சனி 22, செப்டம்பர் 2018  
img
img

மலேசியாவின் எட்டாவது பிரதமராகத்தான் அன்வார் பதவி ஏற்பார்.
புதன் 14 ஜூன் 2017 13:28:46

img

பெட்டாலிங்ஜெயா, டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தான் பக்காத்தான் ஹராப்பானின் முதன்மை பிரதமர் வேட்பாளர். ஆனால், அவர் மலேசியாவின் எட்டாவது பிரதமராகத் தான் பதவி ஏற்பாரே தவிர, ஏழாவதாக அல்ல என்று ஜசெக நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். முன்பு இந்த விவகாரம் குறித்து பேசிய பிகேஆர் தலை வர்கள் சிலரால் குறிப்பிடப் பட்ட அம்சமாகும் இது. அன்வார் சிறைவாசம் அனுபவித்து வருவதுடன், பொது மன்னிப்பு கிடைக்காவிட்டால் அடுத்த ஆண்டுதான் சிறையில் இருந்து விடுதலையாவார். அதன் பின்னர் அவர், ஐந்து ஆண்டு களுக்கு அரசாங்க பதவி வகிக்க முடியாது. ஆகவே, அன்வார் மலேசியாவின் எட்டாவது பிரதமராகத்தான் பதவி ஏற்க முடி யுமே தவிர ஏழாவது பிரதமராக அல்ல என்று கிட் சியாங் கூறினார். பதினான்காவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றிபெற்ற பின்னர், ஏழாவது பிரதமர் யார் என்பது கருத்திணக்க அடிப்படையில் தீர் மானிக்கப்படும் என்று கிட் சியாங் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார். ஆனால், அவர் எவருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. அரசு பதவி வகிப்பதை தடைசெய்யும் கட்டுப்பாடுகளில் இருந்து அன்வாரை மீட்கும் தொடர்பிலான பொது மன்னிப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப் பட்டு முடிவு தெரியும் வரையில் ஏழாவது பிரதமராக பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயிலை நியமிப்பது என எதிர்க்கட்சி கூட்டணியின் ஸ்தாபக உறுப்புக் கட்சிகளான பிகேஆர், ஜசெக, அமானா ஆகியவை இணக்கம் கண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மே 21ஆம் தேதி நடைபெற்ற பிகேஆர் தேசிய பேரவையில் பிகேஆர், ஜசெக, அமானா தலைவர்களும் பிகேஆர் உறுப்பினர்களும் 7ஆவது பிரதமர் அன் வார் என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர்.எனினும் இந்த மாநாட்டிற்கு வருகை புரிந்திருந்த பிபிபிஎம் செயல் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டும் தலைவர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினும் அந்த சுலோக அட்டைகளை பிடித்திருக்கவில்லை. பக்காத்தான் ஹராப்பானின் அனைத்து பங்காளி கட்சிகளின் இப்போதைய ஒரே குறிக்கோள், 14ஆவது பொதுத் தேர்தலில் அம்னோ - தேமு கூட்டணியின் தோல்வியை உறுதிப்படுத்துவதே என்று கிட் சியாங் மேலும் கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
img
நஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.

இன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்

மேலும்
img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
img
விஷத்தன்மையிலான மதுபானம். மரண எண்ணிக்கை 23 ஆக உயர்வு. மதுபானக் கடைகளில் அதிரடிச் சோதனை.

அஞ்சப்படும் வேளையில் சம்பந்தப்பட்ட வகையைச்

மேலும்
img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img