்டும். எனவே மாடுவளர்ப்பாளர்களை ஒன்றிணைத்து நிலம் ஒன்று அடையாளம்காட்டி அதில் மாடுகள் வளர்ப்பதற்கான ஏற்பாட்டை அரசு செய்ய வேண்டும் என்று இத்துறையில் 50 ஆண்டுகால அனுபவத்தை கொண்ட ப.கேசவன் (வயது 60) இங்கு கூறினார். நான் வளர்த்து வரும் மாடுகள் அரசு நிலம் என்றாலும் வருடத்திற்கு வாடகை செலுத்தி வருகிறேன் என்று கூறினார். இதே போல பலர் இப்பகுதியில் செயல்படுகின்றனர் என்றார் அவர். கம்போங் லாவான்குடா பகுதியில் கடந்த 40 வருடமாக குடியிருக்கும் ஏழு குடும்பங்களுக்கு நில உறுதி கடிதங்கள் வழங்கப்பட வில்லை. இவர்களின் நிலப்பிரச்சினை இன்னும் நிலுவையில் இருந்து வருகிறது என்று கே.தியாகராஜன் (வயது 72) கூறினார். இக்கிராமத்தையொட்டியுள்ள நிலப் பிரச் சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டிருக்கும் சூழ்நிலையில் இவர்களின் நிலப்பிரச்சினை தீர்வு இழுபறியாக இருக்கிறது என்றும் கூறினார். கோப்பெங் பகுதியில் மிக பழைமையான நிலப்பிரச்சினையாக கருதப்படும் கம்போங் சங்கிலி நிலப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது. எங் களுக்கு நிலப்பட்டா வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு அரசுக்கு நன்றி கூறிக் கொள்வதாக இக்கம்பத்தில் குடியிருக்கும் ராஜா (வயது 69) கூறினார். கோப் பெங் கோபிசான் பகுதிக்கு பொது போக்கு வரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டும். பொது போக்கு வரத்து வசதி இல்லாமல் இப்பகுதி மக்கள் அவதிப் படுகின்றனர் என்று ப.கருப்பையா (வயது59) கூறினார். சுமார் 25 வருடமாக பத்திரிகை விற்பனையில் ஈடுபட்டு வந்த தன் தந்தைக்கு பிறகு இக்கடையை பார்த்துக் கொண்டு வியாபாரம் செய்கிறேன். முன்பு சாலை ஓரத்தில் நடந்த வியாபாரம் இப்பொழுது நகராட்சி மன்ற கடையில் வியாபாரம் செய்வதாக குமரன் (வயது 30) கூறினார். மொத்தம் 30 கடை கள் உள்ளன இதில் இந்தியர் கடை என்னுடையது மட்டும் தான் என்றும் கூறினார். எந்த துறையாக இருந்தாலும் அங்கு இந்தியர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் என்று சு.தங்கராஜூ (வயது 40) குறை பட்டுக் கொண்டார். எல்லாவற்றையும் நாம் போராடித் தான் பெற வேண்டியிருக்கிறது. கோப்பெங் தமிழ்ப்பள்ளி புதிய கட்டடம், மாடு வளர்ப்புக்கு நிலம், கல்வி உதவி இவற்றிக்கு போராட வேண்டியுள்ளது. தேர்தல் காலங்களில் இந்தியர்கள் வாக்கு தான் வெற்றியை நிர்ணயம் செய்கிறது என்கிறார்கள். பிறகு இந்தியர்கள் ஏன் புறக்கணிக் கிறார்கள்? மக்கள் நலத் திட்டங்கள் மேற்கொள்ளவதற்கு நிதி ஒதுக்கீடு கோரினால் நிதி இல்லை என்கிறார்கள். ஆனால் ஒரு சில குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் நிதி வழங்கப்படுகிறது. ஏன் இந்த பாரா பட்சம் என்பது புரியாத புதிராக இருக்கிறது. கோப்பெங் பகுதியில் உள்ள ஏழு பெரிய கோவில்களில் மூன்று கோவில்கள் திருப்பணி முடிவு பெற்றது. ஆனால் தமிழ்ப்பள்ளி கட்டுவதற்கு நிதி இல்லை என்று சொல்கிறார்கள். இந்தியர்களின் அரசாங்க பிரதிநிதி ம.இ.கா. என்று சொல்கிறார்கள். ஆனால் சமூக நலத்திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு இதுவரை எந்த விளக்கமும் கொடுத்ததில்லை. தேசிய முன்னணியின் வெற்றியானது இதன் அடிப் படையில் தான் உள்ளது என்பதை அவர்கள் உணர வேண்டும் என்று கூறினார். இந்தியர்களுக்கு அரசாங்கம் எதுவும் செய்யவில்லை என்று குறைபடுவதில் நியாயம் இல்லை நிறையவே செய்கிறார்கள். மேலும் அதிகமாக செய்வ தற்கு அரசாங்கத்திற்கும் பொது மக்களுக்கும் ம.