செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

பெண்ணின் துயரத்தைக் கேள்விப்பட்டு இருசக்கர ஆம்புலன்ஸ் வடிவமைத்த இளைஞர்!
புதன் 14 ஜூன் 2017 15:31:58

img

ஹைதராபாத்தில், மெக்கானிக் ஒருவர் தன் சொந்த முயற்சியில் இருசக்கர ஆம்புலன்ஸ் ஒன்றை வடிவமைத்து, புதிய சாதனை படைத்துள்ளார். விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க, நெரிசலான சாலைகளில் விரைவாகச் செல்லக்கூடிய வாகனம் தேவைப்படும், குறைந்தபட்சத்தில் முத லுதவி அளிப்பதற்காவது மருந்துகளும், ஓரிரு நிபுணரும் தேவை. இதற்காகவே ஹைதராபாத்தைச் சேர்ந்த மோட்டார் மெக்கானிக் ‘கான்’ இருசக் கர ஆம்புலன்ஸ் ஒன்றை புதிதாக வடிவமைத்துள்ளார். விபத்துகளின்போது உதவும் ஆம்புலன்ஸ்கள் சாலை நெரிசலில் சிக்கி வீணாகும் நேரத்தைக் குறைத்து, விரைவாக முதலுதவியோ அல்லது மருத்துவ உதவியோ அல்லது பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் கொண்டு சேர்க்கவோ இந்த இருசக்கர ஆம்புலன்ஸ் பயன்படும். நகர்ப்புறங்களில் விபத் துகள் ஏற்பட்டால், குறுகலான சாலைகள், சாலை நெரிசல், பழுதான சாலைகள், இவைகளைக் கடந்துசெல்வதற்கு, ஒரு சராசரி ஆம்புலன்ஸுக்கு அதிக நேரமாகும். ஆனால் இருசக்கர வாகனங்கள், இந்தத் தடைகளை விரைந்து கடக்கும் என்பதால், இந்த இருசக்கர ஆம்புலன்ஸுக்கு வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தன் இருசக்கர ஆம்புலன்ஸ்குறித்து கான் கூறுகையில், ‘சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பெண்ணின் சடலத்தை அவரது கணவர் தன் தோளிலேயே தூக் கிச்சென்ற சம்பவம் குறித்து கேள்விப்பட்டேன். அந்தச் சம்பவம்தான் என்னை இருசக்கர ஆம்புலன்ஸ் வடிவமைக்கத் தூண்டியது. இந்த ஆம்புலன்ஸை வடிவமைக்க ரூ.1,10,000 செலவானது. வாகனத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர், ஸ்ட்ரெச்சர், முதலுதவிப் பெட்டி ஆகிய வசதிகள் உள்ளன. இதுகுறித்து அரசிடம் பேச முடிவுசெய்துள்ளேன்’ என்று கூறினார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயார்!

எல்லையில் வெடி பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த தீவிரவாதிவிமானங்கள்

மேலும்
img
ஒவ்வொருவரும் 20 பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தாலே ஆட்சியை பிடித்து விடுவோம்! உ.பி.களுக்கு கட்டளையிட்ட ஸ்டாலின்!!

பூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்

மேலும்
img
ராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்

40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்

மேலும்
img
அவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்!’’ - தே.மு.தி.க கெடுபிடி

கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்

மேலும்
img
மேலிட உத்தரவா? நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்!

இத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img