வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

ஊழலை ஒழிக்க மாபெரும் பேரணி.
வியாழன் 29 ஜூன் 2017 11:56:13

img

கோலாலம்பூர், 1 மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1 எம்டிபி) மீதான குறை கூறல் தொடர்பில் நடவடிக்கை ஏதும் இல்லாத நிலையில் அந்த அரசு முதலீட்டு நிறுவனம் தொடர்பான விவகாரங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் பக்காத்தான் ஹராப்பான் நாடளாவிய சூறாவளிப் பயணத்தை ஜூலை 6இல் தொடக்க உள்ளதாக டத்தோஸ்ரீ டாக் டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் கூறியுள்ளார். 1 எம்டிபியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வாங்கப்பட்டதாகக் கூறப்படும் வெ.54 கோடி அமெரிக்க டாலர் (வெ.230 கோடி) பெறுமான சொத்துக்களை பறிமுதல் செய்ய அமெரிக்க நீதித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதையடுத்து இந்த இரு மாத கால பிரச்சார சுற்றுப் பயணத் திற்கு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. உத்தேச பிரச்சார சுற்றுப் பயணம் எல்லா மாநிலங்களிலும் மேற்கொள்ளப்படும். அப்பிரச்சார சுற்றுப் பயணம் 6.7.2017 இரவு 9 மணிக்கு கப்பளா பத்தாஸ், டேவான் ஜே கேகேகே பெனாகாவில் தொடங்கும். செப்டம்பரில் மக்கள் அமைதிப் பேரணி ஒன்றுடன் நிறைவு பெறும் என எதிர்க்கட்சித் தலை வரான வான் அஸிஸா நேற்று நாடாளுமன்றத்தில் தமது அலுவலகத்தில் கூறியுள்ளார். இப்பேரணி தொடர்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பாஸ் கட்சி தவிர இதர எல்லா எதிர்க்கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். பிரதமர் நாடாளுமன்றத்தைக் கூட்டி 1 எம்டிபி தொடர்பில் வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனும் எங்களின் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவோம்.1 எம்டிபி தொடர்பில் புலனாய்வை வலியுறுத்தி அமலாக்க அமைப்புகளிடம் புகார் செய்வோம் என்றும் வான் அஸிஸா கூறியுள்ளார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
img
முடிவில் மாற்றமில்லை. தண்ணீர் விலை அதிகரிக்கும்.- அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்

தண்ணீர் கட்டண அதிகரிப்புக்கு பெரும்பாலான

மேலும்
img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img