செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

இந்த ஆட்சியைப் பற்றி நான் சாெல்லியா உங்களுக்குத் தெரியணும்?'- நடிகை கௌதமி கிண்டல்
சனி 24 ஜூன் 2017 17:47:23

img

'இந்த ஆட்சியைப் பற்றி நான் சாெல்லியா உங்களுக்கு தெரியனும்?' என்று நக்கல் செய்துள்ளார் நடிகை கௌதமி. கரூரில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இவ்வாறு தெரிவித்தார். கரூர் ராேட்டரி கிளப்பும், ஐயப்பா சேவா சங்கமும் இணைந்து, கரூர் நகராட்சியில் கடைநிலையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மார்பக புற்றுநாேய் பற்றிய விழிப்புஉணர்வு நிகழ்ச்சி்க்கு ஏற்பாடு செய்திருந்தனர். கரூர் வி.என்.சி மஹாலில் இன்று நடந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக நடிகை கௌதமி அழைக்கப்பட்டிருந்தார். நிகழ்ச்சிக்கு முன்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய நடிகை கௌதமி, 'பெண்களுக்கு, குறிப்பாக நகராட்சிகளில் துப்புரவுப் பணி உள்ளிட்ட பணிகளைச் செய்யும் பெண்களுக்கு மார்பக புற்றுநாேய் பற்றிய விழிப்புஉணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதில், கலந்து காெள்ளவே இங்கு வந் துள்ளேன். பெரும்பாலான பெண்களுக்கு அது பற்றிய பாேதிய விழிப்புஉணர்வு இருப்பதே இல்லை. படித்த பெண்களே அதில் அக்கறை காட்டாமல் இருக் கிறார்கள். அரசாங்க வேலையில் இருப்பவர்களே அசால்டாக இருக்கிறார்கள். அது எதனால் வருகிறது, அதை வருமுன் தடுப்பது எப்படி, அதன் ஆரம்ப அறிகுறிகள் என்னென்ன என்று எதுவும் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். குறிப்பாக கிராமப் பகுதி பெண்களுக்கு அதைப் பற்றி தெரிந்து காெள்வதற்குகூட எந்த வாய்ப்பும் இல்லாத சூழ்நிலையே நிலவுகிறது. அதனால், பெண் களுக்கு மார்பகப் புற்றுநாேய் பற்றிய விழிப்புஉணர்வு தமிழ்நாடு முழுக்க ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கான முதல் முன் முயற்சிதான் இந்த நிகழ்ச்சி' என்றவர், அரசியல் விவகாரங்களுக்கு வந்தார். அப்புறம், 'இந்த ஆட்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்று நீங்க கேட்கிறீங்க. இந்த ஆட்சியைப் பற்றி நான் சாெல்லியா உங்களுக்கு தெரியணும்?. நீங் கதான் இந்த ஆட்சி எப்படி நடக்குதுன்னு பார்த்துகிட்டு இருக்கீங்களே. உங்களுக்கு எல்லாமே தெரியுமே. நம் மாநில மக்கள் எல்லாருக்குமே தெரியுமே. உங்களுக்கு தெரியாததா எனக்கு தெரியப் பாேவுது?!' என்றார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயார்!

எல்லையில் வெடி பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த தீவிரவாதிவிமானங்கள்

மேலும்
img
ஒவ்வொருவரும் 20 பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தாலே ஆட்சியை பிடித்து விடுவோம்! உ.பி.களுக்கு கட்டளையிட்ட ஸ்டாலின்!!

பூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்

மேலும்
img
ராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்

40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்

மேலும்
img
அவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்!’’ - தே.மு.தி.க கெடுபிடி

கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்

மேலும்
img
மேலிட உத்தரவா? நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்!

இத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img