வியாழன் 15, நவம்பர் 2018  
img
img

பிரபாகரனுக்கு நடந்ததை கூறினார் கமால் குணரட்ன
புதன் 14 செப்டம்பர் 2016 13:45:37

img

நீண்ட காலமாக மெளனித்துவிட்ட விடுதலைப்புலிகள் என்ற வார்த்தை தற்போது அரசியல் தலைவர்கள் மற்றும் இராணுவ தலைவர்கள் தரப்பின் மூலமாக வெளிவரத்தொடங்கியுள்ளது. இவற்றுக்கான முக்கிய காரணம் மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிப்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக என அவதானிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன நந்திக்கடலுக்கான பாதை என்ற நூலை அண்மையில் வெளியிட்டு வைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் ஊடகங்களுக்கு வழங்கிய கருத்துகள் மற்றும் செய்திகள் போன்றவற்றில் யுத்தகாலகட்டத்தில் நிறைவேறிய அல்லது கூறப்பட்ட கருத்துகளுக்கு முற்றாக மாறுபட்ட கருத்துகளையே வெளியிட்டு வருகின்றார். பிரபாகரனின் இரண்டாவது மகன் பாலச்சந்திரன் என்ன ஆனார் என்பது எனக்குத் தெரியாது என்று மேஜர் கமால் குணரட்ன அண்மையில் ஊடகத்திற்கு தெரிவித்த கருத்து சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரபாகரனின் புதல்வர் பாலச்சந்திரன் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், இராணுவ தடுப்பில் வைக்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்டதாகவும் பல தகவல்கள் கூறப்பட்டன அவை இராணுவ தரப்பினாலும் இலங்கை அரசினாலும் உறுதிப்படுத்தப்படவும் செய்யப்பட்டமை அறிந்ததே. அதன் பின்னர் தற்போது பாலச்சந்திரன் என்ன ஆனார் என்று எனக்கு தெரியாது என்று மேஜர் கூறுவதன் மூலம் அவர் எதனை முன்வைக்க முயல்கின்றார். செனல் 4 ஊடகம் பாலச்சந்திரன் கொல்லப்பட்டதாக தகவல்களை வெளிப்படுத்தியது, அதே சமயம் கமால் குணரட்னவின் படைப்பிரிவின் மூலமாகவே கொல்லப்பட்டதாகவும் செய்திகள் புகைப்படங்களுடன் வெளிவந்தன. இவ்வாறான செய்திகளுக்கு பின்னர், அதற்கு காரணியாக அமைந்த கமால் குணரட்ன பிரபாகரனின் மரணம் தொடர்பில் வெளிப்படையாக கூறினார். அதே சமயம் அவர் வெளியிட்டுள்ள புத்தகத்திலும் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் தன்னுடைய 700 பக்க புத்தகத்தில் எங்குமே பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் மரணம் தொடர்பில் கூறவில்லை என்பது பாரியதொரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்போது அவர் இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்த கூடாது என்று கட்டாயப்படுத்தப்பட்டிருப்பார். கடமையில் இருக்கும் போது அரசுக்கு எதிரான அல்லது நாட்டின் பாதுகாப்பு நிமித்தம் யுத்த நிலவரங்கள் வெளிப்படுத்தப்படக்கூடாது என்பது சட்டமாகவே உள்ளது. இது அனைத்து நாடுகளிலும் இராணுவத்தில் உள்ள வழக்கமே அதன் காரணமாக உண்மைகள் அல்லது முக்கிய விடயங்கள் மறைக்கப்பட்டன. எனினும் தற்போது பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் மறைக்கப்பட்டவை வெளிப்படுத்தப்பட வேண்டும். ஆனாலும் உண்மைகளை கூறுமிடத்து ஒருவேளை அவை இராஜ துரோகமாக மாறிவிடவும் வாய்ப்புள்ளது. சரத்பொன்சேகாவிற்கு ஏற்பட்ட இராஜ துரோக தண்டனை மற்றும் களங்கப் பெயர் தனக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தும் முகமாக மறைமுகமான கருத்துகளை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் உண்டு. இவ்வாறான காரணங்களினால் சந்தேகத்துக்குரிய சர்ச்சையான விடயங்கள் தொடர்பில் வெளிப்படையான கருத்துகளை முன்வைக்கப்படுவதில்லை என்று கூறப்படுகின்றது. எது எவ்வாறாயினும் தற்போது அவை சிறிது சிறிதாக வெளிப்படுத்தப் படுகின்றது என்றும் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
தந்தையை கைவிட்டு மகிந்தவுடன் இணையும் மைத்திரி மகள் 

மகிந்த ராஜபக்சே தலைமையேற்கும் பொதுஜன

மேலும்
img
இலங்கை அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது

ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணி கட்சியான

மேலும்
img
பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் ரணிலின் மனைவி

ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக மக்களின்

மேலும்
img
மைத்திரிபாலா எடுத்துள்ள நடவடிக்கை முழுக்க முழுக்க சட்ட விரோதமானதாகும்’-திருமாவளவன்

சிறிசேனா திடீரென புதிய பிரதமராக

மேலும்
img
இலங்கையில் ரணில் விக்ரமசிங்கேவின் கூட்டணி ஆட்சி கலைகிறது 

கூட்டணி ஆட்சியில் இருந்து இலங்கை சுதந்திரா

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img