செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

ஸ்கூடாயில் தமிழுக்கு விழா எடுத்த தமிழர்கள்.
புதன் 28 ஜூன் 2017 15:53:34

img

எம்.கே.வள்ளுவன் ஸ்கூடாய், தமிழுக்கு விழா எடுக்கும் வகையில் ஸ்கூடாய் இந்திய கல்வி சமூக நல மேம்பாட்டு இயக்கம் ஏழாம் ஆண்டாக தமிழர் சார்ந்த நிகழ்வுகள் கொண்டு ஒரு நாள் விழாவாக இங்கு தாமான் யூனிவர்சிட்டி பொது மண்டபத்தில் நடத்தியது. விழாவிற்கு சிறப்பு பிரமுகராக கலந்து கொண்ட ஜொகூர் மந்திரி புசாரின் சிறப்பு அதிகாரி டத்தோ எம்.எம். சாமி ஒரு காலத் தில் பட்டி தொட்டி களிலெல்லாம் கொண்டாடப்பட்ட தமிழர் திருநாள் விழா மீண்டும் புத்துயிர் பெற பொது இயக்கங்கள் தங்கள் ஆண்டு நடவடிக்கைகளில் ஒன்றாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். மலேசியாவில் இந்தியர்களின் சதவிகிதம் மிகவும் குறைவாக இருக்கும் நிலையில் அவர்களிடையே ஒற்றுமையை வளர்க்க இதுபோன்ற விழாக்கள் ஒற்றுமை விழாவாக கொண்டாடப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். இயக்கத்தின் ஆண்டு விழா வான தமிழர் திருநாள் விழாவிற்கு ஆதரவு நல்கிய அனைவருக்கும் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் பி.பெருமாள் நன்றியை தெரிவித் துக் கொண்ட வேளையில் இரவு நிகழ்வில் முத்தாய்ப்பாக தமிழ் செய்த ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியர்கள் தமிழவேள் விருது வழங்கியும் சிறப்பிக்கப்பட்டது. தமிழர்களில் உணர்வைத் தூண்டும் வகையில் டாக்டர் சு.தமிழ்ச்செல்வனின் தமிழ்ப் பேருரை கூட்டத்தினரை வெகு வாக கவர்ந்தது. இந்தத் தமிழர் திருநாள் விழாவில் தமிழ்ப்பள்ளி மாண வர்களின் படைப்புக்கள் அதிகம் இடம்பெற்ற வேளையில் தமிழாசிரியர்களின் பங்கும் அதிகமாக இருந்தது. கேலாங் பாத்தா மசீச தலைவர் டத்தோ ஜேசன் தியோ, கேலாங் பாத்தா தேசிய முன்னணி செயலாளர் யூனோஸ் பின் மாலேக், மாநிலக் கல்வி இலாகா வின் சி.பாண்டுரெங்கன், கே.நட ராஜா, ஆசிரியர் பயிற்சி கல்லூரி விரிவுரையாளர் ஆர்.சேதுபதி, தலைமையாசிரியர்கள் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளா?

பதில் சொல்லுமா நம்பிக்கைக் கூட்டணி.

மேலும்
img
மக்கள் உடனடியாக மாற்றங்களைக் காண விரும்புகிறார்கள்.

எங்களுக்கு கால அவகாசம் தேவை.

மேலும்
img
சிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

சமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்

மேலும்
img
மார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.

இறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை

மேலும்
img
நீதித்துறையில் தவறுகள்? அரசாங்கம் ஆராயும்.

அரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img