புதன் 14, நவம்பர் 2018  
img
img

பள்ளிகளில் நடக்கும் குண்டரியல் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு!
வியாழன் 15 ஜூன் 2017 13:02:55

img

கே.வி.சுதன் கிள்ளான் மாணவர்கள் குண்டரியல் நடவடிக்கைகளில் ஈடுபடு வற்குப் பெற்றோர்களே முழுமுதற் காரணமாக உள்ளதாக சிலாங்கூர் இந்து அறப்பணி வாரியத்தின் ஆலோசகர் டத்தோ ஏ.கோகிலன்பிள்ளை கூறினார். மேற்பட்ட வாரியத்தின் ஏற்பாட்டில், அரசுசாரா இயக்கங்களின் இணையா தரவில், ஞாயிற்றுக் கிழமை, இங்குள்ள தெங்கு கிளானா ஈ-லை ப்ரரி மண்டபத்தில் நடைபெற்ற, பள்ளிக் கூடங்களில் நிலவும் குண்டரியல் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வழி வகைகள் குறித்த ஆய் வுக் கலந்துரையாடல் நிகழ்வைத் தொடக்கி வைத்துப் சிறப்புரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஐந்து பேச்சாளர்கள், பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர். குண்டர் கும்பலில் ஈடுபடும் மாணவர்கள் பெற்றோர்களின் ஆலோசனையைக் கேட்பதில்லை. ஆசிரியர்களின் கருத்தையும் எதிர்க்கிறார்கள். மேலும் இதனைத் தடுக்கும் திட்டங்களைத் தீட்டாமல் அரசாங்க அனு கூலங்களுக்கும் பட்டம், பதவியை அடைவதற்கும் திட்டம் போட்டு வரும் ஒருசில என்ஜிஓ தலைவர்கள், பட்டும் படாமல் சமூக நடவடிக்கைகளில் ஈடு பட்டு வருவதால் மேற்பட்ட சமூக சீர்கேட்டைக் களைய இயலாத நிலை உருவாகியுள்ளதாகவும் சிலாங்கூர் இந்து அறப்பணி வாரியச் செயலாளர் அரி கிருஷ்ணன் தெரிவித்தார். அதிகமான இந்திய மாணவர் கள் பயிலும் இடைநிலைப் பள்ளிகளில் இது போன்ற பிரச்சினைகள் அதிகமாக நிலவுகின்றன. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் கல்வி நிலை குறித்து அறிந்து கொள்ள பள்ளிக்கு வருவது மில்லை. இந்நிலையில், பல குடும்பங்களில் இலைமறை காயாக நிலவும் வறுமைநிலை போன்ற சிக்கல்களை சமூக இயக்கங்கள் கண்டறிந்து உதவ முன்வந்தால் நாளடைவில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் கல்வி நிலையிலும் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். மேலும், பள்ளிக்கூடங்களில் விளை யாட்டுத்துறையில் வாய்ப்பும் வசதியும் கிடைக்காத இந்திய மாணவர்களுக்கு வெளியில் இயங்கும் விளையாட்டு இயக்கங்கள் கண்டறிந்து வழிவகுத்துக் கொடுத்தால் மேற்பட்ட குண்டரியல் நடவடிக்கையைக் குறைக்க ஏதுவாக அமையும், என்று ஆசிரியர் ஜெயக்குமார் தெரிவித்தார். முறையான வழிகாட்டல் இல்லாததால் இடைநிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு வருடத்திலும் குறைந்தது 30 பேர் குண்டர் கும்பலில் ஈடுபடுவதாக ஆய்வு காட்டுகிறது. படிப்பில் அக்கறையின்மை உட்பட நவீன கைப்பேசி, சமூக வலைத்தளப் பயன்பாடு போன்றவற்றால் இளைஞர்கள் மட்டுமின்றி பெண் பிள் ளைகளும் மோசமான செயல்களில் ஈடுபட்டு சிக்கித் தவிக்கின்றனர் என்று உலுசிலாங்கூர் மாவட்டப் போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் சுப்பிர மணியம் இராமசாமி சுட்டிக் காட்டினார். நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் குறைந்தது 40 சதவிகிதத்தினர் இந்தியர்களாவர். அதிலும், எளிதில் வழிப்படுத்த முடியாத அளவில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு 20 வருடங்கள் சிறைத் தண்டனை பெற்று வீடு திரும்பினாலும் அதிலிருந்து விடுபட்டு திருந்தி வாழ்பவர்களில் மிகக் குறைவானவர்களாகவே இருக்கின்றனர். ஏனெனில், சிறைச்சாலையில் பல்வேறு விதமான குற்றவாளிகள் மத்தியில் பல வருடங்கள் காலத்தைக் கழிக்கும் தருணத்தில் மேலும் பல குற்றச் செயல்களை எப்படிக் கையாளுவது என்ற படிப்பினையை அவர்களிடமிருந்து கற்றுக் கொள்கிறார்கள். இதுபோன்ற நிலைமை மாறுவதற்கு சமய வழிபாடும் பெற்றோர்களின் பண்புநல வழிகாட்டலும் முக்கிய அம்சமாக விளங்குகிறது, என்று அவர் கூறினார். இப்பிரச்சினையைக் களைவதற்கு நீண்டகாலத் திட்டங்களை நாம் முடிவு செய்ய வேண்டியுள்ளது. குண்டரியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் மாண வர்களைக் கண்டறிந்து அவர்களுக்கென சிந்தனைத் தெளிவு பெறும் கல்வி நடவடிக்கை முகாம் போன்றவற்றை நடத்த வேண்டும். மேலும், பெற்றோர் களின் ஒத்துழைப்பும் பொது இயக்கங்களின் ஆதரவும் இதற்கு முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று பினாங்கு இந்து சங்கப் பொறுப்பாளர் டாக்டர் பாலசுப்பிரமணியம் கருத்துரைத்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
img
மலேசியாவிற்கும் சிங்கைக்கும்  இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.

முக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக

மேலும்
img
சரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.

ரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.

மேலும்
img
துன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்?

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்

மேலும்
img
இந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.

துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img