செவ்வாய் 13, நவம்பர் 2018  
img
img

மலேசிய தடகள போட்டிகள். தங்கம் வென்றார் கீர்த்தனா
புதன் 19 ஜூலை 2017 11:49:36

img

கோலாலம்பூர், மலேசிய தடகள போட்டியின் மும்முறை நீளம் தாண்டுதல் பிரிவில் களமிறங்கின ஆர். கீர்த்தனா தங்கம் வென்று அசத்தினார். 94ஆவது மலேசிய தட கள போட்டிகள் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் மலேசியா, தாய்லாந்து, லாவோஸ், புருணை, இந்தோனேசியா, சிங்கப்பூர் உட்பட 9 நாடுகளில் இருந்து 250க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டு வெற்றிக்காக போராடி வருகின்றனர். அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சீ விளையாட்டுப் போட்டிக்கு ஆயுத்தமாகும் வகையில் இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.அதே வேளையில் இப் போட்டியில் சிறந்து விளங்கும் போட்டியாளர்களுக்கு சீ விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்தடகள போட் டியின் மும்முறை நீளம் தாண்டுதல் (டிரிபள் ஜம்ப்) பிரிவில் பேராவைச் சேர்ந்த ஆர். கீர்த்தனா கலந்து கொண்டார். இதில் சிறப்பான திறனை வெளிப்படுத்திய கீர்த்தனா 13.18 மீட்டர் நீளம் தாண்டி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.இப்போட்டியில் லாவோஸைச் சேர்ந்த போக்தா வோங் 12.09 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்தோனேசியாவைச் சேர்ந்த ரிஸ்கா நூலியான்டா 11.29 மீட்டர் நீளம் தாண்டி வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இப்போட்டியில் தங்கம் வென்ற வேளையிலும் அது குறித்து கீர்த்தனா மகிழ்ச்சியடைய முடியாத நிலையில் உள்ளார்.கடந்த மாதம் நடைபெற்ற போட் டியில் ஜி. கிசானோவ் 13.48 மீட்டர் நீளம் தாண்டி புதிய சாதனையை பதிவு செய்தார்.இச்சாதனையை முறியடிக்கும் நோக்கில் தான் கீர்த்தனா இப்போட்டி யில் களமிறங்கினார். ஆனால் அம்முயற்சி தோல்வியில் முடிந்தது தான் கீர்த்தனாவின் வருத்தத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. இதனிடையே கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற மலேசிய திடல்தடப் போட்டியில் நூர் அமிரா 13.90 மீட்டர் நீளம் தாண்டி புதிய சாதனையை பதிவு செய்தார். இச்சாதனையை முறியடிக்கும் நோக்கிலும் கீர்த்தனா செயல்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
சுக்மா திடல் தடப் போட்டியில் பூவசந்தன், கீர்த்தனா சாதனை.

பூவசந்தன் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியிலும்

மேலும்
img
சீலாட்டில் மேலும் இரு வெள்ளிப் பதக்கங்கள்.

தேசிய வீரர் முகமட் பௌசி காலிட்

மேலும்
img
மலேசிய ஜோடிக்கு வெண்கல பதக்கம்.

நீச்சல் போட்டியில் மலேசியாவை

மேலும்
img
ஆசிய விளையாட்டுப் போட்டியில் மலேசியாவுக்கு 3 ஆவது தங்கம்

ஆண்களுக்கான தனிநபர் போவ்லிங் போட்டி

மேலும்
img
சைக்கிளோட்டத்தில் மலேசியாவுக்கு வெள்ளி

இதில் சிறப்பான திறனை வெளிப்படுத்திய மலேசிய அணியினர்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img