ஞாயிறு 17, பிப்ரவரி 2019  
img
img

நெகிரி இந்து சங்க மகளிருக்கு சிகை அலங்கார, முக ஒப்பனைப் பயிற்சி
செவ்வாய் 20 ஜூன் 2017 15:57:31

img

(துர்க்கா) சிரம்பான், சிறு கைத்தொழில் மூலம் குடும்ப வருமானத்தை மகளிர்கள் பெருக்கி கொள்ள உதவக் கூடிய சிகை அலங்காரம், முக ஒப்பனை துறைகளில் பயிற்சி பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ராசா, நெகிரி செம்பிலான் இந்து சங்க அலுவலக மண்டபத்தில் நடைபெற்ற இந்த பயிற்சியில் இந்து சங்க பேரவையைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மகளிர் பங்கெடுத்துக் கொண்டனர். குடும்ப பெண்கள் சமய தொண்டு ஆற்றினாலும் வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கு சிறு கைத்தொழில் பெற்றிருந்தால் ஓய்வு நேரத்தில் வியா பாரம் செய்வதற்கு உதவியாக இருக்கும் என்பதே இப்பயிற்சியின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டது. மாநில இந்து சங்க மகளிர் தலைவி தொண்டர் மாமணி திருமதி சுப்பம்மா தலைமையில் நடத்தப்பட்ட நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்ட மகளிர்களுக்கு சிகை அலங்காரம், முக ஒப்பனை ஆகிய பயிற்சிகளை விஜயாவும், பூ மாலை கட்டுதல், பூ அலங்கார பயிற்சிகளை சசிகலா பொறுப்பேற்று நடத்தினார். சிரம்பான் உட்பட பல பகுதிகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர்களுக்கு சமயம், குடும்ப நலன் குறித்தும் பல்வேறான ஆலோசனைகள் இந்த பயிற் சியின் போது வழங்கப்பட்டன.

பின்செல்

மகளிர்

img
நெகிரி இந்து சங்க மகளிருக்கு சிகை அலங்கார, முக ஒப்பனைப் பயிற்சி

குடும்ப பெண்கள் சமய தொண்டு ஆற்றினாலும்

மேலும்
img
வியாபாரத்தில் சாதிக்கத் துடிக்கும் மலேசியப் பெண்கள் வரிசையில் விநோதினி!

அழகியல் கலையில் வினோதினிக்குச் சிறு வயதிலிருந்தே ஆர்வம்

மேலும்
img
தடைகளைத் தகர்த்தெறிந்தார்

தனக்கென்று ஒரு தடம் அமைத்தார்

மேலும்
img
நீங்கள் பெல்ட் அணியும் பெண்ணா?

கார் பயணம் , கராத்தே, ராணுவம் என எல்லா இடங்களிலும்

மேலும்
img
ஆண்மைக்குறைவு ... குழந்தையின்மை -Part -2

ஒரு டெஸ்ட் டியூபில் பெண்களின் கருமுட்டைகளில்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img