பெண்களுக்கான கல்வியே மறுக்கப்பட்டுவரும் நிலையில், திருநங்கைகளுக்கு மேற்படிப்பை இலவசமாக வழங்க இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல் கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. திருநங்கைகளுக்கு மற்ற ஆண் பெண் பாலர்களுக்குக் கிடைப்பதுபோல எந்த ஒரு வாய்ப்பும் சலுகையும் கிடைப்பதில்லை. முக்கியமாக அவர்களை யாரும் மதிப்பதுகூட இல்லை. இந்நிலையில் சில திருநங்கைகள் மட்டும் முன்னேற்றம் கண்டு வருவது ஆங்காங்கே அதிசயமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் மற்றவர்களைப் போலவே திருநங்கைகளும் மதிக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கில், திருநங்கைகளுக்கு மேற்கல்வியை இலவச மாக வழங்க இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் முடிவு செய்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. மேலும் திருநங்கை களின் படிப்புக்கான அனைத்துக் கட்டணங்களிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும் என்று பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்
மேலும்வரும் 1ம் தேதி கன்னியாகுமரி வர
மேலும்முதல் கட்டமாக நாமும் ஒரு குழு அமைத்து வேலையை தொடங்கியதாக
மேலும்அந்த வழக்கில் 2018 டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் ஆர். காம் நிறுவனம்
மேலும்