சனி 16, பிப்ரவரி 2019  
img
img

குடியரசுத் தலைவர் காரை நிறுத்தி ஆம்புலன்சுக்கு வழிவிட்டார்!
செவ்வாய் 20 ஜூன் 2017 17:06:03

img

பரபரப்பான பெங்களூரு சாலையில், ஆம்புலன்ஸுக்கு வழிவிடுவதற்காக குடியரசுத் தலைவரின் காரையே தடுத்து நிறுத்திய போக்குவரத்துக் காவலருக் குப் பாராட்டுகள் குவிகின்றன. கடந்த சனிக்கிழமை, பெங்களூருவில் மெட்ரோ க்ரீன் லைன் திறப்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்ட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை பலத்த பாதுகாப்புடன் ட்ரினிட்டி பகுதி வழியாக அழைத்துச் சென்றது பெங்களூரு போலீஸ். அப்போது, ட்ரினிட்டி பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் எம்.எல். நிஜலிங்கப்பா, அந்த வழியை ஆம்புலன்ஸ் ஒன்று கடக்க முடியாமல் நின்றுகொண்டிருப்பதைக் கவனித்துள்ளார். உடனே சற்றும் யோசிக்காமல், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் காரை தடுத்துநிறுத்தி, முதலில் ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டுள்ளார். இந்தச் சம்பவத்தைக் கவனித்த மற்ற அதிகாரிகளும் பொதுமக்களும் அவரைப் பாராட்டியுள்ளனர். இந்தச் சம்பவம், சமூக வலைதளம் வாயிலாகப் பரவி, ஒரே நாளில் நிஜலிங்கப்பாவை ட்ரெண்டாக்கிவிட்டது. அனைவரின் மனதிலும் நிஜலிங்கப்பா நீங்கா இடம் பிடித்துவிட்டார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
அவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்!’’ - தே.மு.தி.க கெடுபிடி

கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்

மேலும்
img
மேலிட உத்தரவா? நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்!

இத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன

மேலும்
img
திமுக, காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி- ஈரோட்டில் அமித் ஷா பேச்சு...

வரும் 1‌ம்‌ தேதி கன்னியாகுமரி வர

மேலும்
img
நம்மக்கிட்ட கூட்டணி கட்சியா? அதான் மக்களுக்கே தெரிஞ்சிப்போச்சே

முதல் கட்டமாக நாமும் ஒரு குழு அமைத்து வேலையை தொடங்கியதாக

மேலும்
img
உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான அம்பானி

அந்த வழக்கில் 2018 டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் ஆர். காம் நிறுவனம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img