வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

அதிகாரிகள் புடைசூழ துப்பாக்கி கேக் வெட்டிய கொலைக்கைதி
திங்கள் 17 ஜூலை 2017 17:17:23

img
பெங்களூரு: அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கொலைக்கைதி ஒருவர் அதிகாரிகள் புடைசூழ கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது அம்பலமாகியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் என்பவரே சிறையில் பிறந்தநாள் கொண்டாடியவர் ஆவார். அரசியல் செல்வாக்கு, பணபலம் கொண்ட இவரது பிறந்தநாளை அமர்க்களப்படுத்த நினைத்த சிறை அதிகாரிகள் துப்பாக்கி வடிவிலான 6 கிலோ எடையுள்ள கேக்கை சொந்த செலவில் வரவழைத்தனர். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் ஸ்ரீநிவாஸை அந்த கேக்கை வெட்ட வைத்த அதிகாரிகள் அகமகிழ்ந்து நின்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. பரப்பன அக்ரஹாரா சிறையில் விதிகளை மீறி சசிகலா உள்ளிட்ட கைதிகளுக்கு வசதிகள் செய்து தரப்படுவதாக டிஐஜி ரூபா அளித்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை தான் என்பதற்கு சான்றாக அமைத்துள்ளது கொலைக்குற்றவாளியின் பிறந்தநாள் விழா. பரப்பன அக்ரஹாரா சிறை முறைகேடுகளை விசாரிக்கும் உயர்மட்ட குழு கொலைக்கைதி துப்பாக்கி கேக் வெட்டியதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுமா என கேள்வி எழுந்துள்ளது.
பின்செல்

இந்தியச் செய்திகள்

img
நிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்

மேலும்
img
புருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு

இன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்

மேலும்
img
குற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்

மேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை

மேலும்
img
கஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்

இக்கிராமத்தை சேர்ந்தவரும் புகழ்பெற்ற

மேலும்
img
திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு

எஸ்.காமராஜ் திருவாரூர் மாவட்டத்தின்,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img