img
img

நவீனின் கனவு கலைந்தது.
புதன் 14 ஜூன் 2017 12:03:17

img

ஜார்ஜ்டவுன் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை போன்று சிறந்த இசையமைப்பாளராக வேண்டும் என்பது டி.நவீனின் கனவு. அந்த கனவை நனவாக்கும் வகையில் இவ்வாரம் கோலாலம்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் அம்மாணவன் நுழைந்திருக்கவேண்டும். ஆனால், துரதிர்ஷ் டவசமாக 18 வயது நவீன் பகடிவதைக்கு ஆளாகி இன்று சுயநினைவு இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். மூளைச்சாவு என்பது மருத்துவர்களின் தீர்ப்பு. ஜார்ஜ்டவுன், நவீன் குணமடைந்து, இதிலிருந்து மீண்டு வர வேண்டும் என பிரார்த்தனை செய்யும் கோரிக்கைகள் சமூக வலைத் தளங்களில் குவிந்துக்கிடக் கின்றன. நவீனுக்கு இசை என்றால் மிகவும் பிரியம். தனியார் கல்லூரியில் பதிந்து கொள்வதற்காக கடந்த திங்கட்கிழமை இவர் கோலாலம்பூர் சென்றிருக்க வேண்டும். எஸ்.பி.எம் முடிந்ததும் இதற்காக பணம் சேர்ப்பதற்காக பகுதி நேரம் வேலைசெய்து வந்தார் என்று நவீனின் உறவினர் ஒருவர் தெரி வித்தார். நவீனின் தாயார் டி.சாந்தி (45) ஒரு தனித்து வாழும் தாய். சில ஆண்டுகளுக்கு முன்பு தன் கணவரிடமிருந்து பிரிந்து வாழும் இவர் தனியாக உழைத்து, நவீனையும் தன் மகளையும் காப்பாற்றி வருகிறார். இன்று தனது இரு கண்மணிகளில் ஒன்றை காப்பாற்றுவதற்காக இறைவனிடம் கையேந்தி நிற்கிறார் இந்தத் தாய். எப்போதும் கலகலப்பாக, மகிழ்ச்சியுடன் காணப்பட்ட நவீன் இன்று சுயநினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் கிடப்பதற்கு காரணம்? கடந்த வெள்ளிக்கிழமை இரவு நவீனும், அவனது நண்பர் பிரவீனும் வெளியில் சென்றிருந்தபோது ஏற்கெனவே அவர்களுக்கு பழக்கமான இரு நண்பர்கள் அவர்களை பகடிவதை புரிந்திருக்கின்றனர். டத்தோ ஹாஜி முகமட் நோர் அஹ்மட் இடைநிலைப் பள்ளி மாணவனான நவீன் அங்கு படிக்கும்போதே இதுபோன்று பகடிவதைக்கு ஆளாகி, தன் தாயாரிடமும் இது பற்றி கூறியிருக்கிறான். ஆனால், அவர்களுடன் வீண் பிரச்சினை வேண்டாம் என்று தன் தாய் கூறிய ஒரே வார்த்தைக்காக நவீன் பதில் பேசவில்லை. அந்த கொடூரக்காரர்கள் இதற்கு கொடுத்த பட்டம் கோழை என் பதும் பயந்தாங்கோலி என்பதும் தான். நவீனின் தாய் சாந்தி ஒரு முறை நவீனின் அந்த நண்பர்களை சந்தித்து தன் மகனை பகடிவதை செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், நவீனின் துரதிர்ஷ்டம்தான் கடந்த வெள்ளிக்கிழமை அவர்கள் இருவரையும் மீண்டும் நவீனை சந்திக்க வைத்தது. குளுகோர், தாமான் துன் சார்டோனில் ஒரு பர்கர் கடைக்கு வெளியே அந்த இருவரும் நவீனையும், பிரவீனையும் தாக்கியிருக்கின்றனர். தங்களது நண்பர்கள் மூவரையும் அங்கு வரவழைத்து ஐவரும் சேர்ந்து தலைக்கவசங் களால் அவர்களைத் தாக்கினர். எனினும், பிரவீன் தப்பித்துக்கொள்ள முடிந்தது. அவர்களின் கைகளில் சிக்கி நவீன் கடுமையான தாக்குதலுக்கு ஆளானதாக பினாங்கு போலீஸ் தலை வர் ஆணையர் சுவா கீ லாய் கூறினார்.நவீனை கடுமையாகத் தாக்கிய பிறகு, அவர்களில் ஒருவன் நவீனின் தாயாரை தொலைபேசியில் அழைத்து, வா, வந்து உன் மகனை அழைத்துச்செல் என்று கூறியிருக்கிறான். வெளியே வர பயந்த சாந்தி தனது சகோதரரை சென்று பார்க்கும்படி கூறியிருக்கிறார். நவீனின் மாமா வெளியே வந்ததும் அதிர்ந்து போனார். ஜாலான் காக்கி புக்கிட்டில் நவீன் சுயநினைவு இன்றி, ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்தார். நவீனை தாக்கியது போதாது என்று, அந்த ஆடவர்கள் தாமான் துன் சார்டோன் அடுக்ககத்தில் நவீனின் 16 வயது தங்கைக்காக காத்திருந்திருக்கின்றனர். அவரைக் கண்டதும், நீதான் அடுத்து என்று அவர்கள் கூச்சலிட்டிருக்கின்றனர். அவளும் பயத்தில் உறைந்து போனாள், உறவினர் ஒருவர் வரும்வரை வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்திருக்கிறார். இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக, ஐவர் கைது செய்யப்பட்டிருப்பதால் பொதுமக்களை பொறுமை காக்கும்படி ஆணையர் சுவா ஆலோசனை கூறி யுள்ளார். இதனிடையே, நவீன் மூன்று மாதங்களுக்கு முன்புதான் மூளையில் ஏற்பட்ட சிறிய கட்டிக்காக சிகிச்சை பெற்றிருந்தார் என நவீனின் மாமா எம்.வின்சண்ட் கூறினார். அதோடு வலிப்பு நோயினால் நவீன் பாதிக்கப்பட்டிருந்ததால் தாக்குதல் சமயத்தில் இதன் தாக்கம் மோசமாக இருந் திருக்கலாம் என்று நம்பப் படுகிறது. நவீனின் உடலின் பல இடங்களில் காயங்கள் காணப்பட்டன. முதுகில் தீக்காயங்கள் உள்ளன. அவரின் ஆசன வாய் ஆழமாக கிழிந்திருப்பதாக கூறிய மருத்துவர்கள் ஏதோ மழுங்கிய பொருள் திணிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் காணப்பட்டன என்றும் கூறியுள்ளனர். நவீனுக்கு உட்காயங்கள் கார ணமாக ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. மூளை செயலிழந்து விட்டதாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பினாங்கு மருத்துவமனை தீவிர கவனிப்பு பிரிவில் நவீன் தற்போது அனுமதிக் கப்பட்டுள்ளார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.

விசாரணைக் கூண்டில் அமர முடியாது

மேலும்
img
நஜீப்பிற்கும் ரோஸ்மாவுக்கும்  ஏஜெண்டாக செயல்பட்டவர் அஸிஸ்.

டத்தோஸ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம்

மேலும்
img
சுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு

மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான

மேலும்
img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img