புதன் 21, நவம்பர் 2018  
img
img

செப்டம்பருக்கு முன் தேர்தல் இல்லை!
செவ்வாய் 18 ஜூலை 2017 12:34:34

img
கோலாலம்பூர், மலேசியாவின் 14ஆவது பொதுத் தேர்தல் செப்டம்பர் மாதத்திற்குப் பின்னர் நடைபெறும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி கூறினார். புத்ரா உலக வர்த்தக மையத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அம்னோவின் ஹரிராயா பொது உபசரிப் பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜாஹிட், செப்டம்பர் மாதம் மிக அருகில் உள்ளது என் றும் பொதுத் தேர்தல் அதன் பின்னரே நடைபெறும் என்றும் குறிப்பிட்டார். கோலாலம்பூரில் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிக்குப் பின்னர், பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் பொதுத் தேர்தலை நடத்துவார் என்ற பரவலான ஊகங்களைத் தொடர்ந்து இந்தத் தகவல் வெளியாகி இருப்பதாக சேனல் நியூஸ் ஆசியா தெரிவித்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொது உபசரிப்பில் 50,000 மலேசியர்கள் கலந்து கொண்டனர். கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் தேசிய முன்னணி அரசாங்கத்தின் மீது மலேசியர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் அரசுக்கு அவர் கள் காட்டி வரும் ஆதரவிற்கும் இந்த அளவு பெருமளவில் மக்கள் பொது உபசரிப்புக்கு வருகை புரிந்து இருப்பது ஒரு சான்றாகும் என்று அம்னோ தலை வர் நஜீப் கூறினார். அறுபது ஆண்டுகள் சாதனை பதிவுகளை கொண்டது இந்த அரசாங்கம் அம்னோவிற்கு வயது 71. இன்று நாடு அடைந்திருக்கும் வெற்றிகளை நோக்கி நாட்டை நாம் வழிநடத்தி வந்திருக்கிறோம். தெளிவான தலைமைத்துவ கட்டமைப்பு, தெளிவான தலைமைத்துவ வரிசை முறை, தெளிவான இலக்கு, திறன் ஆகியவற்றை நாம் கொண்டிருக்கிறோம் என்று நஜீப் பொது உபசரிப்பின்போது செய்தியாளர்களிடம் விவரித்தார். மாறாக, எதிர்க்கட்சியான பக்காத்தான் ஹராப்பான் நிலைத்தன்மையற்ற தலைமைத்துவ பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளது என்று நஜீப் குறிப்பிட்டார். எதிர்க்கட்சி கூட்டணி தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் 1998 செப்டம்பரில் தான் கூறிய கருத்துக்களில் உறுதியாக இருக்கிறாரா என்பதை தெரி விக்க வேண்டும் என்றும் நஜீப் சவால் விடுத்தார். அப்போது துணைப்பிரதமராக இருந்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒழுக்கக் கேடானவர் என்றும் நாட்டை வழிநடத்துவதற்கு தகுதியற்றவர் என்றும் மகாதீர் குற்றஞ்சாட்டி இருந்தார்.
பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மதமாற்று விவகாரம்: பலமுறை கோரிக்கை வத்தும் பதில் வராதது ஏன்?

இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்படுவது

மேலும்
img
பி.கே.ஆர்.தேசிய துணைத் தலைவர் பதவியைத் தக்கவைத்தார் அஸ்மின்

நடைபெற்று முடிவுறும் தறுவாயில் அதன் தேர்தல்

மேலும்
img
விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.

விசாரணைக் கூண்டில் அமர முடியாது

மேலும்
img
நஜீப்பிற்கும் ரோஸ்மாவுக்கும்  ஏஜெண்டாக செயல்பட்டவர் அஸிஸ்.

டத்தோஸ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம்

மேலும்
img
சுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு

மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img