செவ்வாய் 18, செப்டம்பர் 2018  
img
img

259 இந்திய மானவர்களுக்கு 15 லட்சம் வெள்ளி ஊக்குவிப்பு தொகை!
ஞாயிறு 18 ஜூன் 2017 14:12:50

img

செல்லதுரை பழனியாண்டி, படங்கள் : ஆர்.குணா கோலாலம்பூர், பெட்டாலிங் ஜெயா, தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்க தோட்ட மாளிகையில் எஸ் பிஎம், எஸ்டிபிஎம் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற சிறந்த 259 மாணவர் களுக்கு தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகத் தலைவர் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமசுந்தரம் 15 லட்சம் வெள்ளியை ஊக்குவிப்புத் தொகையாக வழங்கினார். கூட்டுறவு சங்கத்தின் உறுப் பினர்களின் பிள்ளைகளுக்கு தலா ஆயிரம் வெள்ளியை வழங்கி சிறப்பித்தார். கடந் தாண்டை விட இவ்வாண்டு சற்று குறை வாக உள்ளது. அதை இனிவரும் காலங்களில் நிவர்த்தி செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார். தொடக்கக் காலங்களில் மிகவும் குறைந்த மாணவர்களே தேர்ச்சி பெற்றனர். ஒரு காலத்தில் 5 மாணவர்களுக்கு சிறப்புத்தொகை வழங்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அது மாறி இப்போது சிறந்த முறையில் கல்வியில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். கடந்த காலங்க ளில் 400 மாணவர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை வழங்கியதை நினைவு கூர்ந்தார். இந்த ஊக்குவிப்புத் தொகையை தொடர்ந்தாற்போல் 23 ஆண்டுகளாக வழங்கி வருகின்றோம். சங்கத்தின் உறுப்பினர்களின் பிள்ளைகள் வருங்காலத்தில் ஓர் சிறந்த குடிமகனாக வர வேண்டும். கல்விதான் நமது சொத்து. சொத்தை அடைய வேண்டு மென்றால் கல்வியில் உழைப் பைப் போட வேண்டும். கல்வி நமது இரண்டு கண்கள். கண் களைப் பாதுகாப்பது போல் கல்வி யையும் பாதுகாக்க வேண்டும். ஒரு காலத்தில் ஏழை சமுதாயமாக இருந்தோம். தோட்டப்புறத்தில் வசித்து வந்தோம். ஆனால் இப்போது அந்த நிலை மாறிவிட்டது. இப்போது நமக்கு சில வசதிகள் வந்து விட்டது. அதனைப் பயன் படுத்தி நாம் முன்னேற வேண்டும். கல்வியை நேசிக்க வேண்டும். ஏணிப்படியில் ஏற வேண்டுமென்றால் கவனமாக அடி எடுத்து வைத்து ஏற வேண்டும். அப்போதுதான் போய் சேர வேண் டிய உயரத்தை அடைய முடியும். அதற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் தங்களின் அர்ப்பணிப்பை செய்ய வேண்டும் என டான்ஸ்ரீ கூறினார்.சங்கத்தின் உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு மேற்படிப்புக்கு வட்டி இல்லாத கடனை சங்கம் வழங்குகிறது, அதோடு சங்கத்தில் உறுப்பியம் பெறாத மற்றவர் களின் பிள்ளைகளுக்கும் வட்டி இல்லாத கல்வித் தொகையை வழங்குகிறது. சிறந்த 3 மாணவர்களுக்கு தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கம் முழு உபகாரச் சம்பளம் வழங்கியது.கடந்த ஆண்டு எஸ்பிஎம் தேர்வில் 11ஏ பெற்று சிறந்த மாணவியாக நெகிரி மாநிலத்தைச் சேர்ந்த யாஷினி புகழேந்திக்கு முதல் பரிசாக சங்கத்தின் தோற்றுநரும் அமரர் துன் சம்பந்தனின் பெயரால் தங்கப் பதக்கத்தை டான்ஸ்ரீ வழங்கினார். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் டத்தோ பி.பலராம் சங்கத்தின் நிர்வாகத் தலைவர் டத்தோ பா.சகாதேவன், துணைத்தலைவர் டத்தோ ராஜ், டான்ஸ்ரீ மாரிமுத்து, நிர்வாக உறுப்பினர்கள், பெற்றோர் கள் மற்றும் பொதுமக்கள் என 1000க்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
img
நஜீப் காட்டிய கடிதங்கள் சவூதி இளவரசரால் கையொப்பமிடப்பட்டவை அல்ல.

அல்-சவூத்’ கையெழுத்திட்ட 2011

மேலும்
img
யூ.பி.எஸ்.ஆர். தேர்வை எழுத காத்திருந்த வெங்கடாசலபதி ஆற்றில் மூழ்கி மரணம்

கூலிம் மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாணவரின்

மேலும்
img
தேசிய முன்னணியில் ஐ.பி.எப்.

தேசிய முன்னணியில் உருமாற்ற

மேலும்
img
நான்  துணைப்பிரதமராக விரும்பவில்லை

அவர் தமது தொகுதியைக் காலி செய்தால்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img