செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

சிங்கை சிப்புட் தொகுதியில் தீராத பிரச்சினைகளால் தவிக்கும் மக்கள்!
சனி 08 ஜூலை 2017 15:46:05

img

(முல்லைச்செல்வன்) சுங்கை சிப்புட், மலாயா சுதந்திரம் அடைந்தது முதல் மலேசியா உதயமானது வரை நடைபெற்ற எல்லாப் பொதுத்தேர்தல்களிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இந்தி யர்களே தொடர்ந்து இருக்கும் ஒரு தொகுதி பேரா மாநிலத்தில் உள்ள சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியாகும். இந்தத் தொகுதி கோலக்கங்சார் மாவட்ட மேற்பார்வையின் கீழ் உள்ளது. ஈப்போவி லிருந்து 30 கிலோ மீட் டர் தொலை வில் அமைந் துள்ள சுங்கை சிப்புட் ஒரு காலத்தில் கம்யூனிஸ்டு பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து நாட் டிற்கு பெரும் மிரட்டலை ஏற்படுத்திய ஊராகும். நாட்டில் அவசரக்காலம் பிரகடனப்படுத்தப்பட்ட முதலாவது ஊராகவும் இது விளங் குகிறது. அருகில் உள்ள தோட்டங்களைச் சேர்ந்த 3 பிரிட்டிஷ் காலனித்துவ முதலாளிகளை கம்யூனிஸ்டுகள் சுட்டுக்கொன்றதன் விளைவாக இந்த அவசரக்காலம் பிரக டனப்படுத்தப்பட்டது. அக்காலத்தில் கறுப்பு பட்டியலிடப்பட்ட முக்கிய ஊர்களில் இதுவும் ஒன்றாகும். மஇகாவின் ஐந்தாவது தேசியத் தலைவரும் கூட்டுறவுத்தந்தையுமான சங்க நதியைச் சேர்ந்த துன் வீ.தி. சம்பந்தன் பிறந்த ஊரும் இதுவாகும். சுங்கை சிப்புட்டில் அவர் கட்டிய மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளியை திறப்பதற்கு அன்றைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சகோதரி விஜயலெட்சுமி பண்டிட் 1954 இல் வந்த ஊரும் சுங்கை சிப்புட்தான். துன் வீ.தி. சம்பந்தன் முதல் முறையாக பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட்டை உள்ளடக்கிய கிந்தா உத்தாரா தொகுதியில் 1955 ஆம் ஆண்டு போட்டியிட்டார். பின்னர் 1959 இல் அத்தொகுதி சுங்கை சிப்புட்டாக விளங்கி 1969 வரையில் இதே நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1974 ஆம் ஆண்டு தேசிய முன்னணி வேட்பாளராக களம் கண்ட மஇகா முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ சாமிவேலு 2008 ஆம்ஆண்டு பொதுத் தேர்தலில் அவர் தோற்கடிக்கப்படும் வரையில் இதே தொகுதியில் வெற்றி பெற்றார். தோட்டங்களும் விவசாயப்பகுதிகளும் கால்நடை வளர்ப்பு பகுதி யுமாக இருந்த சுங்கை சிப்புட் ஒரு மாநகருக்கு நிகரான அந்தஸ்தை பெற்றுள்ளது என்றால் அமைச்சர் என்ற நிலையில் சாமிவேலு ஏற்படுத்திய வசதிகள் தான் என்று பலர் நன்றி பெருக்கோடு கூறுகின்றனர். எந்தவொரு அரசு அலுவலையும் கோலக் கங்சார் மாவட்டத்திற்கு சென்றுதான் சுங்கை சிப்புட் மக்கள் தீர்க்க வேண்டும் என்ற நிலையை மாற்றி அனைத்து அரசு அலுவலகங்களையும் சுங்கை சிப்புட்டிற்கு அவர் கொண்டு வந்தார். கடந்த பொதுத்தேர்தலின் கணக்குப்படி மொத்தம் 51,596 பதிவுபெற்ற வாக்காளர்கள் இருக்கின்றனர். சுமார் 12,000 இந்திய வாக்காளர்கள் இருக்கும் வேளையில் அதில் 5,700 பேர் ம.இ.கா. உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிரச்சினைகள் இல்லாத நாடோ, நகரமோ, குடும்பமோ அல்லது மனிதரோ இல்லை என்பதை யாரும் மறுக்கமுடியாது. அதற்கு சுங்கை சிப்புட்டும் விதிவிலக்கல்ல .