வியாழன் 20, செப்டம்பர் 2018  
img
img

தந்தை இறந்தது தெரியாமல் உடலில் படுத்து விளையாடிய பிள்ளை!
புதன் 21 ஜூன் 2017 14:07:15

img

தந்தை இறந்ததுகூடத் தெரியாமல் அவரின் உடலில் படுத்துக்கொண்டு விளையாடிய மகனைப் பார்த்து ஊர்மக்கள் கண்கலங்கினர். இந்த நெகிழ்ச்சி சம்பவம் கரூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், கொசூர் கிராமத்திலுள்ள கஸ்பா கடை வீதியில் வசித்து வந்தவர் சின்னகோப்பா (50). கலப்புத் திருமணம் செய்து கொண்ட சின்னகோப்பாவுக்கு இரண்டு வயதில் தவசுமணி என்ற மகன் இருக்கிறான். கலப்புத் திருமணம் செய்து கொண்ட காரணத்தால் அவரை ஊரை விட்டு ஒதுக்கிவைத்தனர் ஊர்மக்கள். மனைவி இறந்துவிட்டதால்சின்னகோப்பா தனது மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்தநிலையில், உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த சின்னகோப்பா நேற்று படுத்த படுக்கையிலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து ஊர்மக்கள் அங்கு வந்துள்ளனர். அப்போது, தந்தை இறந்ததுகூட தெரியாமல் அவரது உடலில் படுத்துக்கொண்டு சிறுவன் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்து ஊர்மக்கள் கண்கலங்கினர். ஒன்றுமறியாத குழந்தை அநாதையானதை பார்த்து கட்டுப்பாட்டை விலக்கிக்கொண்ட ஊர் மக்கள், சின்னகோப்பா உடலை அடக்கம் செய்தனர். சின்னகோப்பா திடீரென இறந்ததால், குழந்தையை என்னசெய்வதென்று தெரியாத ஊர்மக்கள், கரூரில் உள்ள உதவி மையத்துக்கு தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்து சிறுவனை அழைத்துச் சென்றனர். அப்போது, 'அப்பா', 'அப்பா' என்று சிறுவன் கூப்பிட்டபடி சென்றது கல் மனதையும் கரையவைக்கும் விதமா இருந்துச்சு' என்று கண்ணீராேடு சாெல்கிறார்கள் ஊர்மக்கள்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
எச்.ராஜாவுக்காக வளையும் சட்டம்.. முட்டுக் கொடுக்கும் அமைச்சர்கள்..!”

எச்.ராஜா உள்பட 8 பேரையும் எப்.ஐ.ஆரில்

மேலும்
img
சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் காலமானார்.

முன்னாள் பிரதமர்கள் இந்தியா காந்தி, ராஜீவ் காந்தியின்

மேலும்
img
விழுப்புரத்தில் திமுக ஆர்ப்பாட்டம் - கனிமொழி பங்கேற்பு

தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில்

மேலும்
img
எச்.ராஜா, எஸ்.வி.சேகரை கைது செய்ய தேவையில்லை - மாஃபா பாண்டியராஜன்

விமானத்தில் கோஷம் எழுப்பியதால் மாணவி சோபியா

மேலும்
img
உண்மையை சொல்ல எச்.ராஜாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்தில் பாஜக நாகரிக அரசியலை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img