செவ்வாய் 23, ஏப்ரல் 2019  
img
img

பள்ளித்திடலை பயன்படுத்த அனுமதி மறுத்ததால் குண்டர் கும்பல் சின்னத்தை பதித்த அவலம்.
சனி 24 ஜூன் 2017 12:01:19

img

பெட்டாலிங்ஜெயா, இரவு நேரத்தில் மதுபானம் குடிக்கவும் விருந்து நடத்தவும் பள்ளித் திடலை பயன்படுத்துவதில் இருந்து தடுக்கப்பட்ட இளைஞர்கள் சிலர், பள்ளியின் சுவர்களில் தங்களுடைய குண்டர் கும்பல் சின்னத்தை வண்ணக் கலவையைக் கொண்டு வரைந்தனர். இச்சம்பவம் சித்தியவானில் உள்ள ஒரு பள்ளியில் நிகழ்ந்தது. பள்ளி சுவர்களில் வரையப்பட்டிருந்த சின்னத்தை வைத்து பார்க்கையில், அந்த இளைஞர்கள் கேங் 04 குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படு வதாக லாடாங் சுங்கை வாங்கி தமிழ்ப் பள்ளியின் பணியாளர் கூறியதாக தி ஸ்டார் ஆன்லைன் செய்தியில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. பள்ளித் திடலை இரவு நேரத்தில் தங்களுடைய சொந்த விளையாட்டு மைதானமாக பயன்படுத்துவதில் இருந்து அந்த இளைஞர்களை தடுத்து நிறுத்துவதற்காக சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. சுவர்கள் எழுப்பப்பட்டபோது, அந்த இளைஞர்கள் பள்ளி அதிகாரிகளை ஆபாசமான வார்த்தைகளால் திட்டினர். நாங்கள் அவர்களுடைய எல்லைக்குள் நுழைந்து விட்டதாக அவர்கள் கருதினர் என்று தி ஸ்டார் ஆன்லைன் அந்த பணியாளர் கூறியதாக குறிப்பிட்டது. அந்த இளைஞர்கள் பீர் போத்தல்களை திடலிலேயே போட்டுவிட்டு சென்று விடுகின்றனர். இச்சம்பவம் பல ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது.லாடாங் சுங்கை வாங்கி, கம்போங் டேராலிக்,தாமான் நேசா போன்ற இடங்களில் குண்டர்தனம், போதைப் பொருள் மற்றும் மதுபான பழக்கம் போன்ற பிரச்சினைகளுக்கு பெயர் போனவை என்று அந்த பணி யாளர் கூறினார்.பள்ளி அதிகாரிகள் மட்டு மின்றி குடியிருப்பாளர்களும் அச்சத்தில் இருக்கிறார்கள். அந்த இளைஞர்கள் கட்டுக்கடங்கா வகையில் செயல்படும்போது அவர்கள் மௌனமாக இருந்து விடுகிறார்கள். இளைஞர்கள் சிலர் தனது வீட்டிற்கு அருகே அமர்ந்து இரவு முழுவதும் உரத்த இசையுடன் மதுபான விருந்து நடத்துவது வழக்கமாகிவிட்டதாக குடியிருப் பாளர்களில் ஒருவர் கூறினார்.அவர்களது செயல்கள் குறித்து கேள்வி கேட்ட ஒருவர் அந்த இளைஞர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தையும் அந்த குடியிருப் பாளர் நினைவுகூர்ந்தார். அருகிலுள்ள ஒரு மதுபானக் கடை அவர்களுக்கு மலிவான மதுபானத்தை விற்பதாக நம்பப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார். இந்த இளைஞர்களில் சிலரை போலீசார் கைது செய்ததாக கிராமத் தலைவர் கூறினார். தாமான் நேசாவிலும் லாடாங் சுங்கைவாங்கியிலும் சில கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்பது எனக்கு தெரியும். ஆனால், குடியிருப்பாளர்கள் போலீசில் புகார் செய்தால் நிலைமை மேலும் மோசமடையும் என்ற அச்சத்தில் புகார் செய்யவில்லை என்று அந்த கிராமத் தலைவர் கூறியதாக தி ஸ்டார் ஆன்லைன் தெரிவித்தது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
முதல் முறையாக தலைமை நீதிபதியாக ஒரு பெண்

ஒருவர் தெங்கு மைமூன். 2006 ஆம்

மேலும்
img
அந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.

தலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று

மேலும்
img
2,200 இடங்கள், 700 ஆகக் குறைப்பு: இந்தியர்களின் வாய்ப்பைக் பறித்தது ஏன்?

700 இடங்களை மட்டுமே தற்போது வழங்கியிருப்பது

மேலும்
img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img