எனினும் அரசியல் மூலமாக எளிதில் தீர்த்துவிடக் கூடிய பிரச்சினைகளைக் கூட கவனிக்காமல் இருப்பதுதான் வேதனையாக உள்ள தென்று சுங்கை சிப்புட் மக்கள் குறைபட்டுக்கொள்கின்றனர். அமரர் துன் சம்பந்தன் மற்றும் டத்தோஸ்ரீ சாமிவேலு ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்ததோடு அமைச்சர்களாகவும் பொறுப்பு வகித்தனர். ஆனால் இந்தியர்களுக்காக பொது மண்டபம் ஒன்றை எழுப்பவேண்டுமென்ற எண்ணம் அவர்களுக்கு எப்படி வராமல் போனது என்று ரிம்பா பாஞ்சாங்கில் வசிக்கும் நடராஜு முனியாண்டி கேள்வி எழுப்பினார். இங்குள்ள தாமான் துன் சம்பந்தனில் இருக்கும் சுங்கை சிப்புட் மாநாட்டு மண்டபம் அருமையான வசதிகள் கொண்ட மண்டபம். டத்தோஸ்ரீ சாமிவேலு அவர்களால் கட்டப்பட்ட மண்டபம் என்றபோதிலும் அதை பொது மண்டபம் என்று கூறிவிட முடியாது. அது தொடக்கத்தில் சுங்கை சிப்புட் மக்களுக்காக கட்டப்படும் பொது மண்டபம் என்ற பெயரில்தான் அதன் நிர்மாணிப்புப் பணி தொடங்கியது. காலப்போக்கில் அது சாமிவேலு மண்ட பமாக மாறி, தற் போது அதன் உரிமையாளராக ஒரு சீனர் இருக்கிறார் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் செய் யப்பட்ட ஒரு புகாரின் வழி தெரியவந்துள்ளது. நான்கு நட்சத்திர ஹோட்டலுக்கு இணையான அந்த மண்டபத்தின் வாடகையாக வெ. 1,800.00 வசூல் செய்யப்படு கிறது. எனவே, வசதியற்ற இந்தியர்கள் அந்த மண்டபத்தைப் பயன் படுத்துவது சாத்தியப் படாத ஒன்றாகும். அந்த மண்டபத்தினால் சுங்கை சிப்புட்டில் உள்ள சாமானிய மக்களுக்கு எந்தவொரு பயனும் இல்லை. சாமானிய மக்களுக்கான ஒரு பொது மண்டபம் கட்டுவதில் கடந்த 34 ஆண்டு களாக சுங்கை சிப்புட் நாடாளு மன்ற உறுப்பினராக இருந்த சாமிவேலு எந்தவொரு அக்கறையும் காட்டாதது இங்குள்ள இந்தியர்களுக்கு ஒரு சாபக்கேடாகவே முடிந்தது. எனவேதான் அரசாங்கத்தால் கட்டப்பட்ட ஒரு பொது மண்டபம் தேவை யென்றும் அதன் வாடகை குறைவாகவே இருக்கும் என்று நடராஜு என்பவர் கூறினார். கம்போங் பங்காளி, ஜாலான் லிந்தாங், கம்போங் கோபால், கம்போங் பகார், பெலாக்காங் உக்காப்பி போன்ற புறம்போக்கு நிலங்களில் சுமார் 400க்கும் மேற்பட்ட இந்திய கும்பங்கள் வசிக்கின்றன. அவர்களுக்கு நிரந்த நிலப் பட்டாவோ அல்லது மாற்று நிலமோ வழங்கப்பட வேண் டுமென்று பல ஆண்டு களாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இதுவரை அவர்களின் நிலப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு பிறப்பதாகத் தெரியவில்லை என்று கமுனிங் இளைஞர் மன்றத்தின் தலைவர் தி. நடராஜன் தெரிவித்தார். அரசாங்க நிலம் என்பதால் மேம்பாட்டைக் காரணம் காட்டி நிலத்தை கையகப் படுத்தும் நடவடிக்கை எப்போது எடுக்கப்படுமோ என்ற அச்சத்தில் இங்கு வசிக்கும் மக்கள் இருப் பதாகவும் அவர் கூறினார். இவர்கள் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கின்றனர். சாலாக் பாருவில் இருக்கும் இந்தியர் மண்டபத்தின் நிலை பரிதாபமாக உள்ளதென்று இங்கு வசிக்கும் ஏ. சத்தியமூர்த்தி குறைபட்டுக்கொண்டார். மண் டபம் பயன்படுத்த முடியாத நிலையில் உடைபட்டும் புல்மண்டியும் கிடக்கிறது. அதனை எப்படி சீர்படுத்தி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரலாம் என்பதைக் குறித்து கவலைப்படாமல் இதனை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் சாவிக்கு சண்டையிடும் சில அரசியல் தலைவர்களின் செயல் வேதனை தருகிறது என்று சத்தியமூர்த்தி