வெள்ளி 22, பிப்ரவரி 2019  
img
img

தமிழ் உணர்பாளர்கள் மாநாட்டில் தமிழர்களை சிறுமைப் படுத்துவதா?
சனி 01 ஜூலை 2017 12:16:13

img

கே.வி.சுதன் கிள்ளான், தமிழ் உணர்வாளர்கள் மாநாடு என்ற போர்வையில் தமிழர்களை சிறுமைப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட தொடர்கூட்டத்தில் எதிர்மறையான கருத் துகள் பேசப்பட்டதால் சரமாரியான கேள்விகளுக்கு மத்தியில் கூச்சல் குழப்பம் வெடித்து இறுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அவையில் பெரும் சல சலப்பு நிகழ்ந்து கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஒருவரையொருவர் கைநீட்டிக்கொண்டு மோதும் தன்மையில் பயங்கர தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எங்கே கைகலப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாதியிலேயே கூட்டத்தை நிறுத்தினர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இங்கு கிள்ளான் தெங்கு கிளானா மின் புத்தகசாலை மண்டபத்தில் நிகழ்ந்தது. தமிழகப் பேச்சாளர்களைக் கொண்டு கடந்த வாரம் தமிழ் உணர்வாளர்கள் மாநாடு இங்கு நடைபெற்றது. அதன் தொடர் அங்கமாக எல்லா நகரங்களிலும் தமிழ் உணர்வாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்பில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு கூட்டம் தொடங்கி இரவு 11 மணிக்கு நிறைவு பெறுவதாக இருந்தது. ஆனால், கூச்சல், குழப்பம், சலசலப்பு வெடித்ததால் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தமிழர்கள் தொன்று தொட்டு ஒற்றுமை இல்லாத இனமென்றும் அவர்களால் ஒற்றுமையாக என்றும் வாழ முடியாது என்றும் திராவிடத்தால்தான் இவர்கள் ஒற்றுமைப்படுத்தப்பட்டார்கள் என்றும் திராவிட ஆட்சிகளில்தான் தமிழர் நாடு இந்தியாவில் வளங்கொழிக்கும் மாநிலமாக இருப்பதாகவும் திராவிடத்தாலும் திராவிடக் கட்சிகளாலும்தான் தமிழர்களுக்குப் பாதுகாப்பு வழங்க முடியும் என்று தமிழகத்திலிருந்து வந்த பேச்சாளர்கள் தங்களுக்கே உரிய பாணியில் பேசிக்கொண்டு இருந்த போது கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அந்தப் பேச்சாளர்களின் பேச்சை வன்மையாக கண்டித்து கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு தரப்பினர், மேடையில் பேசிய பேச்சாளர்களிடம் கேள் விகளைக் கேட்டுக் கூச்சலிட்டதைத் தொடர்ந்து அக்கூட்டத்தில் பதட்டமும் சலசலப்பும் ஏற்பட்டது. தமிழ் உணர்வாளர் மாநாட்டு கூட்டத்தில் தற்காலத் தமிழர் உணர்வு, குமரிக் கண்டத் தமிழர், என்ற தலைப்புகளைத் தொட்டுப் பேசாமல் திராவிடச் சிந்தனையைப் பரப்புவதா? என்று அவர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். பேருரையை நிகழ்த்திய தமிழகத்தைச் சேர்ந்த விடுதலை இராஜேந்திரன், பேராசிரியர் அ.மாக்ஸ் ஆகியோர் பார்வையாளர்களின் கடும் கூச்சலுக்கும் எதிர்ப்புக்கும் இடையில் தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அந்தப் பேச்சாளர்கள் மலேசியத் தமிழர்களின் ஒற்றுமையை சீர்க்குலைக்கும் தன்மை யில் பேசியதாக கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர் கடுமையாக குற்றஞ்சாட்டினர். மலேசியாவில் வாழும் இந்தியர்களில் சுமார் 83 சதவிகிதத்தினர் தமிழர்கள் என்ற பொதுவான கணிப்புக்கிடையில் இங்குள்ள தமிழர்கள் தங்களைத் தமிழர்களாக மட்டுமே அடையாளப்படுத்திக் கொள்ளும் நோக்கில் தமிழர் தேசியத்தை முன்னிறுத்தி முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இங்கு வந்துள்ள தமிழகப் பேச்சாளர்கள் நம் தமிழர்களை மூளைச் சலவை செய்து திராவிடம் எனும் சித்தாந்தத்தைத் தமிழர்களிடம் பரப் பும் தன்மையில் பேசுவது கடும் கண்டனத்திற்கு உரியது என்றனர். அக்கூட்டத்திற்கு வந்திருந்த மலேசியத் தமிழர்களின் தலைமைப் பொறுப்பாளர் எழி லன், மலேசியத் தமிழ்நெறி வாழ்வியல் இயக்கப் பொறுப்பாளர் பெருமாள், சிலாங்கூர் தமிழ்ச் சங்கத் தலைவர் எல்.சேகரன் உள்ளிட்ட தமிழர் சமூக இயக்கப் பொறுப்பாளர்கள் தமிழக பேச்சாளர்களின் எகத்தாளப் பேச்சுக்கு கடும் கண்டனக்குரல் எழுப்பினர். தமிழை காட்டுமிராண்டி மொழியென்றும் தமிழர்களைக் காட்டுமிராண்டிகள் என்றும் இன்னும் பல வழிகளில் சிறுமைப்படுத்திப் பேசியவர்களை, இந்தப் பேச்சாளர்கள் முன்னிலைப்படுத்தி மூளைச் சலவை செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று அவர்கள் எச்சரித்தனர். தமிழ் உணர்வாளர்கள் என்ற போர்வையில் தமிழகப் பேச்சாளர்கள் தொடர்ந்து நாடு தழுவிய நிலையில் இதே தன்மையில் கூட்டத்தை நடத்துவார்களேயானால் போலீஸில் புகார் செய்யப்படும் என்றும் அவர்கள் நினைவுறுத்தினர். இந்நிலையில் கூட்டத்தில் பதற்றம் அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதேபோன்று கடந்த புதன் கிழமை காப்பார் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற தமிழ் உணர்வாளர்கள் மாநாட்டு தொடர் கூட்டத்திலும் பார்வை யாளர்களின் சரமாரியான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தமிழகப் பேச்சாளர்கள் தடுமாறியதை தொடர்ந்து கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று கடந்த புதன் கிழமை காப்பார் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற தமிழ் உணர்வாளர்கள் மாநாட்டு தொடர் கூட்டத்திலும் பார்வை யாளர்களின் சரமாரியான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தமிழகப் பேச்சாளர்கள் தடுமாறியதை தொடர்ந்து கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மகாதீர் பதவி விலகவும் அன்வார் பதவியேற்கவும் வலியுறுத்தி தலைநகரில் பதாதைகள்.

