வெள்ளி 21, செப்டம்பர் 2018  
img
img

எம்ஏசிசி விசாரணை வளையத்திற்குள் இசா சமாட்
புதன் 21 ஜூன் 2017 13:56:05

img

பெட்டாலிங்ஜெயா, பெல்டா குளோபல் வெஞ்சர்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (எப்ஜிவி) நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ இசா சமாட்டிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) அழைத்து இருக்கிறது. இசாவும் அவரின் துணைவியார் புவான்ஸ்ரீ பிபி ஷர்லிஸா முகமட் காலிட்டும் இன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு புத்ரா ஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்திற்கு வருவர் என்பதை எம்ஏசிசி துணை தலைமை ஆணையர் (நடவடிக்கை) டத்தோ அஸாம் பக்கி உறுதிப்படுத்தினார். எம்ஜிவியில் முறைகேடும் அதிகார துஷ்பிரயோகமும் நிகழ்ந்து இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அந்த நிறுவனத்தை எம்ஏசிசி புலன் விசாரணை செய்து வருகிறது.எம்ஜிவி நிர்வாகத்தில் ஏற்பட்ட ஒரு நெருக்கடியால் குழுமத் தலைவரும் தலைமை செயல்முறை அதிகாரியுமான டத்தோ ஸக்காரியா அர்ஷாட்டும் மூன்று முக்கிய நிர்வாக அதிகாரிகளும் விடுப்பில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டனர். தரை பொதுப் போக்குவரத்து ஆணையத்தின் (ஸ்பாட்) இடைக்கால தலைவராக இசாவும் எப்ஜிவியின் இடைக்கால தலைவராக டான்ஸ்ரீ சுலைமான் மஹ்போப்பும் பொறுப்பு ஏற்பர் என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் திங்கட்கிழமை தெரிவித்தார். எம்ஏசிசி ஜூன் 8ஆம் தேதி எப்ஜிவி தலைமை யகத்தில் எட்டு மணி நேர சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றியது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
img
நஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.

இன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்

மேலும்
img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
img
விஷத்தன்மையிலான மதுபானம். மரண எண்ணிக்கை 23 ஆக உயர்வு. மதுபானக் கடைகளில் அதிரடிச் சோதனை.

அஞ்சப்படும் வேளையில் சம்பந்தப்பட்ட வகையைச்

மேலும்
img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img