கூறினார். சாலாக் பாருவில் தமிழ்ப்பள்ளி கட்டப்படவுள்ளதாக பல ஆண்டுகளாகக் கூறப்பட்ட போதிலும் இங்கு பள்ளி எழும் வாய்ப்பு கனவாகிப் போய்விடுமோ என்றே எண்ண வேண்டியுள்ளது என்று இவ்வட்டார மக்கள் தெரிவித்தனர். இப்போது சங்காட் சாலக் தோட்டத்தில் தமிழ்ப்பள்ளி உள்ளது. இது வெகு தொலைவில் இருப்பதால் இங்குள்ள மக்கள் தங்கள் பிள்ளைகளை வேறு வழியின்றி அருகில் இருக்கும் சீனப்பள்ளிக்கு அனுப்புகின்றனர். இதனால் தமிழ்ப் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் அவர்கள் கூறினர். இவ்வட்டாரத்தில் பொது நூலகம் இல்லாததால் மாணவர்கள் மிகவும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். நூல்நிலையம் கட்டுவதற்காக நிலம் ஒதுக் கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பயிற்சி ஆசிரியரான கார்த்தி சந்திரன் தெரிவித்தார். இப் பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வு காணப்படவேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார். நீண்ட காலமாக இங்குள்ள மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சுங்கை சிப்புட் இந்து மயானத்தில் வெ. 18 இலட்சம் செலவில் மின் சுடலை கட்டப்பட்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் கட்டப்பட்டு ஓராண்டு காலமாகியும் இதுவரை அது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வராமல் இருப்பதன் மர்மம் என்னவென்று விஷ்ணு சந்திரன் கேட்டார். இதற்கு பலர் பலவிதமான காரணங்களைக் கூறிவருகின்றனர். எது எப்படி இருப்பினும் பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வு கண்டு மின்சுடலை பயன்பாட்டை உறுதிசெய்ய வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டார். கம்போங் தெர்சூசூன் சிம்பாங் ஜாலோங்கில் வீட்டுமனைகள் வழங்கி 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் பலர் வீடுகளைக் கட்டாமல் நிலத்தைக் காலியாகவே வைத்துள்ளனர் என்று இங்கு வசிக்கும் ஆர். கண்ணா கூறினார். இதனால் இங்கு பாம்பு, பூராண், கொசு போன்றவற்றால் ஆபத்தும் நோய்களும் உருவாகின்றன. காலியாக உள்ள நிலங்களில் வீடுகளைக் கட்டவேண்டும். இல்லையென்றால் நிலம் மற்ற நிலமில்லாதவர்களுக்கு நிலம் வழங்க சுங்கை சிப்புட் மாவட்ட மன்றம் முடிவெடுத்து அறிவிக்க வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். சாலாக் பாரு சுடுகாட்டுப் பராமரிப்புக்காக வெ.4,000 வெள்ளி வழங்கப்பட்டது. ஆனால், சாலாக் பாருவிலுள்ள இந்து மயானம் முறையாக பராமரிக்கப் படாமல் உள்ளது. எனவே, பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலப்பகுதியில் செம்பனை மரங்களை நட்டு அதில்வரும் வருமானத்தைக்கொண்டு மயானத்தை பராமரிக்கலாம் என்று ஆலோசனை கூறிய டத்தோஸ்ரீ எஸ்.கே. தேவமணி கடந்த 2013 ஆம் ஆண்டில் இங்குள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலய நிர்வாகத்திடம் வெள்ளி நாலாயிரம் மானியமும் வழங்கினார். ஆனால் இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் அந்தப் பணம் என்னவாயிற்று என்பதும் தெரியவில்லை என்று இங்கு வசிக்கும் சிலர் தங்கள் மன ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். தவிர, வேலை இல்லாப் பிரச்சினை, இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம், கால்வாய்களை சுத்தப்படுத்துதல், மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர், மருத்துவ உதவியாளர் பற்றாக்குறை போன்ற பல பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கவேண்டுமென்று சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கத்தின் தலைவர் வீ. சின்னராசு, கலைஞர் எம்.