கோலாலம்பூர், பகடிவதை கொலைகள் நிறுத்தப்பட வேண்டும். பள்ளிக்கூடங்களில் பகடிவதை சம்பவங்களை கட்டுப்படுத்த சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று பெற்றோர் நடவடிக்கை குழு ஒன்று வலியுறுத்துகிறது. பகடிவதை செய்யும் மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும், தங்களையும் பாதிக் கப்பட்ட மாணவர்களையும் பாதுகாப்பதற்கும் மலேசியாவில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று மெக்பாய் எனும் மலாக்கா பெற்றோர் நடவடிக்கை இயக்கம் குறிப்பிட்டுள்ளது. இம்மாதிரியான ஒரு சட்டம் இப்போது மிகவும் அவசியமாகின்றது.காரணம், தாங்கள் பழிவாங்கப்படலாம் என்ற அச்சத்தில் பிரச்சினைக்குரிய மாண வர்கள் மீது ஆசிரியர்கள் நடவடிக்கை எடுப்பது இல்லை. சில ஆசிரியர்களின் கார்கள் வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. இரவில் அவர் களின் வீடுகளில் கற்கள் எறியப்பட்டுள்ளன. பிள்ளைகள் அச்சுறுத்தப்பட்டிருக்கின்றனர். தொலைபேசியில் தொல்லைகள் போன்று பல்வேறு மிரட்டல் களை ஆசிரியர்கள் எதிர்நோக்குகின்றனர் என்று கூறுகிறார் அவ்வியக்கத்தின் தலைவர் மாக் சீ கின். இம்மாதிரியான சூழ்நிலைகளில் ஒழுங்கு நடவடிக்கை ஆசிரியர்களுக்கு அவர்களின் தலைமை ஆசிரியர்களிடமிருந்து போதிய ஆதரவு கிடைப்பதில்லை. எனினும், சட்ட ரீதியில் தங்களுக்கு பாதுகாப்பு இருந்தால் எவ்வித அச்ச உணர்வும் இன்றி அவர்களால் செயல்பட முடியும் என அவர் கருத்துரைத்தார். பத்து கவான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு, புக்கிட் குளுகோர் ராம்கர்ப்பால் சிங், புக்கிட் மெர்தாஜம் ஸ்டீவன் சிம் ஆகியோர், பகடி வதைக்கு எதிராக சட்டம் இயற்றும்படி கடந்த வெள்ளிக்கிழமை அரசாங்கத்தை வலியுறுத்தினர். மாணவர்களை கட்டுப்படுத்த பள்ளிகளுக்கு அதிகா ரமளிக்கப்பட வேண்டும் என்று 2006-ஆம் ஆண்டு இங்கிலாந்து கல்விச் சட்டத்தை அவர்கள் மேற்கோள் காட்டினர். பகடிவதைக்கு ஆளாகும் பிள்ளைகள் மற்றும் பகடிவதை செய்பவர்களால் மிரட்டலுக்கு ஆளாகும் ஆசிரியர்களுக்கு அவசர பாதுகாப்பு வழங்கப்பட வேண் டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். பிள்ளைகளின் தவறுகளை மறைக்க நினைப்பது பெற்றோரின் இயல்பு. பெரும்பாலான சூழலில் ஆசிரியர்களையே அவர்கள் குறை கூறுவார்கள். இதனை தடுப்பதே இதற்கான நீண்ட கால தீர்வாகும். ஆகவே, சட்டம் இயற்றப்படுவது மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வாகும் என்று மாக் மேலும் கூறினார். பகடிவதைக்கு ஆளாகி மரணமடைந்த டி.நவீன், தற்காப்பு பல்கலைக்கழக மாணவர் ஸுல்ஃபார்ஹான் ஒஸ்மான் ஆகியோரை அவர் நினைவு கூர்ந்தார்.
அவ்வாறான கோரிக்கை நட வடிக்கை எதிர்தரப்பின் செயல்
மேலும்தேர்தல் கொள்கை அறிக்கை ஒரு வழிகாட்டிதான், வேதம் அல்ல
மேலும்அந்த சிறுவனை அந்த காப்பகத்தில் பணிபுரிந்து
மேலும்இதற்கு 30 கோடி வெள்ளி செலவாகும்.
மேலும்அபாயகரமான குண்டர் கும்பலைச் சேர்ந்தவன்
மேலும்