img
img

சிவாஜி சிலையை வைக்கத் தடை இல்லை - உயர் நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 17 ஜூலை 2017 17:01:35

img
சிவாஜி சிலையைக் கடற்கரை சாலையிலிருந்து அகற்றி புதிதாக அமைந்திருக்கும் சிவாஜி மணிமண்டபத்தில் வைக்க எந்தத் தடையும் இல்லை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடற்கரை சாலையில் உள்ள நடிகர் சிவாஜி சிலையை அகற்றி, அடையாறு அருகே கட்டப்படும் சிவாஜி மணிமண்டபத்தில் வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதை எதிர்த்தும், அகற்றப்படும் சிவாஜி சிலையை, மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் காந்தி - காமராஜர் சிலைகளின் வரி சையில் மாற்றி அமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் 'நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை' சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், கடற்கரையிலிருந்து அகற்றப்படும் சிவாஜி சிலையை அவரின் மணிமண்டபத்தில் வைக்கத் தடை போட முடியாது என்று கூறியது. கடற்கரை சாலையிலிருந்து அகற்றப்படும் சிலையை காம ராஜர் சாலையில் வைக்க வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்செல்

இந்தியச் செய்திகள்

img
மே.வங்கத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்காது.. வேணும்னா ரசகுல்லா கிடைக்கும்.. பாஜ-வை கலாய்த்த மம்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மேலும்
img
பாஜகவுக்கு வாக்களிக்க கோரும் அபிநந்தன் புகைப்படம் உண்மையா?

"இந்திய விமானப் படை விங் கமாண்டர்

மேலும்
img
“மம்தா தூக்கமின்றி தவிக்கிறார்...”- நரேந்திர மோடி

திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவு கேட்டு

மேலும்
img
ஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரியின் மகன் மர்ம மரணம்?..

இதனிடையே மகன் இறந்த அதிர்ச்சியில்

மேலும்
img
சாத்தூர் அமமுக வேட்பாளரை குறி வைத்து ரூ.43 லட்சம் பறிமுதல்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் நேற்றிரவு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img