இ.கா. பாலமாக இருக்க வேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பு என்று ஜி.ஆதித்தன் (வயது 59) கூறினார். லாவான் குடா பகுதியில் ஏழு குடும்பங்களுக்கு நிலப்பட்டா இல்லை என்ற குறைபாட்டை அவர்கள் தீர்க்க வேண்டும். தமிழ்ப்பள்ளி கட்டுவதற்கு குரல் எழுப்பப்பட வேண்டும். மாடு வளர்ப்பாளர்கள் பிரச்சினை களைய வேண்டும் இதற்கு ம.இ.கா.வின் செயல்பாடு துரிதமாக்கப்பட வேண்டும் என்று கூறி னார். கோப்பெங் வட்டாரத்தில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வாழ்கின்றனர். இவர்கள் பயன்பாட்டிற்கு ஒரு பல்நோக்கு மண்டபம் இல் லாதது பெரும் குறையாகவே இருந்து வருகிறது என்று பெ.பாலச்சந்திரன் (வயது 53) கூறினார். இந்தியர்களுக்கான அடையாளச் சின்னமாக இது இருக் கும் என்பதால் இங்கு ஒரு பொது மண்டபம் கட்டுவதற்கு பொறுப்பாளர்கள் திட்டமிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். கோப்பெங் வட்டாரத்தில் இரண்டு இடைநிலைப்பள்ளிகள் உள்ளன இவற்றில் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால் போதுமான கண்காணிப்பு இருப்பதில்லை. இதன் அடிப்படையில் மேலும் ஒரு இடைநிலைப்பள்ளி அமைக்கப்பட வேண்டும் என்று கே.ராஜேந்திரன் கோரிக்கையை முன்வைத் தார். கோப்பெங் பகுதியில் இந்தியர்கள் சிறு சிறு வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு போதுமான இட வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். மாவட்ட மன்றத்தின் கீழ் செயல்படுகின்ற கடைகளில் இந்தியர்களுக்கு அதிகமான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். கோப்பெங் நாடாளு மன்ற தொகுதியில் இந்தியர்களின் நலன், வளர்ச்சி குறித்து முழுமையான ஆய்வை கோப்பெங் தொகுதி காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது என்று தொகுதித் தலைவரும் மாநில ம.இ.கா. பொருளாளருமான கவுன்சிலர் தி.சுப்பிரமணியம் கூறினார். 2008 ஆம் ஆண்டுக்கு முன் இத்தொகுதி தேசிய முன்னணி வசமிருந்தது. அதற்கு பிறகு இரண்டு தவணைகள் எதிர்க்கட்சி வசமிருந்தது. வரும் பொதுத் தேர்தலில் இத்தொகுதியை தே.மு. மீட்பதற்கு பல வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளது. அம்னோ, மசீச, கெராக்கான் கட்சிகளுடன் இணைந்து ம.இ.கா. இந் தியர்கள் எதிர் பார்ப்பு குறித்து அறிக்கை சமர்ப்பிக்க இந்த ஆய்வு மிக முக்கியம் என்று கூறினார். கோப்பெங் தமிழ்ப்பள்ளி விவகாரம், நிலப்பிரச்சினை, பொது மண்டபம், மின் சுடலை போன்ற வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கு தொகுதி ம.இ.கா. நிச் சயமாக அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று கூறினார். தொகுதி காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்றப் பிறகு படிப்படியாக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றோம். குறிப்பாக டேசா பிஞ்சி தமிழ்ப்ப்ள்ளிக்கு இணை கட்டடம், குனோங் ராப்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானம் தொடக்கம் போன்றவற்றுடன் கோப்பெங் வட்டாரத்தில் வறுமையில் வாடுகின்றவர்க ளுக்கு உதவிகள் செய்து வருகின்றோம் என்று கூறினார். கோப்பெங் பகுதியில் இந்தியர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து தொகுதி காங்கிர சிடம் மனுகொடுங்கள், மனுவின் அடிப்படையில் பணிகள் சீராக