திங்கள் 24, செப்டம்பர் 2018  
img
img

அயர்லாந்தின் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தேர்வு
வியாழன் 15 ஜூன் 2017 14:14:04

img

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 38 வயதான லியோ வரத்கர், அயர்லாந்தின் இளம் பிரதமராக நேற்று தேர்வு செய்யப்பட்டார். அயர்லாந்தில், பைஃன் கேயல் கட்சியின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. அந்தக் கட்சியைச் சேர்ந்த என்டா கென்னி பிரதமராக இருந்தார். அவர், தனது பத வியை இந்த ஆண்டு தொடக்கத்தில் ராஜினாமாசெய்ததை அடுத்து, அங்கு நாடாளுமன்றத் தலைவருக்கான ஓட்டெடுப்பு நடைபெற்றது. இந்த ஓட்டெ டுப்பில், 57 பேரில் 50 பேரின் ஆதரவையும் 60 சதவிகித வாக்குகளையும் பெற்று, நாட்டின் 11-வது பிரதமராக லியோ வரத்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விரைவில் அயர்லாந்தின் அடுத்த பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். மும்பையை பூர்விகமாகக் கொண்டவர், லியோ வரத்கரின் தந்தை அசோக் வரத்கர். மருத்துவரான இவர், 1960 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் குடி யேறியவர். அவருக்கும் அயர்லாந்தின் நலத்துறை அமைச்சரான மிரியம் தம்பதிக்கும் மகனாகப் பிறந்தவரே லியோ வரத்கர். இவர் 1978 ஆம் ஆண்டில் டப் ளினில் பிறந்தார். 2003 ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்து, மருத்துவராகப் பணியாற்றி வந்தார். கத்தோலிக்க மக்கள் அதிக அளவில் வாழும் நாடு களுள் ஒன்றான அயர்லாந்தின் முதல் ஓரினச் சேர்க்கை பிரதமருமாவார் வரத்கர்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
சீன - அமெரிக்கா வரிப்போர், எச்சரிக்கும் வால்மார்ட்!!!

இந்த வரி விதிப்பு செப்டெம்பர் 24 முதல்

மேலும்
img
சீன பல்கலைக்கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட தமிழ் மொழி துறை...

தற்போது தமிழில் இருக்கும் பெரும்பாலான சொற்கள்

மேலும்
img
தன்னை ஏற்காதவர்களை சிறையில் அடைத்த அதிபர் மரணம்

போலிஸாக ஆரம்பித்த இவரது சமூக பணி

மேலும்
img
430 கோடியை ஹேக் செய்து திருடிய ஹேக்கர்

ஹேக் செய்ததில் 60 மில்லியன் டாலர்கள்

மேலும்
img
தண்டனையிலிருந்து விடுதலையான முன்னாள் பிரதமர்...

அவரின் மகளுக்கு 8 ஆண்டுகள் சிறை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img