செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு எப்போது நிலம் கிடைக்கும்?
ஞாயிறு 18 ஜூன் 2017 12:36:59

img

(த.மேத்தியூஸ்) நிபோங் திபால் தென் செபராங் பிறை மாவட்டத்திலுள்ள கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டட நிர்மாணிப்புக்கு பினாங்கு மாநில அரசாங்கம் அதற்கான நிலத்தை வழங்கும் என அறிவிக்கப்பட்டு இன்று வரையில் எந்தவொரு பதிலும் இல்லாததால் பள்ளியின் பெற்றோர்கள் கேள்வி யெழுப்பியுள்ளனர். ஆண்டுதோறும் இப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருவதால், புதிய பள்ளியை நிர்மாணிக்க வேண்டிய நிலை ஏற்பட் டுள்ளது. இந் நிலையை முன்வைத்து கடந்த 2013இல் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமியிடம் முதன் முறையாக கோரிக்கை ஒன்று முன் வைக்கப்பட்டது என அனிதா சண்முகம், வள்ளியம்மாள் தெரிவித்தனர். அதன் பிறகு பள்ளி நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த அவர், இப்பள்ளிக்கு முன்புறம் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான செம்பனைத் தோட்ட நிலத்தை பார்வையிட்டார். இத்தோட்டத்திலிருந்து 3 ஏக்கர் நிலத்தை வாங்கி மாநில அரசாங்கத்தின் உதவியுடன் வெற்றிகரமாக செய்து முடிப் போம் என அறிவிக்கப்பட்டதாக ஸ்டீவன், ஜோஸ்லின் தெரிவித்தனர். சுமார் 20 முதல் 30 லட்சம் வெள்ளி வரையில் அந்த நிலத்தின் விலை இருக்கலாம். அந்த 3 ஏக்கர் நிலத்தில் ஒரு புதிய பள்ளியை நிர்மாணித்து, ஒரு பகுதியை திடலுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மகிழ்ச்சியான தகவலும் அறிவிக்கப்பட்டதாக நடராஜனும் அன்புராஜும் கூறினர். மாநில அர சாங்கத்தின் சார்பில் இந்த வாக்குறுதி வழங்கப்பட்டது மகிழ்ச்சியாக இருந்தாலும் அதன் செயலாக்கமும் நடவடிக்கையும் எந்த நிலையில் உள்ளது என ரவியும் ஜெயசீலனும் கேள்வியெழுப்பினர். தற்போது இப்பள்ளியில் 252 மாணவர்களும், 60 பாலர் வகுப்பு மாணவர்களும் பயின்று வருகின்றனர். அடுத்து வரும் ஆண்டுகளிலும் மாணவர்கள் அதிகரிக்கக்கூடிய சாத்தியம் அதிகமாக உள்ளதென பெற்றோர்களான தமிழ்ச்செல்வியும் திலகாவும் தெரிவித்தனர். இன்றைய அரசியல் சூழ்நிலையில் நாளை எதுவும் நிகழலாம் என்பதால் வரும் பொதுத் தேர்தலுக்குள் கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நில விவகாரத்திற்கு மாநில அரசிடமிருந்து நல்ல பதில் கிடைக்குமென நாங்கள் நம்புகிறோம் என பிரியா, ஸ்ரீமாலா, ரவீந்திரன் ஆகியோர் கூறினர். தென் செபராங் பிறை மாவட்டத்தில் சிறந்த பள்ளிகளில் ஒன்றாகத் திகழும் இந்த கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளி மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும்.அதற்காக அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்டு, 106 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தற்போதைய பள்ளிக்குப் பதிலாக புதிய பள்ளியை நிர்மாணிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்துக்கும் பள்ளி மேலாளர் வாரியத்துக்கும் பெற்றோர்கள் தங்க ளின் ஆதரவை தெரிவித்துக் கொள்வதாகவும் நேரில் சந்தித்த போது பெற்றோர்கள் நண்பனிடம் தெரிவித்தனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய வாக்குறுதியின்படி பினாங்கு மாநில அரசாங்கம் தனது நிலைபாட்டை எங்களுக்கு அறிவிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளா?

பதில் சொல்லுமா நம்பிக்கைக் கூட்டணி.

மேலும்
img
மக்கள் உடனடியாக மாற்றங்களைக் காண விரும்புகிறார்கள்.

எங்களுக்கு கால அவகாசம் தேவை.

மேலும்
img
சிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

சமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்

மேலும்
img
மார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.

இறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை

மேலும்
img
நீதித்துறையில் தவறுகள்? அரசாங்கம் ஆராயும்.

அரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img