வெள்ளி 21, செப்டம்பர் 2018  
img
img

லண்டனில்வேன் மோதி தாக்குதல்: ஒருவர் பலி, 8 பேர் காயம்
திங்கள் 19 ஜூன் 2017 15:40:45

img

லண்டன் வடக்கு லண்டனில் நடைபாதையில் சென்றவர்கள் மீது வேன் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். இங்கிலாந்து தலை நகர் லண்டனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலத்தில் நடந்து சென்றவர்கள் மீது வேன் மூலம் மோதியும் அருகேயுள்ள மார்க்கெட்டில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியும் 7 பேரை கொன்றனர். இதனால் லண்டனில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு மீண்டும் வேன் மூலம் மோதி தாக்குதல் நடத்தியுள்ளனர். வடக்கு லண்டனின் செவன் சிஸ்டர்ஸ் ரோட்டில் மசூதி உள் ளது. புனித ரமலான் மாதம் என்பதால் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தொழுகை நடந்தது. தொழுகை முடிந்ததும் இரவு 12.20 மணியளவில் ஏராளமா னவர்கள் வெளியே வந்துகொண்டிருந்தனர். அப்போது அங்கு அதிவேகமாக வந்த வேன் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. இதனால் அலறியடித்துக் கொண்டு பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர். இச்சம்பவத்தால் அங்கு பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் விரைந்து வந்து வேன் ஓட்டுனரை கைது செய்தனர். ஆனால் அந்த நபர் குறித்து போலீசார் எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை. அவர் தீவிரவாதியா, எதற்காக தாக்குதல் நடத்தப்பட்டது என தெரிவிக் கப்படவில்லை. ஆனால் அந்த வேனை சம்பந்தப்பட்ட நபர் திட்டமிட்டு மசூதி தொழுகை முடிந்து திரும்பியவர்கள் மீது மோதி இருக்கிறார் என பிரிட்டன் முஸ்லிம் கவுன்சில் தலைவர் ஹருன்கான் தெரிவித்துள்ளார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
தண்டனையிலிருந்து விடுதலையான முன்னாள் பிரதமர்...

அவரின் மகளுக்கு 8 ஆண்டுகள் சிறை

மேலும்
img
பாலியல் உறவு என்பது கடவுளின் பரிசு” - போப் பிரான்ஸிஸ்

திருமணத்திற்கு பின் உடலுறவை தள்ளிவைப்பது

மேலும்
img
அமெரிக்காவில் ப்ளோரன்ஸ் புயலால் வெள்ளம்

இந்நிலையில், பல இடங்களில் ஆறுகளில் வெள்ளம்

மேலும்
img
கடந்த 7 ஆண்டுகளில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவில் குடியேற்றம்: ஆய்வில் தகவல்

அமெரிக்காவில் குடியுரிமை பெற்று குடியேறும்

மேலும்
img
நடப்பாண்டின் சக்தி வாய்ந்த மங்குட் புயல்

பிலிப்பைன்ஸில் கரையைக் கடந்த மங்குட் புயல் தற்போது சீனாவின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img