அவ்வாறான கோரிக்கை நட வடிக்கை எதிர்தரப்பின் செயல்

மேலும்
img
தேர்தல் வாக்குறுதிகளை விவகாரம்: துன் மகாதீர் பதவி விலகவேண்டும்.  ஜொகூர் ஜசெக வலியுறுத்தல்.  

தேர்தல் கொள்கை அறிக்கை ஒரு வழிகாட்டிதான், வேதம் அல்ல

மேலும்
img
காப்பகத்தில் தங்கிவரும் சிறுவன்மீது கண்மூடித்தனமான தாக்குதல். தாயார் போலீசில் புகார்.

அந்த சிறுவனை அந்த காப்பகத்தில் பணிபுரிந்து

மேலும்
img
திருமணமாகாமல் தனித்து வாழும் குறைந்த வருமானத்தைப் பெறுவோருக்கும்  பி.எஸ்.எச் உதவித் தொகை.

இதற்கு 30 கோடி வெள்ளி செலவாகும்.

மேலும்
img
மின்தூக்கியில் மாதிடம் கொள்ளையிட்டவன் குண்டர் கும்பலைச் சேர்ந்தவன். போலீசார் அம்பலப்படுத்தினர். 

அபாயகரமான குண்டர் கும்பலைச் சேர்ந்தவன்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img