நடைபெறும் என்று தெரிவித்தார். கம்போங் சங்கிலி பகுதியில் இன்னும் 26 குடும்பங்களுக்கு நிலப்பட்டா வழங்கப்படவில்லை என்பது குறித்து மாவட்ட அதிகாரிகளிடம் கூறியிருக்கி றேன். மேலும் கம்போங் பங்காளி நிலப்பிரச்சினை, லாவான் குடா நிலப்பிரச்சினை எதிர் நோக்குகின்றவர்களை விரைவில் தொகுதி காங்கிரஸ் சந்திப்பு நடத் தும் என்று கூறினார். கோப்பெங் தொகுதியில் பல இந்திய அமைப்புக்கள் செயல்படுகின்றன, புதிய அணுகுமுறை அடிப்படையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைவரும் ஒற்றுமைடன் செயல்படவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். கோப்பெங் வட்டாரத்தில் வாழ்கின்ற இந்தியர்களுக்கு மின் சுடலை ஒன்று நிர்மாணிக்கப்பட வேண்டும். வீடுகளில் இறப்பு ஏற்பட்டால் தகனம் செய்ய புந்தோங்கிற்கும், பெர்சாமிற்கும் செல்ல வேண்டும் இது வெகு தூரத்தில் இருப்பதால் இங்கு ஒரு மின் சுடலை அமைத்தால் இந்தியர்களுக்கு பயன்படுத்த முடியும் என்று சு.ராஜா கூறினார். கோப்பெங்கில் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். இங்கு அரசாங்க கிளினிக் மட்டும் தான் இருக்கிறது. பொது விடுமுறை, ஞாயிறுகளில் செயல்படுவது இல்லை ஆபத்து அவசரங்களுக்கு கம்பார் அல்லது ஈப்போவிற்கு தான் செல்ல வேண்டும். இங்கு அனைத்து வசதிகளும் கொண்டு மருத்துவமனை கட்ட வேண்டும் என்று கோப்பெங் தமிழ் இளைஞர் மணி மன்றத் தலைவர் ஜோன் கென்னடி வேண்டுகோள் விடுத்தார். இத்தொகுதியில் இளைஞர்களுக்கு விளையாட்டுத் துறையில் ஆர்வத்தை ஏற்படுத்த விளை யாட்டு திடல், வசதிகளை மேம்படுத்த வேண்டும். கோப்பெங் தொகுதியில் மொத்தம் 27 இந்திய பொது அமைப்புகள் செயல்படுகின்றன. இதில் 10 கோப்பெங் நகருக்குட்பட்டது என்று கூறினார். இளைஞர் களுடன் ஒன்றிணைந்து செயல்படக்கூடிய மனப்பக்குவத்தை ஏற்படுத்தப்பட்டால் கோப்பெங் சிறந்த மாவட்டமாக உருவாக்கலாம் என்றும் கூறினார். வரும் பொதுத் தேர்தலில் கோப்பெங் தொகுதியை தே.மு கைப்பற்றுவதற்கு அடிப்படை வசதிகளை குறிப்பாக இந்தியர்களுக்கு நிறைவான சேவையை முன்வைக்கப்பட வேண்டும் என்று கூறினார். கோப்பெங் தொகுதியில் 9.70 விழுக்காடு இந்திய வாக்காளர்கள் உள்ளனர். இதில் தேஜா சட்டமன்றத்தில் மட்டும் 19.61 விழுக்காடு இந்திய வாக்காளர்கள் உள்ளனர். இளையோர்கள் அரவணைக்கப்பட வேண்டும் என்று கூறினார். கோப்பெங் இந்தியர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படுவதற்கு ஆக்ககரமான செயல்பாடு அவசியமாகிறது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பாசிர் கூடாங்கில் இரசாயனத் தொழிற்சாலைகள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

அது மட்டுமின்றி பாசிர் கூடாங்கில் வழக்க நிலை

மேலும்
img
ராஜாமணிக்கு பதில் யார்? தகுதியானவரைத் தேடுகிறது ஆஸ்ட்ரோ.

இதன் தொடர்பில் நேற்று ஓர் அறிக்கையை

மேலும்
img
டாக்டர் மகாதீருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமா?

ஜூலை முதல் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை

மேலும்
img
உலகம் முழுவதும் இருந்து வெ.2,075 கோடி சொத்துகளை மீட்க எம்.ஏ.சி.சி அதிரடி. 

உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள

மேலும்
img
மணமேடை ஏறவிருந்த கஸ்தூரி விபத்தில் பலியானார் 

சிப்பாங் பெக்கோ சாலை ஏழாவது கிலோ மீட்டரில்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img