வெள்ளி 21, செப்டம்பர் 2018  
img
img

மிரட்டி பணம் பறித்ததாக 8 போலீசார் மீது விசாரணை
சனி 24 ஜூன் 2017 12:57:32

img

கோலாலம்பூர், மிரட்டி பணம் பறித்ததாக சந்தேகிக்கப்படும் எட்டு போலீஸ் வீரர்கள் மீது போலீசார் முழுமையான புலன் விசாரணை மேற்கொள்வர். புக்கிட் அமானின் உயர்நெறி பொது நன் னடத்தை துறை இந்த விவகாரத்தை தற்போது புலன் விசாரணை செய்து வருவதாக தேசிய போலீஸ் படையின் துணைத் தலை வர் டான்ஸ்ரீ நூர் ரஷிட் இப்ராஹிம் கூறினார். அம்பாங் ஜெயா போலீஸ் மாவட்டத்தைச் சேர்ந்த போக்குவரத்து போலீஸ் வீரர்களுக்கு சொந்தமான ஒரு மேசையின் அடியில் சுமார் 18,000 வெள்ளி இருக்க கண்டு பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் அறையில் இருந்த எட்டு போலீஸ் வீரர்கள் புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்கள். ஆனால், இதில் சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றார் அவர். வெளிநாட்டினரை மிரட்டி பறிக்கப்பட்ட பணம் இது என நாங்கள் நம்புகிறோம் என்று நூர் ரஷிட் கூறினார். புக்கிட் அமானில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பதவி ஒப்படைப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் இதை கூறினார். சந்தேகப் பேர்வழிகள் புலன் விசாரணைக்கு உட்படு த்தப்பட் டிருந்தபோதிலும், அவர் கள் தங்களுடைய பணியில் மீண் டும் ஈடுபட அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார். தவறுகள் நடந்திருப்பதாக புலன் விசாரணையில் தெரிய வந்தால் நாங்கள் தக்க நடவடிக்கை எடுப்போம் என்று நூர் ரஷிட் குறிப்பிட்டார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
img
நஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.

இன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்

மேலும்
img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
img
விஷத்தன்மையிலான மதுபானம். மரண எண்ணிக்கை 23 ஆக உயர்வு. மதுபானக் கடைகளில் அதிரடிச் சோதனை.

அஞ்சப்படும் வேளையில் சம்பந்தப்பட்ட வகையைச்

மேலும்
img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img