திங்கள் 24, செப்டம்பர் 2018  
img
img

மலேசிய மக்கள் பெருமளவில் ஏமாற்றப்பட்டுள்ளனர்
சனி 17 ஜூன் 2017 12:44:11

img

வாஷிங்டன், நாட்டில் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளான ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தில் (1 எம்டிபி) மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது என்றும் மலேசிய மக்கள் பெரியளவில் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்றும் அமெரிக்க நீதித்துறை நேற்று வெளிப்படையாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் 1எம்டிபி ஊழல் குறித்து விசாரணை மேற்கொண்ட அமெரிக்க நீதித்துறை (டி.ஓ.ஜே) கடந்த ஆண்டு ஜூலை 21ஆம் தேதி முதல் தாங்கள் மேற்கொண்டுவரும் விசாரணையில் 1 எம்.டி.பி.யில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது என்றும் மலேசியர்கள் பெரிய அளவில் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்றும் அமெரிக்க நீதித்துறை தாக்கல் செய்துள்ள மூன்றாவது வழக்கு மகஜரில் குறிப்பிட்டுள்ளது. 1 எம்.டி.பி.யில் 300 கோடி அமெரிக்க டாலர் (1,200 கோடி வெள்ளி) முறைகேடாக பயன் படுத்தப்பட்டுள்ளது என்று தங்கள் விசாரணையில் தெரிவித் துள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.அத்துடன் அதில் 100 கோடி அமெரிக்க டாலர் (400 கோடி வெள்ளி) மதிப்புள்ள சொத்துக்கள் சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்டுள்ளது. அவற்றை பறிமுதல் செய்யும் முயற்சியில் அமெரிக்க விசாரணைக் குழு ஈடுபட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 450 கோடி அமெரிக்க டாலர் (1,800 கோடி வெள்ளி) முறைகேடு நிகழ்ந்து இருப்பதாக அமெரிக்க நீதித் துறை அனுமானமாக கணக்கிட் டுள்ளது. 1எம்.டி.பி. நிறுவனத்தின் நிதியிலிருந்து 170 கோடி அமெரிக்க டாலர் (680 கோடி வெள்ளி) திருடப்பட்டு சட்ட விரோதமாக சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன. ஒரு பாய்மரக் கப்பல், தங்க நகைகள், வைரங்கள், கலை படைப்புகள் ஆகியவை அமெரிக்க நீதித் துறை பறிமுதல் செய்யவிருக்கும் சொத்துக்களில் அடங்கும்.கோடிக்கணக்கான டாலர் ஏமாற்றப்பட்ட புதிய அத்தியாயம் விசாரணையின் வழி அம்பலமாகி யுள்ளது. இதில் 450 கோடி டாலர் (1,800 கோடி வெள்ளி) திருடப் பட்டிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்று அமெரிக்காவின் இடைக்கால சட்டத்துறை தலைவர் கென்னத் ஏ பிளான்கோ தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் நிறுவனத்திலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை கொண்டு ஊழலில் ஈடுபட்டுள்ள ஊழல்வாதிகள் எவருக்கும் அமெரிக்கா அடைக் கலமாக அமையும், அல்லது பாதுகாப்புத் தரும் என்று யாரும் எண்ணிவிடக்கூடாது. அமெரிக்கா தனது கடமையை செய்யும். சட்டவிரோதமாக திருடப் பட்ட அல்லது சம்பாதிக்கப்பட்ட அந்தப் பணத்தை பாதிக்கப்பட்டவர்களிடையே திருப்பித் தரும் மிகப் பெரிய கடப்பாட்டை அமெரிக்கா கொண்டுள்ளதாக அவர் சொன்னார். அமெரிக்க நீதித் துறையின் விசாரணையின்படி பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் வளர்ப்பு மகனான ரிஸா அஸிப், 1 எம்டிபி நிறுவனத்தின் நிதியை தவறாகப் பயன்படுத்தி அமெரிக்காவில் ஆடம்பர சொத்துக்களை வாங்கியதாக கூறப்படுகிறது. பினாங்கு வர்த்தகரும் ரிஸா அஜிஸின் வர்த்தக சகாவான ஜோ லோவிடமிருந்து கடந்த 2012 ஜூலை மாதம் 4 கோடியே 17 லட்சத்து 90 ஆயிரம் டாலர் (16 கோடி மலேசிய வெள்ளி) மதிப்புள்ள சொத்துக்களை வாங்கியதாக அமெரிக்க நீதித் துறை கூறுகிறது. இந்நிலையில் இவர்களின் சொத்துக்களையும் வங்கிக் கணக்கையும் முடக்கும் நிலைக்கு அமெரிக்க நீதித் துறை வந்துள்ளது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
நஜீப்பிற்கு தெரியவில்லையா? புரியவில்லையா? அரசாங்க கணக்கில் வெ.11.41 பில்லியன் குறைந்தது எப்படி என்று?

ஏப்ரல் 30-ஆம் தேதி வரையில் இந்த கணக்கில்

மேலும்
img
அம்னோவை நாங்கள் வெளியேற்றுவோம். மசீச எச்சரிக்கை

மசீசவின் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ லியோவ் தி

மேலும்
img
அரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது

அரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது

மேலும்
img
இந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.

செனட்டர் பொன்.வேதமூர்த்தி கூறினார்.

மேலும்
img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img