சிரியாவின் ஐஎஸ்ஐஎஸ் முகாம்கள் மீது மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்தவாறே ரஷ்யா போர்க்கப்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சிரியாவில் உள்ள பல நகரங்களைக் கைப்பற்றி அரசுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்யா, துருக்கி, இஸ்ரேல் போன்ற நாடுகள் உதவுவதாக அறிவித்திருந்தன. இதனடிப்படையில், சிரியாவில் ஆயுதப் பதுக்கல் முகாம் ஒன்றினை ரஷ்யா போர்க்கப்பல் ஏவுகணை மூலம் தாக்கியுள்ளது. சிரியாவில் ஹமா மாகாணத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் முகாம் பெரியளவில் அமைந்திருப்பதாக வந்த ஆதாரத்தின் அடிப்படையில் ரஷ்ய போர்க்கப்பல் தாக்குதல் நடத்தி முகாம்களை தகர்த்துள்ளது. மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்தபடியே நடத்தப்பட்ட இத்தாக்குதல் குறித்து துருக்கி, இஸ்ரேல் ராணுவத்துக்கு முன்னறிவிப்பு செய்துவிட்டதாகவும், அமெரிக்காவிடம் மட்டும் தகவல் தெரிவிக்கவில்லை என்றும் ரஷ்யா அறிவிப்பு வெளி யிட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் ரஷ்ய போர்க்கப்பல் ஒன்றும், நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டது என்றும் தீவிரவாத முகாம்கள் மீது ஆறு ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும் ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. சிரியாவில் உள்நாட்டு போர் வலுவடைந்து வரும் நிலையில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் அச் சுறுத்தல்களும் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதாகவே கூறப்படுகிறது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள உயிரியல்
மேலும்பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் சர்கோதா
மேலும்இங்கிலாந்து தலைநகர் லண்டனின் வடகிழக்கு
மேலும்பாகிஸ்தானில் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், வணிக வளாகங்கள்
மேலும்விண்கல் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தது.
மேலும்