செவ்வாய் 23, ஏப்ரல் 2019  
img
img

பக்காத்தான் ஆட்சியைப் பிடித்தால் 100 நாட்களுக்குள் ஜி.எஸ்.டி அகற்றப்படும்.
சனி 15 ஜூலை 2017 12:01:00

img

கோலாலம்பூர், வரும் பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் எதிர்க்கட்சி கூட்டணி புத்ராஜெயாவைக் கைப்பற்றி ஆட்சி அமைக்குமேயானால் மக்களுக்கு பெரும் சுமையாக இருக்கக்கூடிய ஜி.எஸ்.டி.எனப்படும் பொருள் சேவை வரியை முற்றாக அகற்றி, மக்களின் சுமையைக் குறைப்போம் என்று பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் சூளுரைத்துள்ளனர். ஹராப்பான் கூட்டணியின் கூட்டறிக்கையை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதன் அவைத்தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று வாசித்தார். அத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளவற்றில் பொருள்கள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) அமலாக்கம் ரத்துச் செய்யப்படுவதும் ஒன்றாகும். பெட்ரோல் விலையை நிலைப்படுத்துதல், மக்களின் சுமைகளைக் குறைக்கும் முயற்சிகளில் கவனம் செலுத்துதல், முக்கியமான அமைப்புகளை முழு மையாக சீர்திருத்துவதற்கான செயல்முறைகளைத் தொடங்குதல், ஊழலை வேர் அறுத்தல், 1எம்டிபி ஊழலை விசாரிக்க அரச விசாரணை ஆணையம் அமைத்தல், பெல்டா மறுசீரமைப்பு செய்தல் ஆகியவை தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு செய்யக்கூடிய நற்காரியங்கள் என்று அந்த கூட்டறிக் கையில் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்தர்ர். அத்துடன் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதும் அதன் ஈடுபாடுகளில் அடங்கும் என்றார் அவர். இந்த அறிவிப்பு வெள்ளிக் கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் பெட்டாலிங் ஜெயா பிகேஆர் தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு செய்தியாளர்கள் கூட்டத்தில் செய்யப்பட்டது. மேலும் பக்காத்தான் ஹராப்பான் மத்திய அரசாங்கத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ஆட்சியை வழிநடத்துவோமானால் ஆட்சி அமைக் கப்பட்ட ஒரு வாரத்தில் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பி.கே.ஆர். கட்சியின் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை விடுவிப் பதற்கான முயற்சியில் இறங்கும். குறிப்பாக அன்வாரை விடுவிக்கும் வகையில் நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு, மாமன்னரிடம் மன்னிப்புக் கேட்டு விண்ணப்பபிக்கும் என்று மகாதீர் தெரிவித்தார். இதன் வாயிலாக அவர் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கான சூழல் ஏற்படுத்தப்படும் என் றும் மகாதீர் தெரிவித்தார். பிரதமர் பதவிக்கு உச்ச வரம்பு குறித்தும் அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஹராப்பான் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளான ஜ.செ.க., பி.கே.ஆர், அமானா நெகாரா மற்றும் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா ஆகியவை பிரதமர் பதவிக்கு இரண்டு தவணை உச்ச வரம்பை அமல்படுத்தும்.மக்களின் நலன்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தும் தற்போதைய அரசாங்கத்தின் சட்ட மீறல்கள் ரத்து செய்யப்படும் அல்லது திருத்தப்படும் என்று துன் டாக்டர் மகாதீர் கூறினார். அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்து அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கைவிடவும் அவர்கள் ஒப்புக்கொண்டதோடு அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கான சட்ட திருத்தம் செய்யப்படும் என்றும் கூறினார். ஹராப்பானின் சின்னம் மற்றும் அதன் கட்டமைப்பு ஆகியவை குறித்தும் நீண்டகால பேச்சுவார்த்தைக்குப் பின்னர் முடிவு செய்யப்பட்டது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
முதல் முறையாக தலைமை நீதிபதியாக ஒரு பெண்

ஒருவர் தெங்கு மைமூன். 2006 ஆம்

மேலும்
img
அந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.

தலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று

மேலும்
img
2,200 இடங்கள், 700 ஆகக் குறைப்பு: இந்தியர்களின் வாய்ப்பைக் பறித்தது ஏன்?

700 இடங்களை மட்டுமே தற்போது வழங்கியிருப்பது

மேலும்
img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img