ஜி.ஆர். செல்வராஜு ஆகியோர் கேட்டுக் கொண்டனர். நாட்டின் 525 ஆவது புதிய தமிழ்ப்பள்ளி ஹீ வூட்டில் கட்டப்படும் என்று கடந்த 13 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் பொதுத் தேர்தலும் முடிந்தது. பள்ளி கட்டுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அதன் பின்னர் கடந்த 19-6-2017 இல் அந்தப் பள்ளி கட்டப்படுவதற்காக 12.4 மில்லியன் காசோலை ஒப்படைப்பு சடங்கு நடந்துள்ளது. பணம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் இந்த தமிழ்ப்பள்ளி கட்டப்படுவது உண்மையா? அல்லது தேர்தலுக்காக நடத்தப்படும் கண்துடைப்பு வேலையா என்று வினவுகின்றனர் சுங்கை சிப்புட் மக்கள். காரணம், பள்ளி கட்டப்படுவதாக கூறப்படும் இடத்தில் தற்போது சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தப் பள்ளி நிர்மாணிப்புக்கான விளம்பரப்பலகையில் எந்த குத்தகையாளர் அந்தப் பள்ளியை நிர்மாணிக்கிறார், பள்ளி கட்டுவதற்கு அங்கீரிக்கப்பட்டதற்கான எண் போன்ற விவரங்கள் இல்லை என்கின்றனர் அவர்கள். எனவே தான் இப்பள்ளி கட்டப்படுமா என்ற சந்தேகம் உள்ளதாக பலர் கருத்து தெரிவித்தனர். இந்தியர்களின் கலாச்சாரப் பின்னணியோடு சுங்கை சிப்புட் இருந்தாலும் மஇகாவின் சக்தி வாய்ந்த கோட்டையாகவும் மஇகா தேசியத் தலைவர்கள் வென்றத் தொகுதியாகவும் ஒரு காலத்தில் சுங்கை சிப்புட் விளங் கியது என்றாலும் சாமானிய மக்களின் அடிப்படை பிரச்சினைக்குத் தீர்வு காணாதது பெரும் ஏமாற்றமாகவே அமைகிறது.குறிப்பாக மேற்சொல்லப்பட்ட நிலப்பகுதிகளில் உள்ள இந்தியர்களுக்கு நிலங்கள் உறுதிப்படுத்தாமல் இருப்பது அவர்களின் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக் கியிருக்கிறது என்று பலர் புலம்புகின்றனர். பல குடும்பங்களின் வறுமைப்பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. தங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வருவார்களா என்று அவர்கள் மலேசிய நண்பனிடம் ஏக்கப் பெருமூச்சு விடுகின்றனர். இந்திய இளையோர்களுக்கு முறையான வேலை வாய்ப்புகள் இல்லாவிட்டால் முதியோர்கள் வாழும் நகரமாக சுங்கை சிப்புட் மாறிவிடும் என்றே அவர்கள் அஞ்சுகின்றன.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
நேர்முகத் தேர்வில் தோல்வி கண்டுள்ள 10 ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்கிடம்

அவர்களின் இந்நிலையைக் கண்டு பெற்றோர்கள்

மேலும்
img
டாக்டர் மகாதீருக்கு எதிராக சதியா? இதெல்லாம் பாஸின் திட்டமிட்ட பொய்

இம்மாதிரியான கூற்றுகள் பொய்யானவை

மேலும்
img
காட்சிப்பொருளாகவே கிடக்கும் சங்லூன் தமிழ்ப்பள்ளி

சங்லூன் தமிழ்ப்பள்ளியும் இடம்பெ ற்றுள்ளது

மேலும்
img
வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளா?

பதில் சொல்லுமா நம்பிக்கைக் கூட்டணி.

மேலும்
img
மக்கள் உடனடியாக மாற்றங்களைக் காண விரும்புகிறார்கள்.

எங்களுக்கு கால அவகாசம் தேவை.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img