img
img

என் கடினமான் உழைப்பில் நான் வெற்றிபெற்றேன். லாவண்யா பெருமிதம்
வியாழன் 22 ஜூன் 2017 13:14:29

img

வெற்றி நம் வாசலை ஒரு நாள் நிச்சயம் தட்டும் என தேசிய அளவில் நடைபெற்ற நாட்டுப் பற்றை வெளிப்படுத்தும் செனி நெகாராகூ ஓவியப் போட்டி யின் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான போட்டியில் முதல் நிலையில் வெற்றி வாகை சூடிய மாணவி லாவண்யா முரளி கூறுகிறார். நேற்று முன்தினம் தலைநகரில் நடைபெற்ற இந்த பரிசளிப்பு நிகழ்வின் போது பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பிடமிருந்து 5 ஆயிரம் வெள்ளிக்கான முதல் பரிசை பெற்றபோது உள்ளம் பெரும் ஆனந்தத்தில் மூழ்கிய தாக ஜொகூர்பாரு கான்வெண்ட் இடைநிலைப்பள்ளியின் 4ஆம் படிவ மாணவியுமான லாவண்யா முரளி தெரிவித்தார். தன் பெற்றோர் தான் மூன்று வயதாக இருக்கும் போதே ஓவிய வகுப்புகளில் பங்கு கொள்ள தூண்டியதன் அடிப்படையில் ஓவியத் துறையில் மிகுந்த ஆர் வம் கொண்டதாக குறிப்பிட்ட அவர் சிறுவயது முதற்கொண்டே ஆங்காங்கு நடக்கும் ஓவியப் போட்டிகளில் பங்குகொண்டு வெற்றி வாகை சூடியதையும் நினைவு கூர்ந்தார். மொத்தம் 10 ஆயிரத்து 126 பள்ளிகளிலிருந்து சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த ஓவியப் போட்டியில் பங்கு கொண்டதாக குறிப்பிட்ட லாவண்யா முரளி மூன்று பிரிவுகளுக்கான போட்டிகளில் இடைநிலைப்பள்ளிகளின் வெற்றியாளராகதான் அறிவிக் கப்பட்டபோது ஒரு இந்திய மாணவி தேசிய அளவில் வெற்றி பெற்றதை மிகவும் பெருமையாக எண்ணிக் கொண்டதாக குறிப்பிட்டார். ஓவியத் துறையிலும் முன்னேற முடியும் என்பதற்கு தான் ஒரு சான்று என குறிப்பிட்ட லாவண்யா முரளி ஓவியத்துறை இந்திய மாணவர்களுக்கு கை வந்த கலையாக இருப்பதால் இத்துறையை இந்திய மாண வர்கள் புறக்கணித்து விடக் கூடாது எனவும் கேட்டுக் கொண்டார்.தன் தந்தை எஸ்.முரளி தாயார் சுஜாதா மேனன் ஆகியோருக்கு தான் எப்போதும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாக தெரி வித்த அவர், தனது பெற்றோரின் துணையின்றி ஊக்க மின்றி தான் வெற்றி பெற முடியாது எனவும் குறிப்பிட்டார். ஓவியத் துறையில் பட்டம் பெற வேண்டும் என்பது தனது லட்சியம் என குறிப்பிட்ட லாவண்யா முரளி தனது வெற்றியை பெற்றோருக்கும் இந்திய சமு தாயத்திற்கும் பகிர்ந்தளிப்பதாகவும் குறிப்பிட்டார்.இதனிடையே தனது மகளின் வெற்றியை பெருமையுடன் குறிப்பிட்ட ஜொகூர்பாரு அருள்மிகு இராஜமாரியம்மன் தேவஸ்தான பொருளாளருமான லாவண்யாவின் தந்தை எஸ்.முரளி மகளின் வளர்ச்சிக்கு தன் மனைவி சுஜாதா மேனன் பெரும் பங்காற்றியுள்ளதாக குறிப்பிட்டார். சிறு வயதிலேயே வரைவதில் காட்டி வந்த ஆர்வம் காரணமாக அத்துறையில் அவருக்கு தாங்கள் ஊக்கம் காட்டி வந்ததாக குறிப்பிட்ட எஸ்.முரளி நாட் டின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானின் படத்தை வரைந்து போட்டிக்கு அனுப்பியதன் வழி இந்த வெற்றியை அவரால் பெற முடிந்ததாக குறிப் பிட்டார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
img
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.

கல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை

மேலும்
img
தபால் நிலைய அறிவிப்பில் தமிழுக்குப் பதிலாக வங்காள மொழி?

ஆங்கிலம், சீன மொழிக்கு அடுத்து வங்காளதேச மொழி

மேலும்
img
ரந்தாவ் இடைதேர்தல் முடிவு எதிர்பார்க்கப்பட்டதொன்றுதான்.

மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தில் இது மாற்றம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img