'ஆயுதம் வழங்குவதால் ஏற்படுகிற ஆபத்தைத் தனது நாடு சந்திக்கத் தயாராக இருக்கிறது'' என துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். ஐ.எஸ். பிடியிலிருந்து ராக்கா நகரத்தை விடுவிக்க குர்திஷ் போராளிக் குழுக்களுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கிவருகிறது. ஆனால், இந்தக் குழு வான ஒய்.பி.ஜி ஏற்கெனவே அமெரிக்கா உள்பட பல மேலை நாடுகளால் பயங்கரவாத இயக்கமாகத் தடை விதிக்கப்பட்ட பி.கே.கே இயக்கத்தின் ஒரு பிரிவாகும் என்று துருக்கி குற்றஞ்சாட்டுகிறது. தனது தென் கிழக்கு எல்லையில் துருக்கிப் படைகளுடன் மோதிவரும் பி.கே.கே-வுக்கு மறைமுகமாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் உதவிவருகின்றன என்கிறார் அதிபர் எர்டோகன் கடந்த மே மாதம் வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்பைச் சந்தித்துப் பேசியபோதும், ஜி-20 மாநாட்டில் சந்தித்தபோதும் எர்டோகன் இதன் ஆபத்தை எடுத்துரைத்தார். ஆயுதம் வழங்குவதால் ஏற்படுகிற ஆபத்தைச் சந்திக்க தனது நாடு தயாராக இருப்பதாகத் தற்போது தெரிவித்துள்ளார். சிரியாவின் போராளிக் குழு ஒன்று தென் மேற்கு எல்லையில் துருக்கி ராணுவத்துடன் இணைந்து குர்திஷ் போராளிகளையும், ஐ.எஸ் இயக்கத்தையும் ஒருசேர எதிர்த்துப் போர் செய்கிறது. கடந்த ஆகஸ்ட்டில் இந்தப் படை எல்லையைக் கடந்து போரிட்டது. இப்புதிய கூட்டணியினால் ஏற்கெனவே குழம் பியிருக்கும் சிரிய உள்நாட்டுப் போர் மேலும் தீவிரமடையும். அமெரிக்காவும், ரஷ்யாவும், தென் மேற்கு சிரியாவில் போர் நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளன.
விண்கல் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தது.
மேலும்கடந்த டிசம்பர் மாதம் சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்
மேலும்தங்கி இருந்ததற்காக 3,500 அமெரிக்க டாலர்
மேலும்