வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

சிலிம் ரிவரில் எப்போது மின்சுடலை கட்டப்படும்?
வியாழன் 22 ஜூன் 2017 15:35:33

img

எஸ்.எஸ்.பரதன் சிலிம் ரிவர், இவ்வட்டாரத்தில் சடலங்களை தகனம் செய்வதற்கான மின்சுடலை ஒன்று கட்டப்பட வேண்டும் என பல்லாண்டுகளாக கோரிக்கை விடுத்திருந்தும் இன்னும் ஏன் தீர்வு காணப்படவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். தஞ்சோங் மாலிமிலிருந்து பீடோரை உள்ளடக்கிய தஞ்சோங் மாலிம் தொகு தியில் மட்டு மல்லாது தாப்பா வரை மின்சுடலை இல்லாததால் இவ்வட்டார மயானங்களில் விறகுகளைக் கொண்டு பிரேதங்களை எரிக்க வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டுள்ளதாக அருகிலுள்ள குளுனி தோட்டத்தில் வசிக்கும் சா.தர்மலிங்கம் (வயது 64) கூறினார். விறகுகளைக் கொண்டு பிரேதங்களை எரிப்பதால் மழைக் காலங்களில் பலவித சிக்கல்களை எதிர்நோக்க வேண்டி யுள்ளதாக இங்கு வசிக்கும் க.கணே சன் தெரிவித்தார். பிரேதங்களை எரிக்கும் கொட்டகைகள் எந்தவொரு அடைப்பும் இல்லாமல் வெறும் கூரைகள் மட்டும் இருப்பதால் மழைநீர் பட்டு விற குக் கட்டைகள் ஈரமாகி விடுவதால் பிரேதங்கள் முற்றாக எரிவதற்கு அதிக நேரம் பிடிப்பதாகவும் அவர் கூறினார். இவ்வட்டாரத்தில் மின் சுடலைகள் இல்லாததால் பிரே தங்களை தகனம் செய்ய வடக்கே சுமார் 80கிமீ தொலை விலுள்ள கம்பார் அல்லது 100கிமீ தொலை விலுள்ள ஈப்போ அல்லது தெற்கே 50கிமீ தொலைவிலுள்ள செரண்டாவிலுள்ள மின்சுடலைகளுக்குத்தான் கொண்டு செல்ல வேண்டியுள்ளது என இங்குள்ள தாமான் சரோஜாவில் வசிக்கும் வ.ராமசாமி (72 வயது) தெரிவித்தார்.சில சமயங்களில் ஒரே நாளில் இரு இறப்புகள் ஏற்படும் வேளை யில் இடவசதி குறைவினால் இரு பிரேதங்களை தகனம் செய்வதில் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் அவர் கூறினார். தஞ்சோங் மாலிம் நாடாளு மன்ற தொகுதி காலங்காலமாக தேசிய முன்னணியின் கோட்டை யாக விளங்கி வருகிறது. பேராங் மற்றும் சிலிம் தொகு திகள் இரண் டுமே தேசிய முன்னணியின் வசம் இருக்கின்றது. இத்தொகுதியில் நிலவும் மின்சுடலைப் பிரச்சினைக்கு இங்குள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்வு காண வேண்டும் என சிலிம் வில் லேஜை சேர்ந்த த.முனியாண்டி தெரிவித்தார். தேர்தல் காலத்தில் மட்டும் வாக்குறுதிகளை அள்ளி வீசுவதை நிறுத்தி, அவர்களுக்குத் தேவையான உத விகளை வழங்கிட அனைத்து அரசியல் கட்சிகளும் முன் வரவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
img
முடிவில் மாற்றமில்லை. தண்ணீர் விலை அதிகரிக்கும்.- அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்

தண்ணீர் கட்டண அதிகரிப்புக்கு பெரும்பாலான

மேலும்
img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img