ஞாயிறு 18, நவம்பர் 2018  
img
img

வீடுகளை காலி செய்ய கட்டாயப் படுத்தாதீர்!
சனி 17 ஜூன் 2017 14:16:58

img

(பார்த்திபன் நாகராஜன் / ஆர். குணா) கோலாலம்பூர், 1000 சதுர அடியில் வீடு, 900 வெள்ளி வாடகை பணம் வழங்கப்படும் எனும் கூட்டர சுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னானின் வாக்குறுதி காற்றில் பறந்ததா என்று ஜிஞ்சாங் செலாத்தான் தம்பஹான் மக்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.ஜிஞ்சாங் செலத்தான் தம்பஹான் லோட் 9714ல் மேம் பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதால் அப்பகுதியில் வாழும் மக்கள் தங்களின் வீடுகளை காலி செய்யப்பட வேண்டும். அப்படி வீடுகளை காலி செய்யப்படும் மக்களுக்கு 1000 சதுர அடியில் வீடுகள் வழங்கப் படும். அதே வேளையில் 900 வெள்ளி வாடகை பணமும் வழங்கப்படும். இப்படிப்பட்ட இழப்பீடுகள் வழங்கப்படும் பட்சத்தில் மக்கள் ஏன் வீடுகளை காலி செய்யவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்பது எனக் குப் புரியவில்லை என்று தெங்கு அட்னான் கூறியது கடந்த மே 22ஆம் தேதி செய்தியாக வெளி வந்துள்ளது. பாதிக்கப்படும் மக்களுக்கு 1,000 சதுர அடியில் வீடுகள் வழங்கப்படும் என்று அமைச்சரே அறிவித்திருக்கும் பட்சத்தில் 900 சதுர அடியில் தான் வீடுகள் கட்டித் தரப்படும் என மேம் பாட்டு நிறுவனம் கூறுவதில் என்ன நியாயம் உண்டு. அதே வேளையில் எவ்வளவு பெரிய வீடுகள் கிடைக்கப் போகிறது என் பது தெரியாத நிலையில் பொதுமக்கள் எப்படி வீடுகளை காலி செய்வார்கள் என்பது தான் தற்போதைய கேள்வியாகும். இருந்த போதிலும் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று மேம்பாட்டு நிறுவனமும், கோலா லம்பூர் மாநகர் மன்றமும் மக் களை கட்டாயப்படுத்துவது அநாகரீகமாகும்.மக்கள் எதிர்நோக்கி வரும் இப்பாதிப்புகளை அடிப்படையா கக் கொண்டு 21 கேள்விகளை தயாரித்து அதை மகஜராக தயா ரித்து அமைச்சரின் பார்வைக்கு நாங்கள் வழங்கியுள்ளோம். பொதுமக்களில் இக்கேள்வி களுக்கு அமைச்சர் உடனடியாக பதில் தர வேண்டும் என்று ஜிஞ்சாங் செலாத்தான் தம்ப ஹான் சமூக மேம்பாட்டு சங்கத் தின் தலைவர் கருப்பையா செய்தியாளர்களிடம் கூறினார். 1,000 சதுர அடியில் வீடுகள் கட்டித் தரும் பட்சத்தில் தற் போதைய வீடுகளை காலி செய்ய மக்கள் தயாராக உள்ளனர். காலி செய்வதற்கு முன் பாதிக் கப்பட்ட மக்கள் அனை வரும் புதிய வீடுகளுக்கான எஸ்என்பி எனப்படும் ஒப்பந்த உடன்பாட்டில் கையெழுத்திட வேண்டும்.எந்தவொரு பத்திரங்களும் இல்லாமல் வீடுகளை காலி செய்து விட்டு கடந்த காலங் களை போல் ஏமாற நாங்கள் தயாராக இல்லை என்று ஜிஞ் சாங் செலாத்தான் தம்பஹான் நட வடிக்கை குழுவைச் சேர்ந்த பொன்னம்பலம் கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.

விசாரணைக் கூண்டில் அமர முடியாது

மேலும்
img
நஜீப்பிற்கும் ரோஸ்மாவுக்கும்  ஏஜெண்டாக செயல்பட்டவர் அஸிஸ்.

டத்தோஸ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம்

மேலும்
img
சுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு

மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான

மேலும்
img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img