திங்கள் 21, ஜனவரி 2019  
img
img

சிகாமட் தொகுதியை எங்கள் வசமாக்குவோம்.
திங்கள் 03 ஜூலை 2017 12:58:47

img

ஜொகூர் பாரு, ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியத்தின் சிகா மட் தொகுதி உட்பட வரும் பொதுத் தேர்தலில் ஜொகூரில் 15 நாடாளுமன்ற தொகுதிகளை கைப்பற்ற பக்காத்தான் ஹராப்பான் நம்பிக்கை கொண்டுள்ளது.லாபீஸ், சிகாமட், செகிஞ்சாங், மூவார், லேடாங், பாகோ, பாசீர் கூடாங், பூலாய், ஜொகூர் பாரு, தெப்ராவ், சிம்பாங் ரெங்கம், ஆயர் ஈத்தாம், தஞ்சோங் பியாய், ஸ்ரீ காடிங், பாரிட் சூலோங் ஆகியன அத்தொகுதிகளாகும். நாடு முழுவதும் 222 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. அவற்றுள் ஜொகூரில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 26 ஆகும். பக்காத்தான் ஹராப்பான் குறிவைத்துள்ள இந்த 15 தொகுதிகளிலும் கடந்த பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி 10 விழுக்காட்டு பெரும்பான்மையில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் குறிப்பாக சிகாமாட் தொகுதி, ம.இ.கா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியத்தின் தொகுதி யாகும். மூன்று தவணை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ள இவர், 13-ஆவது பொதுத்தேர்தலில் பி.கே.ஆரின் அதி செல்வாக்கு மிகுந்த தலை வரான சுவா ஜுய் மெங்கை 1,217 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்தார். 12-ஆவது பொதுத்தேர்தலில் இங்கு 2,991 வாக்குகளில் சுப்பிரமணியம் வெற்றி பெற்றார். 13-ஆவது பொதுத்தேர்தல் சமயத்தில் இங்கு மொத்தம் 47,009 வாக்காளர்கள் பதிவு பெற்றிருந்தனர். அவர்களில், 46% சீன வாக்காளர்களும், 44% மலாய், 10% விழுக்காடு இந்திய வாக்காளர்களும் ஆவர். பாகோ தொகுதியின் உறுப்பினர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் ஆவார். ஐந்து தவணை அவர் இங்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். முன்னாள் துணைப் பிரதமரான மொகிதீன் அம்னோவினால் நீக்கப்பட்டு தற்போது எதிர்க்கட்சி அணியில் இணைந்துள்ளார். 13-ஆவது பொதுத்தேர்தலில் 12,581 வாக்குகள் பெரும்பான்மையில் அவர் இத்தொகுதியில் வெற்றி பெற்றார். இம்முறை மொகிதீன் மீண்டும் இங்கு போட்டியிட மாட்டார் என்று வதந்தி நிலவுகிறது. லாபீஸ் தொகுதியில் அனைத்துலக வர்த்தகத் துறை துணை அமைச்சர் சீ தீ யோங், சிகிஞ்சானில் அம்னோ இளைஞரணி ஆட்சிக்குழு உறுப்பினர் அனுவார் மானாப், மூவாரில் பிரதமர் துறை துணை அமைச்சர் ரஸாலி இப்ராஹிம், லேடாங் தொகுதியில் ஹாமிம் சமூரி, பாசிர் கூடாங்கில் நொர்மாலா அப்துல் சாமாட், பூலாய் தொகுதியில் உள்துறை துணை அமைச்சர் நூர் ஜஸ்லான் முகமட், ஜொகூர் பாருவில் ஷாரிர் சாமாட், தெப்ராவில் ம.சீ.ச-வின் கூ சூ சியெங், சிம்பாங் ரெங்காமில் கெராக்கானின் லியாங் தெக் மெங், ஆயர் ஈத்தாமில் பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் வீ கா சியோங், தஞ்சோங் பியாய் தொகுதியில் ம.சீ.ச-வின் வீ ஜெக் செங், ஸ்ரீகாடிங் தொகுதியில் போக்குவரத்து துணை அமைச்சர் அப்துல் அஜிஸ் கப்ராவி, பாரிட் சூலோங் தொகுதியில் நொராய்னி அஹ்மட் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பத்துமலை வெள்ளி இரத ஊர்வலம் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 600 போலீஸ் அதிகாரிகள்.

தலைவர் டத்தோ மஸ்லான் லாஸிம்

மேலும்
img
18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஊரடங்கு?

இளையோர் மத்தியில் பசை நுகரும் பழக்கம் அபாயக் கட்டம்.

மேலும்
img
பூனையைக் கொன்ற மோகன்ராஜூக்கு 2 ஆண்டு சிறை.

போட்டுக் கொன்றதற்காக டாக்சி

மேலும்
img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img